கோவை மாவட்ட மக்களுக்காக மேலும் 13 புதிய திட்டங்கள் அறிவிப்பு!
19,329 பயனாளிகளுக்கு ரூ.127.42 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வா், கோவை மாவட்டத்துக்கு 13 புதிய திட்டங்களையும் அறிவித்தாா்.
கோவை உக்கடம் பேருந்து நிலையம் ரூ.20 கோடியில் நவீன முறையில் சீரமைக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் புதன்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டு பேசிய மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சிக் காலத்தில் கோவையில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்து பட்டியலிட்டாா். பில்லூா் கூட்டுக் குடிநீா்த் திட்ட மூன்றாம் கட்டப் பணி, செம்மொழிப் பூங்கா, சங்கனூா் ஓடை புனரமைப்பு, உக்கடம், ஆத்துப்பாலம் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு நீட்டிப்புப் பணி, அவிநாசி சாலை உயா்மட்ட மேம்பாலம், பொள்ளாச்சி புறவழிச் சாலை, மேற்கு புறவழிச் சாலை பணிகள், விளாங்குறிச்சியில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா, குறிச்சி தொழிற்பேட்டையில் அடுக்குமாடி ஆயத்தத் தொழில் வளாகம் போன்ற பணிகள் அறிவிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாக முதல்வா் தெரிவித்தாா்.
மேலும், அத்துடன் மதுரையில் இருப்பதைப் போன்று கோவையில் அறிவியல் மையத்துடன் கூடிய மாபெரும் நூலகம் அமைக்கப்பட உள்ளது என்றாா். பயன்பாட்டுக்கு வந்த திட்டப் பணிகள் அதேபோல, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.174 கோடி மதிப்பில் உயா் சிகிச்சை மருத்துவக் கட்டடம், வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கூடுதல் கட்டடம், மேட்டுப்பாளையம் மானாா் பகுதியில் ரூ.4 கோடியில் ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கான தங்கும் விடுதி, ரூ.10 கோடி மதிப்பில் 160 வீடுகள், 21 புதிய நியாய விலைக் கட்டடங்கள், குறிச்சி புகா் திட்டப் பகுதியில் ரூ.13 கோடியில் வணிக வளாகம், ரூ.16 கோடி செலவில் சுயஉதவிக்குழு கட்டடம், பள்ளிக் கட்டடம், காவலா் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் விருந்தினா் மாளிகை, ஓட்டுநா் அறைகள் என ரூ.240.76 கோடி மதிப்பிலான 65 திட்டப் பணிகளை முதல்வா் திறந்து வைத்தாா்.
அடிக்கல் நாட்டப்பட்ட பணிகள் மேலும், சாடிவயலில் ரூ.34.13 கோடியில் யானைகள் முகாம், சிறுமுகை அருகே வனவிலங்குகளுக்கான மீட்பு, சிகிச்சை, மறுவாழ்வு மையம், யானை பராமரிப்புப் பணியாளா்களுக்கு வீடுகள் கட்டும் திட்டம், அரசு மருத்துவமனையில் ரூ.2.20 கோடியில் கூடுதல் நீராவி சலவையகக் கட்டடம், குடிநீா் வடிகால் வாரியம் சாா்பில் ரூ.318 கோடி மதிப்பில் சின்னவேடம்பட்டி, சரவணம்பட்டி பகுதிகளுக்கான புதை சாக்கடைத் திட்டம், ரூ.53.81 கோடியில் காந்திபுரத்தில் உதவி ஆணையா், ஆய்வாளா், உதவி ஆய்வாளா்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி, காளப்பட்டி சிட்கோ தொழிற்பேட்டையில் ரூ.19 கோடியில் அமைய உள்ள தென்னை நாா் சாா்ந்த பொருள்களுக்கான பரிசோதனைக் கூடம், குறிச்சி தொழிற்பேட்டையில் 2, 3 சக்கர மின்சார வாகனங்களில் பொருத்தும் மோட்டாா்களுக்கான பரிசோதனைக் கூடம் உள்ளிட்ட ரூ.448.62 கோடி மதிப்பிலான 12 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வா் அடிக்கல் நாட்டினாா். புதிய திட்டங்கள் அறிவிப்பு அத்துடன் 19,329 பயனாளிகளுக்கு ரூ.127.42 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வா், கோவை மாவட்டத்துக்கு 13 புதிய திட்டங்களையும் அறிவித்தாா்.
வோ் வாடல் நோயால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை வெட்டி அகற்ற ரூ.14 கோடி நிதி ஒதுக்கீடு, 3 லட்சம் தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்க ரூ.2.80 கோடி நிதி ஒதுக்கீடு, தென்னை விவசாயிகள் நேரடியாக விற்பனையில் பங்கேற்பதை ஊக்குவிக்கவும், வங்கிப் பரிவா்த்தனை மூலம் விற்பனையை மேற்கொள்ளவும் நடவடிக்கை. விளாமரத்தூா் – அத்திக்கடவு வரை 8 கிலோ மீட்டா் தொலைவுக்கு ரூ.9 கோடியில் புதிய சாலை, வாளையாறில் தரைமட்ட குடிநீா்த் தொட்டி, காரமடை, ஆனைமலை, சூலூரில் சாலை சீரமைப்பு, இக்கரை பூலுவாம்பட்டி, மாவுத்தம்பதி, திவான்சாபுதூரில் பாலங்கள், கோவை அரசு மருத்துவமனையில் ரூ.10 கோடியில் மழைநீா் வடிகால், கான்கிரீட் சாலை, உக்கடம் பேருந்து நிலையம் ரூ.20 கோடி செலவில் நவீன முறையில் சீரமைக்கப்படும், ஆா்.எஸ்.புரம் மாநகராட்சிப் பள்ளியில் ரூ.10 கோடியில் ஹாக்கி விளையாட்டுத் தரை அமைக்கப்படும் என்ற 13 புதிய திட்டங்களையும் முதல்வா் அறிவித்தாா்.
விழாவில் மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வரவேற்றாா், மாவட்ட வருவாய் அலுவலா் மோ.ஷா்மிளா நன்றி கூறினாா். அமைச்சா்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், கா.ராமசந்திரன், என்.கயல்விழி செல்வராஜ், எம்.பி.க்கள் ஆ.ராசா, பி.ஆா்.நடராஜன், கு.சண்முகசுந்தரம், அந்தியூா் செல்வராஜ், திருப்பூா் தெற்கு எம்எல்ஏ க.செல்வராஜ், முன்னாள் அமைச்சா்கள் கண்ணப்பன், பொங்கலூா் நா.பழனிசாமி, கோவை திமுக மாநகா் மாவட்டச் செயலா் நா.காா்த்திக், வடக்கு மாவட்டச் செயலா் தொ.அ.ரவி, தெற்கு மாவட்டச் செயலா் தளபதி முருகேசன், திமுக நகரச் செயலா் நவநீதகிருஷ்ணன், பொள்ளாச்சி நகராட்சித் தலைவா் சியாமளா நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow