HomeBlogகுரூப்-2 தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்பு-சிவந்தி அகாடமி
- Advertisment -

குரூப்-2 தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்பு-சிவந்தி அகாடமி

குரூப்-2 தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்பு-சிவந்தி அகாடமி

குரூப்-2 தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்பு-சிவந்தி அகாடமி
திருச்செந்தூர் சிவந்தி அகாடமி சார்பில், குரூப்-2 தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2 தேர்வை சிறப்பாக எழுத உதவும் வகையில், திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன.

குரூப்-2 தேர்வை எழுத பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் ஆன்லைன் மூலமாக வருகிற 30-ம் தேதியில் இருந்து வருகிற மார்ச் மாதம் 30-ம் தேதி வரை தினமும் 3 மணி நேரம், திருச்செந்தூர் சிவந்தி அகாடமி நடத்த உள்ளது. இந்த பயிற்சி, தமிழ் மொழி வாயிலாக வழங்கப்படும். பயிற்சி கட்டணம் ரூ.8 ஆயிரம் ஆகும். 
பயிற்சி வகுப்பில் சேர விரும்புகிறவர்கள், ஒரு வெள்ளைத்தாளில் புகைப்படம் ஒட்டி, பெயர், பின்கோடுடன் முகவரி, தொலைபேசி எண், இ-மெயில் ஆகியவற்றை எழுதி, அத்துடன் ரூ.8 ஆயிரத்துக்கான வங்கி வரைவோலையை (கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி) சிவந்தி அகாடமி, திருச்செந்தூர் என்ற பெயரில் எடுத்து, ‘வந்தி அகாடமி, தூத்துக்குடி ரோடு, திருச்செந்தூர்-628216, தூத்துக்குடி மாவட்டம்’ என்ற முகவரிக்கு வருகிற 23-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

பயிற்சிக்கான கட்டணம் எக்காரணம் கொண்டும் திருப்பி தரப்பட மாட்டாது. மேலும் விவரங்களுக்கு 04639-242998, 94420 55243, 86829 85148 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

        LEAVE A REPLY

        Please enter your comment!
        Please enter your name here

        - Advertisment -