HomeBlogJEE MAINS தேர்வுகள் ஒத்திவைப்பு – தேசிய தேர்வு முகமை

JEE MAINS தேர்வுகள் ஒத்திவைப்பு – தேசிய தேர்வு முகமை

JEE MAINS தேர்வுகள்
ஒத்திவைப்புதேசிய தேர்வு
முகமை

நாடு
முழுவதும் உள்ள மத்திய
கல்வி நிறுவங்களின் பொறியியல்
படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுகள் (JEE – MAIN) ஆண்டு
தோறும் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி மாணவர்களுக்கான இந்த
ஆண்டு நடத்தப்பட வேண்டிய
JEE – MAINS
நுழைவுத்தேர்வுகள் ஏப்ரல்
மாதம் 27, 28, 30 ஆகிய
தேதிகளில் நடத்தப்பட இருந்தது.

நாடு
முழுவதும் கொரோனா பரவல்
இரண்டாம் அலையை எதிர்கொண்டு வருகிறது. ஒவ்வொரு நாளும்
நோய்பாதிப்புக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கை லட்சங்களை
தாண்டி வருகிறது. மாணவர்களுக்கான தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆண்டுதோறும் பொறியியல் மாணவர்களுக்காக நடத்தப்படும் JEE – MAINS ஆகிய
நுழைவுத்தேர்வுகளை ஒத்தி
வைப்பதாக தேசிய தேர்வு
முகமை அறிவித்துள்ளது. இது
குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தேசிய தேர்வு முகமை
நடத்தும் JEE – MAINS தேர்வுகளுக்கான நான்கு அமர்வுகளில் இரண்டு
அமர்வுகள் பிப்ரவரி மற்றும்
மார்ச் மாதங்களில் நடந்து
முடிந்துள்ளது. இந்த
இரண்டு அமர்வுகளிலும் சேர்த்து
மொத்தம் 11 லட்சம் மாணவர்கள்
கலந்து கொண்டனர். இதன்
படி நுழைவுத்தேர்வுக்கான ஏப்ரல்
மாத அமர்வு தேதிகள்
27, 28, 30
என அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போதுள்ள கொரோனா சூழலை கருத்தில்
கொண்டு மாணவர்களுக்கான JEE தேர்வுகள்
ஒத்தி வைக்கப்படுகிறது. தேர்வுகள்
நடைபெறும் தேதிகள் குறித்த
அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் அல்லது தேர்வு நடைபெறும்
15
நாட்களுக்குள்ளாக அறிவிக்கப்படும். இந்த நாட்களை மாணவர்கள்
தேர்வுக்காக பயன்படுத்தும் படி
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தொடர்ந்து
மாணவர்கள் JEE தேர்வுக்கான www.nta.ac.in மற்றும் https://jeemain.nta.nic.in/ என்ற
அதிகாரபூர்வ இணையதளத்தையும், 011-40759000 என்ற
தொலைபேசி எண்ணையும், jeemain@nta.ac.in என்ற
மின்னஞ்சலை அடிக்கடி பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular