IBPS Exam (IBPS SO) பற்றிய
முழு விபரம்
தேர்வு வாரியம்:
வங்கி பணியாளர் தேர்வு
வாரியம் (IBPS)
தேர்வின் பெயர்: IBPS Exam (IBPS
SO)
பணியின் பெயர்:
- ஐடி அதிகாரி
(IT Officer (Scale-I)) - வேளாண்மை கள
அதிகாரி (Agriculture Field Office (Scale –
I)) - சட்ட அலுவலர்
(Law Officer (Scale – I)) - ஆட்சி மொழி
அதிகாரி (Rajbhasha Adhikari (Scale-I)) - மனிதவள அதிகாரி
(HR Officer (Scale-I)) - சந்தைபடுத்துதல் அதிகாரி
(Marketing Officer (Scale-I))
தகுதி:
ஐடி அதிகாரி (IT Officer (Scale-I)): நான்கு ஆண்டுகள்
கொண்ட பொறியியல் / தொழில்நுட்ப பட்டம் / கம்ப்யூட்டர் சயின்ஸ்
/ ஐடி / கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் / எலக்ட்ரானிக்ஸ் அண்ட்
கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் / எலக்ட்ரானிக்ஸ் அண்ட்
டெலிகம்யூனிஷன் / எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ரூமென்டேஷன் பட்டங்களில் ஏதேனும் ஒரு பட்டம்
பெற்றிருக்க வேண்டும்.
(அல்லது)
கம்ப்யூட்டர் சயின்ஸ்
/ ஐடி / கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் / எலக்ட்ரானிக்ஸ் அண்ட்
கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் / எலக்ட்ரானிக்ஸ் அண்ட்
டெலிகம்யூனிஷன் / எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ரூமென்டேஷன் படிப்புகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பட்டதாரிகள் DOEACC B நிலை தேர்வில்
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வேளாண்மை கள அதிகாரி
(Agricultural Field Officer (Scale-I)): நான்கு ஆண்டுகள்
கொண்ட வேளாண்மை / தோட்டக்கலை / கால்நடை வளர்ப்பு / கால்நடை
அறிவியல் / பால் விஞ்ஞானம்
/ வேளாண்மை பொறியியல் / மீன்வள
அறிவியல் / மீன்வளர்ப்பு / வேளாண்
விற்பனை மற்றும் கூட்டுறவு
/ கூட்டுறவு மற்றும் வங்கி
/ வேளாண் வனவியல் பட்டத்தை
முடித்திருக்க வேண்டும்.
சட்ட அலுவலர் (Law Officer (Scale-I)): சட்டப்படிப்பில் இளங்கலைப்
பட்டமும் பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்திருக்க வேண்டும்.
ஆட்சி மொழி அதிகாரி
(Rajbhasha Adhikari (Scale-I)): ஹிந்தி மொழியில்
முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் இளங்கலை
அல்லது முதுகலைப்பட்டத்தில் ஆங்கில
பாடத்தை கட்டாயம் கொண்டிருக்க வேண்டும்.
அல்லது
சமஸ்கிருத மொழியில்
முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் இளங்கலை
அல்லது முதுகலைப்பட்டத்தில் ஆங்கில
மற்றும் ஹிந்தி பாடத்தை
கட்டாயம் கொண்டிருக்க வேண்டும்.
மனிதவள அதிகாரி (HR Officer (Scale-I)): பணியாளர் மேலாண்மை
/ தொழிற்துறை உறவு / HR / HRD / சமூக
வேலை / தொழிலாளர் சட்டம்
ஆகிய பட்டங்களில் ஏதேனும்
ஒரு பட்டப்படிப்பு மற்றும்
முழுநேர பட்டதாரி பட்டமும்
அல்லது முழு நேர
டிப்ளமோ பட்டமும் பெற்றிருக்க வேண்டும்.
சந்தைபடுத்துதல் அதிகாரி (Marketing Officer (Scale-I)): மார்க்கெட்டிங் துறையில்
பட்டம் மற்றும் முழுநேர
எம்.எம்.எஸ்
(மார்கெட்டிங்) / எம்.பி.ஏ
(மார்க்கெட்டிங்) | முழு
நேர PGDBM | சந்தைபடுத்துதல் பாடத்தை பிரதானமாக கொண்ட
PGDBM படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயது: 20 முதல்
30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
(குறிப்பு: விண்ணப்பதாரர்களின் பிரிவு
அடிப்படையில் தளர்வு
அளிக்கப்படும்.)
ஊதிய அளவு: ரூ.
23700 – ரூ. 42000 (மாதம்)