தமிழகம் முழுவதும்
15 சதவீத சம்பள உயர்வு
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மற்றும்
மே மாதம் நடந்த
சட்டமன்ற தேர்தலை ஒட்டிய
திமுக சார்பாக பல்வேறு
வாக்குறுதிகள் அளிக்கப்பட்டது. அதில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம்
மற்றும் அகவிலைப்படி உயர்வு
உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள்
அடங்கியது.
இதையடுத்து தேர்தலில் வெற்றி பெற்ற
திமுக, தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே
வருகிறது.
அதன்படி
கடந்த ஆட்சியின்போது அரசு
ஊழியர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து
செய்து முதல்வர் ஸ்டாலின்
உத்தரவிட்டார்.
அடுத்த
ஆண்டு ஜனவரி மாதம்
முதல் அகவிலைப்படி உயர்வு,
தீபாவளி பண்டிகையை ஒட்டி
அரசு ஊழியர்கள் அனைவருக்கும் போனஸ் என சிறப்பு
சலுகைகள் அறிவிக்கப்பட்டன.
மேலும்
மாணவர்களின் கற்றல் இடைவெளியை
குறைக்க இல்லம் தேடி
கல்வி என்ற திட்டத்தை
தமிழக அரசு அமல்படுத்தியது. அதற்காக தன்னார்வலர்கள் பலரும்
பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இவ்வாறு
பள்ளி கல்வித்துறையில் பல
மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.
இதையடுத்து பகுதி நேர ஆசிரியர்கள் அனைவரும் பணி நிரந்தரம்
செய்யப்படுவார்கள் என்று
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
அறிவித்தார். இதனைத் தொடர்ந்து
பள்ளி கல்வித்துறை சார்ந்த
மற்றொரு முக்கியமான அறிவிப்பு
ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி
தமிழகத்தில் பள்ளிக் கல்வித்
துறையின் கீழ் நிரலர்,
கட்டட பொறியாளர்கள், கணக்காளர்கள், மாத பணி நிறைவு
அறிக்கை தயார் செய்வோர்,
தரவு உள்ளீடு செய்வோர்,
ஓட்டுநர்கள், அலுவலக உதவியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும்
உதவியாளர்கள் என
அனைவருக்கும் 15 சதவீத
சம்பள உயர்வு வழங்கப்படும் என்று சமக்ர சிக்ஷா
மாநில திட்ட இயக்குனர்
சுதன் அறிவித்துள்ளார்.
கடந்த
நவம்பர் 1ஆம் தேதியை
அடிப்படையாகக் கொண்டு
சம்பள உயர்வை வழங்க
உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதனைப்போலவே ஓய்வு பெற்ற பள்ளி
கல்வித்துறை ஊழியர்கள் மற்றும்
நவம்பர் 1ஆம் தேதிக்குப் பின்னர் பணியில் சேர்ந்தவர்கள் உள்ளிட்டோருக்கு சம்பள
உயர்வு அறிவிப்பு பொருந்தாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.