சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் முதலமைச்சர் கணினி தமிழ் விருது வழங்கப்படுகிறது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இந்த விருதுக்கு வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கேற்ப, உலகமெலாம் கணினி வழித் தமிழ் மொழி பரவச் செய்யும் வகையில் கணினித் தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக முதலமைச்சர் கணினித் தமிழ் விருது என்ற பெயரில் விருது வழங்கப்பட்டு வருகிறது. விருது பெறுபவருக்கு விருதுத் தொகையாக ரூபாய் 2 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படுகிறது.
விண்ணப்பப் படிவம்
விண்ணப்பங்கள்: முதலமைச்சர் கணினித் தமிழ் விருது முதலமைச்சர் கணினித் தமிழ் விருது2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அவ்வகையில் 2021ஆம் ஆண்டுக்குரிய முதலமைச்சர் கணினித் தமிழ் விருதுக்கு மென்பொருள்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலனையில் உள்ளது.
மேலும் 2021ஆம் ஆண்டுக்கு கூடுதல் விண்ணப்பங்களும், 2022ஆம் ஆண்டுக்கு தனியர் மற்றும் நிறுவனத்திடமிருந்து, தமிழ் வளர்ச்சிக்கான மென்பொருள்கள் விண்ணப்பங்களும் வரவேற்கப்படுகின்றன.
நிபந்தனைகள்: விருதுக்கு அனுப்பப்படவுள்ள மென்பொருள்கள் 2018, 2019, 2020, 2021 ஆம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப முகவரி: இவ்விருதுக்குரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளைத் தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத் தளத்தில் (https://tamilvalarchithurai.tn.gov.in/) இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.