Wednesday, February 21, 2024
More
    HomeBlogஇந்திய ராணுவம் திருச்சிராப்பள்ளியில் ITI, 10th, 8th, Diploma படித்தவர்களுக்கு வேலை!

    இந்திய ராணுவம் திருச்சிராப்பள்ளியில் ITI, 10th, 8th, Diploma படித்தவர்களுக்கு வேலை!


    2023 -24ம் ஆண்டுக்கான அக்னிவீரர் தேர்வுக்கான அறிவிப்பை திருச்சிராப்பள்ளி ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இருந்து திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காலியிடங்கள்:

    இந்திய ராணுவத்தில் அக்னிவீரர் காலியிடங்கள் - திருமணமாகாத ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்

    மேற்படி, தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்வு முறை: ஆட்சேர்ப்பு இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படும். முதற் கட்டமாக ஆன்லைன் கணினி அடிப்படையிலான எழுத்துத் தேர்வு நடைபெறும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் ஆட்சேர்ப்பு பேரணிக்கு (Recruitment Rally) அழைக்கப்படுவர்கள்.

    ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை பிப்ரவரி 16ம் தேதி முதல் மார்ச் 15ம் தேதி (15.03.2023) வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சேர்ப்பு அறிவிப்பை இந்த இணைப்பில் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    சம்பளம்: தேர்வு செய்யப்படும் அக்னி வீரர்களுக்கு, அபாயம் மற்றும் சிரமப்படிகளுடன் ஈர்க்கும் வகையிலான மாதாந்திர ஊதியம் வழங்கப்படும்.

    4 ஆண்டு பணிக்காலம் முடிவடைந்ததும், அக்னி வீரர்களுக்கு சேவா நிதி என்ற ஒரே தடவையிலான தொகுப்பு வழங்கப்படும். அதில் அவர்களது பங்களிப்பு மற்றும் வட்டி ஆகியவை அடங்கும்.


    இந்திய ராணுவத்தில் அக்னிவீரர் காலியிடங்கள் - திருமணமாகாத ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்

    முதலாம் ஆண்டில் மாதாந்திர ஊதியமாக ரூ,30,000 நிர்ணயிக்கப்படும். அக்னி வீரர் தொகுப்பு நிதிக்கு ரூ.9,000 அளிக்கப்படும். எஞ்சிய ரூ.21,000 கையில் கிடைக்கும்.
    2-ம் ஆண்டில் ரூ.33,000, 3-ம் ஆண்டில் ரூ.36,500, 4-ம் ஆண்டில் ரூ.40,000 ஆக ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 30% பங்களிப்புத் தொகையாகப் பிடிக்கப்படும். எஞ்சிய 70% தொகை வழங்கப்படும். 4 ஆண்டுகளுக்குப் பின்னர் தொகுப்பு நிதியில் செலுத்தப்பட்ட ரூ.5.02 லட்சம் மற்றும் அரசு அளிக்கும் அதே தொகை சேர்த்து வட்டியுடன் சேவா நிதியாக ரூ.11.71 லட்சம் வீரர்களுக்கு வழங்கப்படும்.
    இந்த சேவா நிதிக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும். இதைத்தவிர பணிக்கொடை மற்றும் ஓய்வூதிய பயன்கள் அளிக்கப்பட மாட்டாது. அக்னி வீரர்களுக்கு பங்களிப்பு அல்லாத ஆயுள் காப்பீடு ரூ.48 லட்சத்துக்கு வழங்கப்படும்.

    Bharani
    Bharani
    Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

    1 COMMENT

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    ×

    உங்களிடம் உள்ள PDF Files xerox போட்டு தரப்படும் (Whatsapp): +91 80720 26676

    × Xerox Shop [1 Page - 50p]