தமிழகத்தில் தட்டச்சு,
சுருக்கெழுத்து, கணக்கியல்
தேர்வுகள் – தேர்வு அட்டவணை
வெளியீடு
தொழிநுட்ப
கல்வி இயக்கத்தின் கீழ்
தமிழகத்தில் மொத்தம் 3500க்கு
மேற்பட்ட வணிகவியல் பயிலகங்கள் (தட்டெழுத்து மற்றும் சுருக்கெழுத்து) செயல்பட்டு வருகின்றன.
இந்த
தேர்வுகள் ஆகஸ்ட் மாதம்
நடத்தப்படும். 2020-ஆம்
ஆண்டு கொரோனா காரணமாக
தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல்
படிப்புகளுக்கான தேர்வுகள்
நடத்தப்படவில்லை.
இந்நிலையில் தற்போது அந்த படிப்புகளுக்கான தேர்வுகான அட்டவணையை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 10 ஆம்
தேதி முதல் இந்த
தேர்வுகள் தொடங்கப்பட்டு ஏப்ரல்
25-ஆம் தேதி வரை
நடைபெற உள்ளது. தட்டச்சு
ஜுனியர் கிரேடு தேர்வுகள்
5 பேட்ச்களாகவும், சீனியர்
கிரேடு தேர்வுகள் 4 பேட்ச்களாகவும் நடத்தப்படுகிறது.
இந்த
தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க மார்ச் மாதம் 26-ஆம்
தேதி கடைசி தேதி
ஆகும். இந்த விண்ணப்பங்களை http://www.tndte.gov.in/
என்ற தொழில்நுட்ப கல்வி
இயக்ககத்தின் இணையதளம்
மூலமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். என தொழில்நுட்பத் தேர்வுகள்
தேர்வு வாரியத்தின் தலைவரும்,
மாநில தொழில்நுட்பக் கல்வி
இயக்குநருமான கே.விவேகானந்தன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.