Join Whatsapp Group

Join Telegram Group

நாட்டுக்கோழி மூலமும் லாபம் ஈட்டலாம்

By admin

Updated on:

நாட்டுக்கோழி மூலமும் லாபம் ஈட்டலாம் 

கட்டமைப்பு செலவு:

கோழி
வளர்ப்புக்கு கொட்டகை
அமைப்பு முக்கியச் செலவு.
பொதுவாக நாட்டுக் கோழிகளை
வளர்க்க கீற்றுக் கொட்டகையே
போதும்.

1 கோழிக்கு
1
சதுர அடி என்ற
அளவில் 50 கோழிகளுக்கு 50 சதுர
அடி கொட்டகை அமைக்கலாம். கொட்டகையின் நீள அகல
உயரம் முறையே 10 அடி
5
அடி 12 அடி கொண்டதாக
இருக்க வேண்டும்.

தற்போது
சித்து நாட்டுக் கோழிகள்
வளர்ப்பு அதிகளவில் காணப்படுகிறது. சுத்தமான நாட்டுக் கோழிகளான
சிறுவிடை கோழிகள் அல்லது
சித்துக்கோழிகளின் விலை
சற்று அதிகம்.

ஆனால்
இவற்றின் சுவையும் அதிகம்.
வளர்த்து விற்பனை செய்யும்
போது நல்ல விலைக்கு
போகும்.

கோழிகளை
வாங்கும் போது அனுபவமுள்ள கோழி வளர்ப்பாளர்களை

அழைத்துச் சென்று
அல்லது மருத்துவர்களின் வழிகாட்டுதலின்படி கோழிகளை வாங்கி
வரலாம்.

குஞ்சுகள் பெருக்கம்:

புறக்கடை
முறையில் 50 குஞ்சுகளை வாங்கி
வளர்க்கும் போது அவை
ஒரு கட்டத்தில் அடைகாத்து
குஞ்சு பொரிக்கும். 50 கோழிகளை
வளர்க்கும் நிலையில் அவை
அனைத்தும் சேர்த்து ஆண்டிற்கு
10
முதல் 15 முறை குஞ்சு
பொரிக்கும்.

முறையாக
பராமரித்தால் 30 முதல்
35
எண்ணிக்கை வரை அடைகாக்கும் திறன் இருக்கும்.

25 கோழிகள்
அடைகாத்து கோழிக்கு 8 குஞ்சுகள்
என்ற எண்ணிக்கையில் பொரிக்கப்படுவதாக வைத்துக் கொண்டால்
ஆண்டுக்கு இதன் மூலம்
200
குஞ்சுகள் கிடைக்கும்.

இதன்
மூலம் 70000 வரை வருமானம்
ஈட்டலாம்.

சரியான பராமரிப்பு:

நாட்டுக்கோழிகளை எந்த அளவுக்கு சரியாக
பராமரிக்கிறோமோ அந்த
அளவுக்கு அதில் லாபமும்
அதிகம்.

கோழிகளை
ஈரம் இல்லாத கொட்டகையில் வளர்த்தல், நோயுற்ற கோழிகளை
மற்ற கோழிகளில் இருந்து
உடனே பிரித்து விடுதல்,
சரிவிகித தீவனம் அளித்தல்,
சுத்தமான தண்ணீரை அளித்தல்
உள்ளிட்ட சரியான பராமரிப்பு உத்திகளால் நாட்டுக்கோழிகளை நோய்
தாக்கப்படாமலும் இறப்பு
ஏற்படாமலும் பாதுகாக்கலாம். கோழிகளை
வளர்ப்போருக்கு இழப்பும்
ஏற்படாமல் தடுக்கப்பட்டு லாபமும்
கிடைக்கும்.

சுய தொழில் துவங்க வாழ்த்துக்கள். பதிவை அனைவருக்கும் ஷேர் செய்தால் யாரோ ஒருவருக்கு உதவும் என்பதை நம்புகிறோம்.

Related Post

1 thought on “நாட்டுக்கோழி மூலமும் லாபம் ஈட்டலாம்”

Leave a Comment

× Xerox [50p Only]