IBPS தேர்வு வாரியம் மூலமாக சமீபத்தில் Specialist Officer (SO) பதவிக்கு அறிவிப்பு வெளியானது. மொத்தம் 1828 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கு பதிவு செய்தவர்களுக்கு முதற்கட்ட மற்றும் முதன்மை தேர்வுகள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தற்போது முதற்கட்ட (Prelims) தேர்வு வரும் 26.12.2021 அன்று நடைபெறவுள்ளது.
தற்போது அதற்கான தேர்வு நுழைவுச்சீட்டு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதனை கீழே உள்ள இணைய முகவரி மூலம் 26.12.2021 அன்று வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இதில் தேர்ச்சி பெறுவோருக்கு அடுத்த கட்டமாக முதன்மை (Mains) தேர்வு 30.01.2022 அன்று நடைபெற உள்ளது.