Thursday, February 22, 2024
More
    HomeBlogCuet Exam - 'க்யூட் தேர்வு' - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

    Cuet Exam – ‘க்யூட் தேர்வு’ – விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்


    இளநிலை க்யூட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மார்ச் 30ம் தேதியுடன் முடிவடைந்தது.

    இந்த நுழைவுத் தேர்வுக்கு சுமார் 14 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.

    இந்தத் தேர்வுகள் மே மாதம் 21 முதல் 31ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதலாக 3 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.


    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘இளநிலை க்யூட் தேர்வுக்கு ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 9ம் தேதி) முதல் இணைய வழியில் விண்ணப்பிக்க முடியும். இதற்கான கால அவகாசம் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 11ம் தேதி) இரவு 11.59 மணியளவில் முடிவடைகிறது’ என்றனர்.

    தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇ ஆர்டி) பாடப்புத்தகங்கள் சீரமைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, நுழைவுத் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களிடையே குழப்பம் நீடித்து வருகிறது.

    இந்நிலையில், அறிவிக்கப்பட்ட தேர்வுக்கான பாடத்திட்டத் தின்படி தேர்வுகள் நடைபெறும். நுழைவுத்தேர்வு குறிப்பிட்ட பள்ளிக் கல்வி வாரியத்தில் பயிலும் மாணவர்களுக்கானது மட்டுமல்ல என தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
    Bharani
    Bharani
    Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

    2 COMMENTS

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    ×

    உங்களிடம் உள்ள PDF Files xerox போட்டு தரப்படும் (Whatsapp): +91 80720 26676

    × Xerox Shop [1 Page - 50p]