தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் தேனி,திண்டுக்கல், கரூர் மாவட்டங்களை சேர்ந்த இளம் வேகப்பந்து, சுழற்பந்து வீச்சாளர்கள் தேர்வு செய்து மாநில, தேசிய அளவில் போட்டிகளில் பங்கு பெறும் வகையில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. திண்டுக்கலில் மார்ச் 11ல் வேகப்பந்து வீச்சாளர்களுக்கும், மார்ச் 12ல் சுழற்பந்து வீச்சார்கள் வீரர்கள் தேர்வு நடைபெற உள்ளது.
தேர்வில் பங்கேற்க விருப்பமுள்ள தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தங்களது இருப்பிட சான்று அல்லது ரேஷன் கார்டு, ஆதார் நகலோடு பிப்.26ல் தேனி பாரஸ் ரோடு, கே.ஆர்.ஆர்.நகர் மேனகா மில்ஸ் வலைபயிற்சி மைதானத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என தேனி மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். மேலும் தகவலுக்கு 98421 13434 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.
💎 Join Our Premium Group – Download PDFs Directly 📚
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
Add is repeated