தமிழக ரேஷன்
அட்டைதாரர்களுக்கு 13 மளிகை
பொருட்கள்
–
ஜூன் முதல் விநியோகம்
தமிழகம்
முழுவதும் அதிகரித்து வரும்
கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு
சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த
மே மாதம் 24ம்
தேதி முதல் எவ்வித
தளர்வுகளும் இன்றி முழு
ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் கடந்த
சில நாட்களாக கொரோனா
பாதிப்பு சற்று குறைய
தொடங்கி உள்ளது. இருப்பினும் முழு ஊரடங்கால் பொதுமக்கள் பலர் வாழ்வாதாரம் இழந்து
தவிக்கின்றனர்.
இதனால்
அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.4000 நிவாரணத்
தொகை வழங்கப்படும் என
முதல்வர் அறிவித்து இருந்தார்.
அதற்கான முதல் தவணை
ரூ.2000 வழங்கப்பட்டு விட்டது.
இதன் 2வது தவணை
2000 ரூபாய் ஜூன் மாதம்
வழங்கப்பட உள்ளதாக தகவல்கள்
தெரிவிக்கின்றது. இந்நிலையில் முதல்வர் இன்று வெளியிட்டு உள்ள அறிக்கையில், ஏற்கனவே
அமலில் உள்ள தளர்வுகள்
அற்ற முழு ஊரடங்கானது ஜூன் 7ம் தேதி
வரை நீட்டிக்கப்படுவதாக கூறப்பட்டு உள்ளது.
இது
தவிர, பொது மக்களின் சிரமத்தை
குறைக்கும் வகையில், 13 மளிகைப் பொருட்கள் அடங்கிய
தொகுப்பினை அனைத்து அரிசி
குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய
விலைக் கடைகள் மூலம், வரும் ஜூன் மாதம் முதல் வழங்கிட,
கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
மேலும்
பொதுமக்கள் அரசின் வழிகாட்டு
நெறிமுறைகளை முறையாக பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு
காலத்தில் அனைத்து கடைகளும்
மூடப்பட்டு உள்ள நிலையில்,
ரேஷன் கடைகள் தினசரி
காலை 8 மணிமுதல் பிற்பகல்
12 மணிவரை இயங்க அனுமதி
அளிக்கப்பட்டுள்ளது.
13 மளிகைப் பொருட்கள்:
கோதுமை
மாவு -1 கிலோ
உப்பு
– 1 கிலோ
சர்க்கரை
– 500 கிராம்
ரவை
– 1 கிலோ
உளுந்த
பருப்பு – 500 கிராம்
புளி
– 250 கிராம்
கடலை
பருப்பு – 250 கிராம்
டீ
தூள் – 250 கிராம்
சீரகம்
– 100 கிராம்
மஞ்சள்
தூள் – 100 கிராம்
மிளகாய்
தூள் – 100 கிராம்
குளியல்
சோப் – 1
துணி
சோப் – 1