HomeBlogஇஸ்ரோவின் இளம் விஞ்ஞானி பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

இஸ்ரோவின் இளம்
விஞ்ஞானி பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

பள்ளி
மாணவர்களுக்கான யுவிகா
இளம் விஞ்ஞானி திட்டப்
பயிற்சி முகாம் மே
16
முதல் 28ம் தேதி
வரை நடத்தப்படும்.

பள்ளி
மாணவர்களிடம் விண்வெளி
அறிவியல் குறித்த ஆர்வத்தை
உருவாக்கும் நோக்கில் யுவிகா
என்ற இளம் விஞ்ஞானி
திட்டத்தை இந்திய விண்வெளி
ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ)
கடந்த 2019ம் ஆண்டு
அறிமுகம் செய்தது.

இத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு செய்முறை
விளக்கப் பயிற்சிகள் வழங்கப்படும். விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடும் வாய்ப்பும் கிடைக்கும். இதற்காக
ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும்
தலா 3 அல்லது 4 பேர்
என மொத்தம் 150 மாணவர்கள்
தேர்வு செய்யப்படுவார்கள்.

இதற்கிடையே, கரோனா பரவல்காரணமாக கடந்த
2
ஆண்டுகளாகயுவிகா பயிற்சி
முகாம் நடத்தப்படவில்லை. தற்போது
கரோனா தாக்கம் குறைந்துள்ளதால் இந்த ஆண்டில் யுவிகா
பயிற்சி முகாம் நடத்த
இஸ்ரோ முடிவு செய்துள்ளது.

கடைசி நாள்: April 10

அதன்படி,
இஸ்ரோவின் 4 மையங்களில் மே
16
முதல் 28-ம் தேதி
வரை மாணவர்களுக்கான பயிற்சி
முகாம் நடைபெற உள்ளது.
இதற்கான விண்ணப்ப பதிவு
தற்போது தொடங்கியுள்ளது. பள்ளியில்
9
ம் வகுப்பு படிக்கும்
மாணவர்கள் மட்டுமே இதற்கு
விண்ணப்பிக்க முடியும்.

விருப்பம்
உள்ளவர்கள் www.isro.gov.in
என்ற இணையதளம் மூலமாக
ஏப் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
பயிற்சிக்கு தேர்வாகும் மாணவர்கள்
பட்டியல் April 20ம்
தேதி வெளியிடப்படும். இதுதொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால்
080 2217 2119
என்ற தொலைபேசி எண்
அல்லது yuvika@isro.gov.in
மின்னஞ்சல் வழியாக தொடர்பு
கொள்ளலாம்.

Details: Click
Here

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular