HomeExam DetailsBank Exam DetailsSBI Exam (SBI SO) பற்றிய முழு விபரம்
- Advertisment -

SBI Exam (SBI SO) பற்றிய முழு விபரம்

SBI Exam (SBI SO)

SBI Exam (SBI SO) பற்றிய
முழு விபரம்

தேர்வு வாரியம்:
பாரத் ஸ்டேட் வங்கி
(SBI)

தேர்வின் பெயர்: SBI Exam (SBI SO)

பணியின் பெயர்:

  • சிறப்பு மேலாண்மை
    நிர்வாகி (Special Management Executive)
  • துணை பொது
    மேலாளர் சட்டம், ஒப்பந்தம்
    (Deputy General Manager Contractual)
  • துணை பொது
    மேலாளர் சட்டம் (Deputy General
    Manager – Law)
  • துணை மேலாளர்
    சட்டம் (Deputy Manager – Law)

தேர்வு செய்யப்படும் முறை:

பணி
எண் 1, 2, 3:

கல்வித்தகுதி மற்றும் நேர்முகத் தேர்வு
மூலம் தகுதியானவர்கள் தேர்வு
செய்யப்படுவார்கள்.

பணி
எண் 4 :

ஆன்லைன்
தேர்வு மற்றும் நேர்முகத்
தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தகுதி:

பணி எண்
1:

நிதித் துறையில் CA/ ICWA/ ACS/ MBA
பட்டம் அல்லது AICTE / அரசு
நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழத்தில் நிதித்துறையில் முழு நேர முதுகலை
டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.

பணி எண்
2:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் சட்டத் துறையில்
(3
ஆண்டுகள் / 5 ஆண்டுகள்) பட்டம்
பெற்றிருக்க வேண்டும்.

பணி எண்
3:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் சட்டத் துறையில்
(3
ஆண்டுகள் / 5 ஆண்டுகள்) பட்டம்
பெற்றிருக்க வேண்டும். சட்டப்படிப்பில் முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

பணி எண்
4:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் சட்டத் துறையில்
(3
ஆண்டுகள் / 5 ஆண்டுகள்) பட்டம்
பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம்:

பணி எண்
1:

ஸ்ஷெடுயூல்ட் கமர்ஷியல்
வங்கி அல்லது அதன்
கூட்டுறவு அல்லது துணை
நிறுவன வங்கி அல்லது
பொதுத்துறை அல்லது பட்டியலிடப்பட்ட நிதி நிறுவனங்களில் மேலாண்மை
/
முகாமைத்துவ பதவியில் குறைந்தபட்சம் ஐந்து வருட பணி
அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும், கடன் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் அனுபவம்
உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்

பணி எண்
2, 3:

பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்திருக்க வேண்டும்
மற்றும் குறைந்தது 17

வருடம் சட்ட
அலுவலராக திட்டமிடப்பட்ட வணிக
வங்கிகளிலும் அல்லது
நிதி நிறுவனங்கள் அல்லது
சொத்து மறுசீரமைப்பு நிறுவனத்தில் பணிபுரிந்திருக்க வேண்டும்.

அல்லது

ஸ்ஷெடுயூல்ட் கமர்ஷியல் பேங்க் மற்றும்
சொத்து புனரமைப்பு நிறுவனங்களின் சட்ட துறையில் சட்ட
அலுவலராகவும், மீட்பு
மற்றும் மறுவாழ்வு மையங்களிலும் ஒருங்கிணைந்த அனுபவம்
பெற்றிருக்க வேண்டும்.

இந்த
அனுபவம் பார் கவுன்சில்
ஒரு வழக்கறிஞராக பதிவு
செய்த பிறகே இருக்க
வேண்டும்.

பணி எண்
4:

பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்திருக்க வேண்டும்
மற்றும் குறைந்தது 4 வருடம்
வழக்கறிஞராக அல்லது சட்ட
அலுவலராக திட்டமிடப்பட்ட வணிக
வங்கிகளில் பணிபுரிந்திருக்க வேண்டும்.

அல்லது

வழக்கறிஞராகவும் திட்டமிட்ட வணிக வங்கிகளில் சட்ட அலுவலராகவும் நான்கு
வருடம் ஒருங்கிணைந்த அனுபவம்
பெற்றிருக்க வேண்டும்.

இந்த
அனுபவம் பார் கவுன்சில்
ஒரு வழக்கறிஞராக பதிவு
செய்த பிறகே இருக்க
வேண்டும்.

வயது:

பணி 1. 30 முதல்
40
ஆண்டுக்குள் இருக்கவேண்டும்.

பணி 2. 42 முதல்
52
ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.

பணி 3. 42 முதல்
52
ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.

பணி 4. 25 முதல்
35
ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.

(குறிப்பு: வயது
வரம்பில் விண்ணப்பதாரர்களின் பிரிவு
அடிப்படையில் தளர்வு
அளிக்கப்படும்.)

ஊதிய அளவு:

பணி
1.
ரூ. 18 லட்சம் (ஆண்டு
வருமானம்)

பணி
2.
ரூ. 47 லட்சம் (ஆண்டு
வருமானம்)

பணி
3.
ரூ. 40.20 லட்சம் (ஆண்டு
வருமானம்)

பணி
4.
ரூ. 15.10 லட்சம் (ஆண்டு
வருமானம்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -