TAMIL MIXER EDUCATION-ன் கல்வி செய்திகள்
தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க, திருத்திய வழிகாட்டு
முறைகள்
பள்ளிக்
கல்வித் துறை சார்பில்,
தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க,
திருத்திய வழிகாட்டு முறைகள்
வெளியிடப்பட்டுள்ளன.
தேர்வு
செய்யப்படும் ஆசிரியர்களின் பணி, நடத்தை திருப்தியாக இல்லையென்றால், உடனடியாக
பணியில் இருந்து விடுவிக்கப்படுவர்‘ என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஊராட்சி
ஒன்றியம், நகராட்சி, அரசு
தொடக்க, நடுநிலை, உயர்நிலை,
மேல்நிலைப் பள்ளிகளில் நடப்பு
கல்வியாண்டில், இடைநிலை,
பட்டதாரி, முதுகலை ஆசிரியர்
பணியிடங்கள் காலியாக உள்ளன.
இப்பணியிடங்களை நிரப்ப, 13 ஆயிரம் தற்காலிக
ஆசிரியர்களை தேர்வு செய்ய,
தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதற்கான வழிகாட்டு
நடைமுறைகள், ஜூன் 30ல்
வெளியிடப்பட்டன. தற்போது,
சென்னை உயர் நீதிமன்ற
இடைக்கால ஆணை அடிப்படையில், திருத்திய வழிகாட்டு முறைகள்
அறிவிக்கப்பட்டு உள்ளன.
விபரம்:
ஜூலை
1ம் தேதியில், ஊராட்சி
ஒன்றியம், நகராட்சி, அரசு
தொடக்க, நடுநிலை, உயர்நிலை,
மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக
உள்ள இடைநிலை, பட்டதாரி,
முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட வேண்டும்.
எழுத்துபூர்வமான விண்ணப்பங்களை, நேரடியாக
அல்லது ‘இ – மெயில்‘
வழியாக, உரிய கல்வித்
தகுதி சான்றுகளுடன், தொடர்புடைய மாவட்டக் கல்வி அலுவலர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.பள்ளி
வாரியாக காலியாக உள்ள
பணியிட விபரங்களை, மாவட்டக்
கல்வி அலுவலக அறிவிப்பு
பலகையில் ஒட்ட வேண்டும்.
விண்ணப்பதாரர்கள், 4ம் தேதி முதல்,
6ம் தேதி மாலை
5:00 மணிக்குள் மாவட்டக் கல்வி
அலுவலர் அல்லது வட்டாரக்
கல்வி அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
தகுதி:
இடைநிலை
ஆசிரியர் பணிக்கு, ஆசிரியர்
தகுதித் தேர்வுத் தாள்
– 1; பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு,
ஆசிரியர் தகுதித் தேர்வுத்
தாள் – 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுகலை ஆசிரியர்
பதவிக்கு, ஏற்கனவே வரையறுக்கப்பட்டுள்ள கல்வித் தகுதிகள்
பொருந்தும்.
விண்ணப்பங்கள், கல்விச் சான்றுகளை ஆராய,
சம்பந்தப்பட்ட பள்ளித்
தலைமை ஆசிரியர், உதவி
தலைமை ஆசிரியர், மூத்த
ஆசிரியர் அடங்கிய குழு
அமைத்து, தகுதியானவர்களை கண்டறிய
வேண்டும். அவர்களை வகுப்பறையில் பாடம் நடத்த அறிவுறுத்தி, அவர்கள் திறனை அறிய
வேண்டும்.
தொடக்கக்
கல்வித் துறையை பொறுத்தவரை, பள்ளித் தலைமை ஆசிரியர்,
குறுவள மைய, வட்டார
வள மைய மேற்பார்வையாளர், வட்டாரக் கல்வி அலுவலர்
ஆகியோர் அடங்கிய குழு,
தற்காலிக ஆசிரியர்களை தேர்வு
செய்யும்.தேர்வு செய்யப்பட்ட தற்காலிக ஆசிரியர்கள் குறித்த
விபரங்களை, பள்ளி வாரியாகவும், பதவி வாரியாகவும், பாட
வாரியாகவும் தயார் செய்து,
தேர்வுக் குழு உறுப்பினர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் கையொப்பத்துடன், தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
தற்காலிக
ஆசிரியர்களுக்கு தனி
வருகைப்பதிவேடு, மதிப்பூதியம் வழங்கப்பட்டதற்கான பதிவேடு
பராமரிக்கப்பட வேண்டும்.
இந்நியமனம் முற்றிலும் தற்காலிகமானது.முறையான
நியமனங்கள் வழியே, காலிப்
பணியிடம் பூர்த்தி செய்யப்படும் அன்றே, தற்காலிகமாக பணி
அமர்த்தப்பட்டவர் விடுவிக்கப் படுவார்.அவர்கள் பணி,
நடத்தை திருப்தியாக இல்லையெனில், உடனடியாக பணியில் இருந்து
விடுவிக்கப்படுவர்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here