ரயில்வே ஆட்சேர்ப்பு கட்டுப்பாட்டு வாரியம் என்பது மத்திய அரசின் இரயில்வே அமைச்சகத்தின் கீழ் இந்திய ரயில்வேயில் உள்ள குரூப் C மற்றும் குரூப் D அல்லாத சிவில் சர்வீஸ் மற்றும் இன்ஜினியரிங் பணியிடங்களுக்கான நியமனம் செய்யும் ஆணையம் ஆகும். அதில், NTPC என்பது, தொழில்நுட்பமற்ற பிரிவுகளுக்கான பணியிடங்கள் ஆகும். இந்த பணியிடங்களை நிரப்ப கடந்த டிசம்பர் 28, 2020 முதல் ஜூலை 31, 2021 வரை நடைபெற்ற முதல் நிலை கணினி அடிப்படையிலான தேர்வுகளின் விடைகள் ஆகஸ்ட் 16, தேதி வெளியிட்டுள்ளது.
இந்த விடைகளை விண்ணப்பதாரர்கள் rrbcdg.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். இந்த பதில்களில் ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் அதனை, ஆகஸ்ட் 18, இரவு 8 மணி முதல் தெரிவிக்கலாம். கருத்து தெரிவிப்பதற்காக இணையதளம் மற்றும், ஆன்லைன் கட்டணத்திற்கான அவகாசம் ஆகஸ்ட் 23 அன்று இரவு 11:59 மணிக்கு மூடப்படும். ஒரு கேள்விக்கு ஆட்சேபனையை எழுப்புவதற்கு ரூ 50 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் அதிக தகவல்களை அறிந்து கொள்ள RRB இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகலாம்.
Answer Key 2021 – Click Here
NTPC Objection Link – Notice – Click Here
Official Site: Click Here