தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் விதிகளின் படி 5 உறுப்பினர்களைக் கொண்ட மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையத்தில் மாவட்ட ஆட்சியர்கள் நியமனம் செய்யும் ஒரு வருவாய் கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் அலுவலர் ஆகியோர் குழு உறுப்பினர்களாக புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் கூட்டுறவு ரேசன் கடைகளுக்கான விற்பனையாளர் மற்றும் கட்டுநர் தேர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான 4000 இடங்கள் நிரப்ப பட உள்ளது.
கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னர் இத்தேர்வு நடவடிக்கைக்கு அதிக எண்ணிக்கையிலான நபர்கள் விண்ணப்பிக்கக் கூடும் என்பதால், தேர்வு நடவடிக்கைகளை எவ்வித புகாருக்கும் இடமின்றி நடத்துவதற்கு ஏதுவாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசுத்துறைகளும் ஒத்துழைப்பும் உதவிகளும் நல்கிட வேண்டும் என்றும், நேர்முகத் தேர்வு நடைபெறும் நாளில் நேர்முகத் தேர்வு மையத்திற்கு பாதுகாப்பு வசதி ஏற்படுத்திக் கொடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடத்திற்கு விண்ணப்பங்களை தகுந்த சான்றாவணங்களுடன் பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே பெறப்பட வேண்டும், தபாலிலோ அல்லது நேரடியாகவோ பெறப்படும். விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையமானது பொது விநியோகத்திட்டத்தின் கீழ் தற்போது காலிப்பணியிடம் ஏற்பட்ட நாளிலிருந்து பதிணைந்து நாட்களுக்குள்ளும் பின்னர் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு அத்தகைய காலிப்பணியிடம் ஏற்படக் கூடும் நாளில் இருந்து 90 நாட்களுக்கு முன்னரும் காலிப்பணி இடங்களுக்கான விவரங்களை எழுத்து மூலமாக சங்கங்களில் இருந்து பெற வேண்டும்.
மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையமானது அரசு பணியிடங்களுக்கு பின்பற்றப்படும் 200 புள்ளி இனச்சுழற்சி, இடஒதுக்கீட்டு விதிகள், முன்னுரிமை மற்றும் இதர நெறிமுறைகள் தொடர்பான நடைமுறையில் உள்ள அரசாணைகள், சட்டப் பிரிவுகள், விதிகள் ஆகியவற்றை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
நியாய விலைக்கடை விற்பனையாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி (பிளஸ்-2) பெற்றிருக்க வேண்டும். அல்லது இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும் என்றும், கட்டுநர் பணியிடத்திற்கு பள்ளி இறுதி வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி.) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram



Ponraj
Ponraj