பிரதமரின் நிதி
திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு அழைப்பு
– ராஜபாளையம்
ராஜபாளையம் வேளாண் உதவி இயக்குனர் தனலட்சுமி செய்தி குறிப்பு:
ராஜபாளையம் வட்டாரத்தில் மே
1 வரை கிராமங்களில் விவசாயிகளுக்கான கடன் அட்டைகள் முகாம்
நடைபெறும்.இதில் விண்ணப்பங்கள் பெற்று பிரதம மந்திரி
விவசாயிகள் கவுரவ நிதி
திட்டத்தில் பயன்பெற வேண்டும்.
கடன்
அட்டை பெற புகைப்படம், ஆதார் அட்டை நகல்,
ரேஷன் கார்டு நகல்,
10 /1 அடங்கல், அலைபேசி எண்
ஆகியவற்றுடன் விவசாய
கடன் அட்டைக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தர
கேட்டுக் கொள்ளப்படுகிறது.மேலும்,
விவரங்களுக்கு தங்கள்
பகுதி உதவி வேளாண்
அலுவலர்களை தொடர்பு கொள்ள
வேண்டும்.