காப்பீடு நிறுவனமான எல்.ஐ.சியில் பல வகையான சேமிப்பு, முதலீடு, காப்பீடு திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. அதில் ஒன்றுதான் ஜீவன் தருண் பாலிசி . இந்த திட்டத்தில் குழந்தைகள் பிறந்த 90 நாள் முதல் 12 வயதுக்குள் முதலீடு செய்ய வேண்டும். உங்கள் பிள்ளைகளின் வயது 20 ஆகும் வரை முதலீடு செய்யலாம். பிள்ளைகளின் வயது 25 ஆகும் போது பாலிசி முதீர்வடையும்.ஜீவன் தருண் திட்டத்தில் அதிகபட்ச வரம்பு என்று ஏதுமில்லை.
20 முதல் 24 வயது வரையிலான வருடாந்திர சர்வைவல் பெனிபிட் மற்றும் 25 வயதில் முதிர்வுப் பலன்கள் மூலம் வரும் குழந்தைகளின் கல்வி மற்றும் பிற நிதித் தேவைகளை இந்தத் திட்டம் பூர்த்தி செய்யும். குறைந்தபட்ச வயது 90 நாட்கள், மற்றும் நுழைவதற்கான அதிகபட்ச வயது 12 ஆண்டுகள். திட்டத்தின் அதிகபட்ச முதிர்வு 25 ஆண்டுகள். பாலிசி கால அளவு 25 ஆண்டுகள், பிரீமியம் செலுத்தும் காலம் (PPT) 20 ஆண்டுகள்.
உங்கள் குழந்தைகளின் வயது 12 ஆகும் போது நீங்கள் முதலீட்டை செய்ய தொடங்கினால் 13 வருடங்களுக்கு பிறகு பாலிசி முதிர்ச்சியடையும். இந்த பாலிசியில் தினமும் 150 ரூபாய் முதலீடு செய்தால் ஒரு வருடத்திற்கு 55,000 ரூபாய் பிரீமியாமாக செலுத்துவீர்கள். இப்படி தினமும் ரூ. 150 என வருடத்திற்கு ரூ. 55,000 முதலீடு செய்து வந்தால் பிள்ளைகளுக்கு 25 வயது ஆகும் போது பாலிசி முதீர்வடையும்.
பாலிசி முதிர்வடையும் போது போனஸ் தொகை, குறைந்தபட்ச உறுதித் தொகை, லாயல்ட்டி தொகை ஆகியவை சேர்த்து உங்களின் சேமிப்பு தொகை உயரும். இந்த பாலிசியில் முதலீடு செய்யும் போது கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக 5, 10, 15 சதவீத தொகையை இடையில் பெறவும் முடியும். இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு எல்.ஐ.சி முகவர்களை அணுகலாம். எல்.ஐ.சி ஆன்லைன் போர்டல் தளத்திலும் பார்வையிடலாம்.