5446 காலிப்பணியிடங்கள் கொண்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 2/2ஏ நிலைகளுக்கான தேர்வு கடந்த மே மாதம் 21ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வில், மாநிலம் முழுவதும் 9 லட்சத்து 95 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டார்.
இந்நிலையில், கடந்த 8ம் தேதி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களின் பட்டியலை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. 58081 பேர் முதன்மைத் தேர்வுக்கு தகுதியானவர்கள் என்று அறிவிக்கப்பட்டனர்.
குரூப் 2/2ஏ காலிப்பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வு (மெயின்ஸ் தேர்வு) 2023, பிப்ரவரி மாதம் 25ம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகல் என இரண்டு ஷிப்ட்களாக நடைபெற உள்ளது.
இந்த முதன்மைத் தேர்வு எழுதுவதற்கு தனியாக தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும். முன்னதாக, 8ம் தேதி வெளியான தேர்வு முடிவில், முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் ரூ.200 செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது இந்த தேர்வுக் கட்டணத்தில் சில திருத்தங்களை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அறிவித்துள்ளது. புதிய அறிவிப்பின் படி, முதன்மைத் தேர்வுக்கு தேர்வுக்கு கட்டணமாக ரூ.150 மட்டுமே செலுத்தினால் போதுமானது என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. எனவே, முதல்நிலைத் தேர்வில் தகுதி பெற்ற தேர்வர்கள் இந்த அறிவிப்பைக் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.