TNPSC – Tamil Nadu Labour Service பற்றிய
முழு விபரம்
தேர்வு வாரியம்:
தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையம் (TNPSC)
தேர்வின் பெயர்: Tamil Nadu Labour
Service
பணியின் பெயர்: தொழிலாளர்
உதவி ஆணையாளர் (Assistant
Commissioner of Labour Formerly named as Labour Officer)
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத்
தேர்வு (Written Exam)
வாய்மொழித் தேர்வு (Oral Test)
தகுதி: தொழிலாளர் மேலாண்மை
துறையில் தமிழ்நாடு தொழிற்கல்வி ஆய்வு நிறுவனத்தில் பட்டம்
பெற்றிருக்க வேண்டும் / ஏதேனும்
துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் / சமூக வேலை
அல்லது சமூக அறிவியல்
அல்லது தொழிலாளர் உறவுகள்
அல்லது சமூக நலன்
ஆகிய துறைகளில் பட்டம்
பெற்றிருக்க வேண்டும் / சமூக
வேலை அல்லது சமூக
அறிவியல் அல்லது தொழிலாளர்
உறவுகள் அல்லது சமூக
நலன் ஆகிய துறைகளில்
டிப்ளோமா பிரிவில் பயின்றிருக்க வேண்டும் / தொழிலாளர் சட்டங்கள்
துறையில் டிப்ளோமா பிரிவில்
பயின்றிருக்க வேண்டும்
/ தொழிலாளர் சட்டங்கள் மற்றும்
நிர்வாக சட்டங்கள் ஆகிய
துறையில் டிப்ளோமா பிரிவில்
பயின்றிருக்க வேண்டும்
/ சட்டம் பயின்றிருக்க வேண்டும்
/ தமிழ்நாடு தொழிற்கல்வி ஆய்வு
நிறுவனத்தில் தொழிலாளர்
நிர்வாகம் துறையில் முதுகலை
பட்டதாரி டிப்ளோமா பயின்றிருக்க வேண்டும் / பணியாளர் மேலாண்மை,
தொழில் உறவுகள் மற்றும்
தொழிலாளர் நலன் ஆகிய
துறையில் முதுகலை பட்டதாரி
டிப்ளோமா பிரிவில் பயின்றிருக்க வேண்டும் / பணியாளர் மேலாண்மை
மற்றும் தொழில்துறை உறவுகள்
ஆகிய துறைகளில் மதுரை
சமூக பணி நிறுவனத்தில் பயின்றிருக்க வேண்டும்
/ வேலை கல்வி துறையில்
முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 30 வயதிற்குள் இருக்க
வேண்டும். (குறிப்பு: வயது
வரம்பில் விண்ணப்பதாரர்களின் பிரிவு
அடிப்படையில் தளர்வு
அளிக்கப்படும்.)
ஊதியளவு: ரூ. 56100 – ரூ.
177500 (மாதம்)