1.குறியீடுகளைப் பொருத்துக
அ) பெண் 1) சமாதானம்
ஆ) புறா 2) வீரம்
இ) தராசு 3)விளக்கு
ஈ) சிங்கம் 4 .நீதி
அ)
2, 4, 1, 3
இ)
3, 1, 4, 2
ஆ)
2, 4, 3,1
ஈ)
3, 1, 2, 4
விடை: இ) 3, 1,4, 2
2.
கூற்று: 19 ஆம் நூற்றாண்டில் குறியீட்டியம் ஓர் இலக்கியக் கோட்பாடு உருப்பெற்றது
காரணம்:
பொதலோ, கரும்பே, வெர்லேன், மல்லார்மே முதலானவர்கள் குறியீட்டுடன் வளர்த்தார்கள்.
அ)
கூற்று சரி, காரணம்
தவறு
ஆ)
கூற்று சரி, காரணம்
இ)
கூற்று தவறு. காரணம்
தவறு
ஈ)
கூற்று தவறு, காரணம்
சரி
விடை: அ) கூற்று
சரி, காரணம் தவறு
3
சங்க இலக்கியத்தில், அகத்திணை மாந்தர்களின் உள்ளத்து உணர்வுகளைக் குறிப்பாக உணர்த்தும் குறியீடுகள்
ஆ)
உவமேயம்
அ)
உவமை
இ)
உத்தி
ஈ)
உள்ளுறை உவமை
விடை: ஈ) உள்ளுறை
உவமை
4
‘திட்டம்‘ என்னும் தலைப்பில் ‘வரங்கல் சாபங்கள் ஆகுமென்றால் இங்கே தவங்கள் எதற்காக‘ என்று எழுதப்பட்டுள்ள கவிதையில் ‘வரம்‘ எதற்குக் குறியீடாகிறது.
அ)
அமுதசுரபி
ஆ)
ஆதிரை பருக்கை
இ)
திட்டம்
ஈ)
பயனற்ற விளைவு
விடை: இ) திட்டம்
5.
மறைத்துச் சொல்லவும் மிகுத்துச் சொல்லவும் அழுத்திச் சொல்லவும் பயன்படும் இலக்கிய உத்தி எது ?
அ) குறியீடு
ஆ) படிமம்
இ) அங்கதம்
ஈ) தொவேண்டும்
விடை: அ) குறியீடு
குறுவினா
1.குறியீட்டு உத்தியில் ஒரு புதுக்கவிதை எழுதுக?
அறிவியல் ஞானப்பால்
அருந்தியதால்
எத்தனையோ
ஞானசம்பந்தர்கள்
அறிவியல் மொழியில்
ஏராளமாய் தேவாரங்கள்!
2.’வியர்வை” கவிதையில் வெளிப்படும் குறியீடுகளை குறிப்பிடுக
வியர்வை
இந்த ஆதிரைப்
பருக்கைகள்
வீழ்ந்ததும்
பூமிப்பாத்திரம்
அமுதசுரபி (பால்வீதி,
அப்துல் ரகுமான்)
ஆதிரையிட்ட பருக்கையினால் அமுத
சுரபியில் உணவு வளர்ந்து
கொண்டே இருந்தது போல்
உழைப்பால் உலகம் செழித்து
வளர்கிறது என்ற கருத்தை
புலப்படுத்துகிறது.
வியர்வைத்
துளிக்கு – ஆதிரை பருக்கை
செழிப்புக்கு – அமுதசுரபி
3.குறியீட்டு உத்தியின் அடிப்படை இலக்கணங்களை எழுதுக?
விடை:
சுட்டிய
பொருளுக்கும் குறியீட்டுப் பொருளுக்கும் ஏதேனும்
ஒரு தொடர்பு இருத்தல்
வேண்டும் .
சுட்டும்
பொருள். என்பது எல்லோரும்
அறிந்த ஒன்றாக இருத்தல்
வேண்டும்.
இத்தொடர்பின் வாயிலாகக் குறியீட்டுப்பொருள் நுண்ணிய
முறையில் வெளிப்படுத்தப்பட வேண்டும்.
நம்மை அளப்போம்
பலவுள் தெரிக
1.
சிறுபாணாற்றுப்படை காட்டும் பாட்டுடைத் தலைவனின் இன்றைய நிலப்பகுதி
அ) உதகமண்டலம்
ஆ) விழுப்புரம்
இ) திண்டிவனம்
ஈ) தருமபுரி
விடை: இ) திண்டிவனம்
2.
பொருந்தாத ஒன்றைக் கண்டறிக
அ) தனித்தமிழ்த் தந்தை 1)
மு. வரதராசனார்
ஆ) ஆராய்ச்சிப் பேரறிஞர் 2)
மயிலை சீனி. வேங்கடசாமி
இ)தமிழ்த்தென்றல் 3)திரு.
வி.க
ஈ) மொழி
ஞாயிறு 4)தேவநேயப்பாவாணர்
விடை: அ) தனித்தமிழ்த் தந்தை – மு. வரதராசனார்
3.ச.த சற்குணரின் உரையைக் கேட்டுத் தூண்டப்பெற்ற மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய நூல்?
அ) பௌத்தமும்
தமிழும்
ஆ) இசுலாமும்
தமிழும்
இ) சமணமும்
தமிழும்
ஈ) கிறித்தவமும் தமிழும்
விடை: ஈ) கிறித்தவமும் தமிழும்
4.
நான் வெற்றுவெளியில் அலைந்து கொண்டிருக்கிறேன் எனது முகத்தைத் தேடியபடி என்று சுகந்தி சுப்பிரமணியன் தேடுவதாகக் குறிப்பிடுவது?
அ) தமது
வீட்டு முகவரியை
ஆ) தமது
குடும்பத்தை
இ) தமது அடையாளத்தை
ஈ) தமது
படைப்புகளை
விடை: இ) தமது
அடையாளத்தை
5.கடையெழு வள்ளல்களின் வரிசையைச் சாராத மன்னர்கள்
அ) ஆய்
அண்டிரன் அதிகன்
ஆ) நல்லியக்கோடன் குமணன்
இ)நள்ளியும்
ஓரியும்
ஈ) பாரியும்
காரியும்
விடை: ஆ) நல்லியக்கோடன் குமணன்
குறுவினாக்கள்
1.தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்‘ நூல் பற்றிக் குறிப்பு வரைக?
விடை:
தமிழர்
கலைத்திறனை எடுத்தோதும் ‘தமிழர்
வளர்த்த அழகுக் கலைகள்‘
என்னும் நூல், கவின்கலைகள் குறித்துத் தமிழில் வெளிவந்த
முழுமையான முதல் நூல்
ஆகும்.
தற்காலத்
தமிழ்ச் சமூகம் தனது
பழைய அழகுக் கலை
செல்வங்களை மறந்து, தன்
பெருமை தான் அறியாச்
சமூகமாக இருந்து வருகிறது.
‘கலை
கலை‘ என்று இப்போது
கூறப்படுகிற கலையெல்லாம் சினிமாக்கலை இசைக்கலைகள் பற்றியே : இலக்கியக்கலைகூட அதிகமாகப் பேசப்படுவது இல்லை
; ஏனைய அழகுக்கலைகளைப் பற்றி
அறவே மறந்து விட்டனர்
எனவே இந்நூல் எழுதப்பட்டது” என்று இந்
நூலின் முன்னுரையில் மயிலை
சீனி. வேங்கடசாமி குறிப்.பிடுகின்றார்.
2.விரிபெரு தமிழர் மேன்மை ஓங்கிடச் செய்வ தொன்றேஉயிர்ப்பணியாக்
கொண்டோன்‘ – யார், யாரைப் பற்றி, எதற்காகக் கூறுகிறார்?
விடை:
இவ்வரிகளில் பாரதிதாசன், மயிலை சீனி.
வேங்கடசாமி அவர்களைப் பற்றிக்
கூறுகிறார்.
மயிலை
சீனி. வேங்கடசாமி அவர்கள்
விரிந்து பரந்த தமிழர்களின் மேன்மைகள் எல்லாவற்றையும் ஓங்கிடச்
செய்வதையே தன் உயிர்
பணியாகக் கொண்டவர் அதற்காகவே
மயிலை சீனி.வேங்கடசாமி அவர்களைப் பாரதிதாசன் பாராட்டி மகிழ்கிறார்.
3.முகம் முகவரியற்றுப் போனதற்கு, சுகந்தி சுப்பிரமணியன் கூறும் காரணத்தை எழுதுக?
விடை:
ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு, அத்தனித்தன்மை அடையாளம்
காணப்படுகையில் எழுச்சியும் ஊக்கமும் உடன் இணைந்து
கொள்கிறது.
அத்தகு
அடையாளத்தைத் தொலைத்ததால் முகம் முகவரியற்றுப் போனது
என்கிறார் சுகந்தி சுப்பிரமணியன்.
4.இறைமகனின் இன்னலைக் கண்டு மக்கள் எவ்விதம் புலம்பினார்?
விடை:
இறைமகனாரின் இன்னலைக் கண்டு மக்கள்,
இத்தனை கொடுமைகளுக்குப் பிறகும்
இவ்வுலகம் வெடிக்கவில்லையே இது என்னே! என்பர்.
வானம்
இடிந்து விழவில்லையே ! இது
என்ன! என்பர் கடல்
நீர் வற்றிப் போக
வில்லை | இது என்னே
! என்பர்.
இந்த
உலகம் இன்னும் அழியாமல்
தாமதிப்பதும் ஏனோ‘
என்பர் – இவ்வாறு மக்கள்
புலம்பினார்
சிறுவினா
1.மயிலை சீனி, வேங்கடசாமி நினைவுச் சிறப்பிதழுக்குச் செய்திகள் தருக?
விடை:
பெயர்:
மயிலை. சீனி. வேங்கடசாமி
தந்தை:
சீனிவாசன் (சித்த மருத்துவர்)
தமையனார்:
கோவிந்தராசன், தமிழாசிரியர்
பிறந்த
இடம்: மயிலாப்பூர்
தொழில்:
ஆசிரியர் (25 ஆண்டுகள்)
தொடர்பு
கொண்டிருந்த அறிஞர் பெருமக்கள்
விபுலானந்த அடிகள்
,
கா, சுப்பிரமணியர்
திரு. வி.க.
தெ.பொ.
மீ,
ச.த.
சற்குணர்,
ஆய்வுக்
கட்டுரைகள் வெளியிட்ட இதழ்கள்
குடியரசு ,
ஊழியன்,
செந்தமிழ்ச் செல்வி
ஆரம்பாசிரியன் லக்ஷ்மி,
ஆய்வு
நூல்கள்
கிறித்தவமும் தமிழும்
பௌத்தமும் தமிழும்
சமணமும் தமிழும்
வரலாற்று
ஆய்வு நூல்கள்
மகேந்திரவர்மன்
நரசிம்மவர்மன்
மூன்றாம் நந்திவர்மன்
களப்பிரர் ஆட்சியில்
தமிழகம்,
கலை
ஆய்வு நூல்
சங்ககாலத் தமிழக
வரலாற்றில் சில செய்திகள்.
பழங்காலத் தமிழர்
வாணிகம்
கொங்குநாட்டு வரலாறு
தமிழ்நாட்டு வரலாறு–சங்ககாலம்
(அரசியல்)
தமிழ்நாட்டு வரலாறு
ஆவணங்கள்
ஆய்வு நூல்
சாசனச் செய்யுள்
மஞ்சரி
மறைந்துபோன தமிழ்
நூல்கள்
சொல் ஆய்வு
கட்டுரை: அஞ்சிறைத் தும்பி
மொழிபெயர்ப்பு: மத்த
விலாசம் (ஆங்கிலம்)
பெற்ற விருதுகள்:
தமிழக அரசின் முதற்பரிசு
தமிழ்ப் பேரவைச்
செம்மல்
ஆராய்ச்சிப் பேரறிஞர்
சிறப்பு:
பசும்பூண்
பாண்டியன் தன் கொடியில்
யானைச் சின்னத்தைக் கொண்டிருந்தான் என்று முதலில்வெளிப்படுத்தியது.
2.
கடையெழு வள்ளல்களையும் அவர்கள் செய்த செயலையும் அட்டவணைப்படுத்துக.
விடை:
கடையெழு வள்ளல்கள் மற்றும் அவர்கள் செய்த
செயல்கள்
பேகன்: மழைக் காலத்தில்
மயில்
நடனமாடியதை பார்த்த
பேகன்
அது குளிரால்
நடுங்குவதாக எண்ணித்
தன் போர்வையினை
மயிலுக்கு
போர்த்தினார்.
பாரி: நெடு வழியில்
முல்லைக்கொடி
ஒன்று பற்றிப்
படர ஏதுமில்லால் தவித்ததை
கண்ட பாரி,
தான் ஏறி
வந்த தேரை
நிறுத்தி,
அதன் மேல்
முல்லைக்
கொடியினை படரவிட்டான்.
காரி: காரி இரவலர்க்கு
இல்லை எனக்
கூறி தன்
குதிரை மற்றும்
செல்வங்களை
கொடுத்து உதவினான்.
ஆய்: இறைவனுக்கு தன்
மன விருப்பதோடு
நீல
வண்ணக்
கல் மற்றும்
நாகம் கொடுத்த
ஆடையினை ஆய்
கொடுத்தான்.
அதியமான்: சாவா
அமிழ்தமான
நெல்லிக்கனியினை
தான் உண்ணாது
ஒளவைக்கு தந்தான்
அதியமான்
நெடுமான் அஞ்சி.
நள்ளி: தன்
நண்பர்கள்
உள்ளம்
மகிழுமாறு தான்
பெற்ற பொருள்களை நள்ளி
குறிப்பறிந்து
வழங்கினார்.
ஓரி:
தன் நாட்டின்
பகுதிகளை கூத்தர்க்கு
பரிசாக வழங்கினான்
ஓரி.
3.ஈசன் மகன் நின்றனர் ஓர் ஏழையென ஓர்மின்‘ – இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக
விடை:
இடம்: எச்.ஏ.
கிருட்டிணனார் எழுதிய
இரட்சணிய யாத்திரிகத்தில் குமார
பருவம் இரட்சணிய சரிதப்படலத்தில் இடம் பெற்ற வரியாகும்
இது
பொருள்: எந்த
ஒரு உதவியும் பெற
இயலாத ஏழையைப் போல
இறைமகன் இயேசு நின்றார்.
இதை எண்ணிப் பாருங்கள்.
விளக்கம்: இறைமகன்
இயேசு. தன்னைப் பிறர்
கயிற்றால் கட்டும் போது
அதற்கு உடன்பட்டு நின்றார்.
தனக்குத் தீங்கு இழைப்பதன்
காரணமாகத் தம் வாழ்நாள்
முழுவதும் துன்பத்தில் இருப்பார்களோ என்ற எண்ணம் காரணமாக
அன்புக் கட்டில் இருந்து
விடுபட முடியாமல் அமைதியாக
நின்றார். எந்த ஒரு
உதவியும் பெற இயலாத
ஏழை எப்படி அடக்கமாக
அமைதியாக பணிவோடு இருப்பானோ
அதுபோல இயேசு நின்றார்
என்று விளக்குகிறார் எச்.ஏ.
கிருட்டிணனார்.
4.கொடை வழங்குதலில் நீங்கள் பின்பற்ற விரும்புவனவற்றை எழுதுக?
விடை: கொடுத்தல் உயர்குணம்
என்பதை உணர்ந்தவன் நான்.
எனவே கொடுப்பதில் குறைவின்றிக் கொடுப்பதை விரும்புபவன் நான்
தேவைப்படுவோர்க்குத் தேவைப்படும் அளவிற்குக் கொடுக்கும் கொள்கையுடையவன். குறிப்பறிந்து கொடுக்க
எண்ணம் கொண்டவன் நான்
கேட்டால்தான் உதவி என்று இல்லாமல்
தேவைப்படும் என்பதைத் தெரிந்து
கொடுப்பதில் குறியாக உள்ளவன்
நான்
கொடுக்கின்ற பொருள்கள் தரமானதாக இருக்க
வேண்டும் என எண்ணுபவன்
நான்.
என்னுடைய
பொருள்களை மட்டுமே எல்லோர்க்கும் வழங்குவேன். அடுத்தவர் பொருளை
எடுத்து அள்ளிக் கொடுக்க
மாட்டேன்.
இன்று
நாம் கொடுக்கிறோம், நாளை
அவன் நமக்குக் கொடுப்பான் என்று எண்ணாமல் கொடுப்பவன் நான்.
நேற்று
எனக்கு அவன் கொடுக்கவில்லை என்பதற்காக அவனுக்குக் கொடுப்பதை
மறுக்கமாட்டேன் நான்.
குறிப்பாக
வலக்கை கொடுப்பது இடக்கை
அறியாமல் கொடுக்க வேண்டும்
என்ற எண்ணத்தை இதயத்தில்
பதித்தவன் நான்.
மனிதநேயம்
கலந்து கொடுப்பதில் மனநிறைவு
கொண்டவன் நான்.
நெடுவினா
1.மயிலையார் ஓர் “ஆராய்ச்சிப் பேரறிஞர் என்னும் கூற்றினைச் சான்றுக கட்டுரையாக்குக.
விடை:
முன்னுரை:
ஒவ்வொரு
தேசிய இனமும் தன்னுடைய
கடந்தகால வரலாறு அறிந்திருந்தால் மட்டுமே எதிர்கால இலக்குகளை
அடைய முடியும். அத்தகைய
வரலாற்றை இலக்கியம், தொல்லியல்,
கல்வெட்டு, பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் தரவுகளைத்
தேடி எழுதிய ஆளுமைகளில் முக்கியமானவர் மயிலை
சீனி. வேங்கடசாமி,
மயிலை
சீனி – ஒரு தமிழ்த்தேனீ:
மயிலை
சீனி. வேங்கடசாமி ஒரு
தமிழ்த் தேனீ. அறிவின்
வாயில்களை நோக்கியே அவர்
கால்கள் நடந்தன, நூலகங்களே
அவரது தாயகங்கள். புதிய செய்தி
தருதல், புது விளக்கமளித்தல், இருண்ட பக்கங்களுக்கு ஒளியூட்டல், தவறுகளை மறுத்து உண்மையை
எடுத்துரைத்தல் என்பனவற்றை ஆய்வு அணுகுமுறைகள் கொண்டவர்,
தொடக்ககால ஆய்வு:
தமிழ்
ஆராய்ச்சி மாநாட்டில் ச.த,
சற்குணர் கிறித்தவமும் தமிழும்
என்று உரையாற்றினார். அவ்வுரை
கேட்ட ஆர்வத்தால் ‘கிறித்தவமும் தமிழும்‘ என்னும் நூலை
எழுதினார். இது அவருடைய
முதல் நூலாகும். தொடர்ந்து
சமணமும் தமிழும் பௌத்தமும்
தமிழும் என்னும் ஆய்வு
நூல்களை எழுதினார். கல்வெட்டு
ஆய்வில் இவருக்குப் பயிற்சி
அதிகம் .
வரலாற்று ஆய்வு:
1950களில்
கி.பி, 3ஆம்
நூற்றாண்டு தொடங்கி கி.பி.
9 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட
காலங்களில் ஆட்சிபுரிந்த மன்னர்களைப் பற்றி ஆய்வு நடத்தினார்.மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன், மூன்றாம் நந்திவர்மன் குறித்த
நூல்களை எழுதினார். சங்ககால
மூவேந்தர்கள், கொங்கு
நாட்டு மன்னர்கள், துளு
நாட்டு மன்னர்கள், களப்பிரர்
மற்றும் இலங்கை குறித்த
வரலாறு ஆகியவற்றையும் எழுதியுள்ளார். களப்பிரர் குறித்த கண்ணேணாட்டத்தை‘களப்பிரர் ஆட்சியில் தமிழகம்
என்னும் நூல் மூலம்
வெளிப்படுத்தினார்.
கலையியல் ஆய்வுகள்:
கலையியல்
ஆய்வு, கட்டடம், சிற்பம்,
ஓவியம் தொடர்பான இவரது
ஆய்வுகள் தமிழ்ச் சமூக
வரலாற்றுக்கு புதிய
வரலாறு அமைந்தன. “தமிழர்
வளர்த்த அழகுக் அலைகள்‘
என்னும் நூல் கவின்
கலைகள் குறித்து முதலில்
வெளிவந்த தமிழ் நூல்
ஆகும். இந்நூல் தமிழக
அரசின் முதற்பரிசைப் பெற்றது.
கல்வெட்டு ஆய்வுகள்:
ஆய்வுலகில் மயிலை சீனி. வேங்கடசாமியின் குறிப்பிடத்தக்க பங்களிப்பு தமிழ்நாட்டு வரலாறு‘ என்னும்
நூல் ஆகும். துளு
மொழியும் தமிழ் மொழியையும் ஒப்பிட்டு ஆராய்ந்து உள்ளார்.
தமிழியலுக்குத் தேவையான
பல்வேறு ஆவணங்களையும் தொகுத்து
ஆய்வு செய்யும் பணியை
மேற்கொண்டு “சாசன செய்யுள்
மஞ்சரி“, “மறைந்து
போன தமிழ் நூல்கள்
ஆகிய நூலையும் எழுதினார்
இந்நூல் மறைந்து போன
333 நூல்களை நம்முன் நிறுத்தக்
காரணமாயிற்று. இவரது
பத்தொன்பதாம் நூற்றாண்டு தமிழ் இலக்கியம் என்னும்
நூல் ஒவ்வொரு நூற்றாண்டையும் எவ்வாறு ஆவணப்படுத்துவது என்பதை
உணர்த்தியது.
பன்மொழிப் புலமை:
மயிலையார்
சொல்லாய்வுப் பணியை
தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்துள்ளார். ‘செந்தமிழ்ச் செல்வி‘
இதழ் அவரின் சொல்லாய்வுக் கட்டுரைகள் அஞ்சிறைத் தும்பி‘
என்ற தொகுப்பாக வெளியிடப்பட்டது. “நான் கதைகளையும் நவீனங்களையும் எழுதுபவன் அல்லன். ஆராய்ச்சி
நூலை எழுதுபவன் என்று
தன்னைப் பிரகடனப்படுத்தியவர் மயிலை
சீனி. வேங்கடசாமி அவர்கள்
அதனால்தான் இம்மாமனிதருக்கு சென்னை
கோகலே மண்டபத்தில் மணிவிழா
எடுத்து ‘ஆராய்ச்சிப் பேரறிஞர்‘
என்ற பட்டத்தை வழங்கினார் ஆராய்ச்சிக்காக தன்னை
அர்ப்பணித்துக் கொண்ட
மயிலையார் உண்மையில் ஓர்
‘ஆராய்ச்சிப் பேரறிஞரே‘ ஐயமில்லை
முடிவுரை:
தம்
வாழ்வை முழுமையாகத் தமிழியல்
ஆய்வுக்கு ஒதுக்கியவர் மயிலை
சீனி வேங்கடசாமி. அவர்
நாம் தாழாமல் இருக்கத்
தம்மைத் தாழ்த்திக் கொண்டவர்.
நமது பெருமைகளை ஆய்வு
நோக்கில் விரித்துரைத்தவர். நமது
சுய அடையாளங்களை மீட்டுத்தந்தவராஎன்கொலோ்
2.
எச்.ஏ. கிருட்டிணனார் ‘கிறித்தவக் கம்பரே‘ என்பதை நும் பாடப்பகுதி வ நிறுவுக
விடை:
யாமறிந்த
புலவரிலே கம்பனைப் போல்
வள்ளுவர்போல் இளங்கோவைப் போல்
பூமிதனில்
யாங்கணுமே பிறந்ததில்லை
– என்றார் பாரதியார்.
கம்பர்,
வான்மீகி வடமொழியில் எழுதிய
இராமாயணத்தைத் தமிழில்
இராமாவதாரம்‘ எனப் பெயரிடப்பட்ட கம்ப இராமாயணத்தை கொடுத்தா
வழிநூலாக இருந்தாலும் முதல்
நூலாகவே போற்றப்பட்டது கம்பராமாயணம், அதுபோல ஜான்பன்யன் ஆங்கிலத்தில் எழுதிய ‘பில்கிரிம்ஸ் புரோகிரஸ்
என்னும் ஆங்கில நூலின்
தழுவலாக இரட்சணிய யாத்திரிகம் என்னும் நூல் எச்..
கிருட்டிணப்பிள்ளையால் எழுதப்பட்டது. வழி நூலாக இரட்சணிய
யாத்திரிகம் இருந்தாலும் முதல்
நூலாக எண்ணப்படும். தன்மை
பெற்றது. கம்பராமாயணம் கம்பரால்
பெருமை பெற்றது. இரட்சண்ய
யாத்திரிகம் எச்.ஏ.
கிருஷ்ணப்பிள்ளையால் பெருமை
பெற்றது. எனவே கம்பரும்
எச்.எ. கிருஷ்ணப்பிள்ளையும் ஒரு தன்மையராக
மதிக்கப்படுகின்றனர். அதனால்தான் ‘கிறித்தவக் கம்பர் ஆகிறார்
எச்.ஏ. கிருட்டிணனார்.
கம்பர்
‘விருத்தம்‘ என்ற பாவகையில்
இராமாயணத்தை எழுதினார் எச்.ஏ.
கிருட்டிணனாரும் விருத்தம்
என்ற பாவகையில் இரட்சணிய
யாத்திரிகம் எழுதினார். காப்பியச்
சிற்றுறுப்புகளாக கம்பரும்
படலத்தைப் பயன்படுத்தினார்.
எ.கா :திருவடி தொழுத படலம்
எச்.ஏ.
கிருட்டிணனாரும் காப்பியச்
சிற்றுறுப்பாக படலம்
என்பதைப் பயன்படுத்துகிறார்.
எ.கா :இரட்சண்ய சரித படலம்
சந்தப்பாடல்கள் கம்பருக்குச் சொந்தம்.
அது போலவே சந்தப்பாடல்கள் எச்.ஏ. கிருட்டிணனாருக்கும் சொந்தம்
எ.கா
பொல்லாத வல்லானை
சொல்லாத
பொல்லாங்கை
என்கொல்
என்கொல் என்கொலோ.
கருத்தான
உவமைகளைக் கையாள்வதில் கம்பர்
வல்லவர். அதுபோல் எச்.ஏ.
கிருட்டிணனாரும் கருத்தான
உவமைகளைக் கையாண்டுள்ளார் .
எ.கா
பழிப்புரை
என்னும் வெள்ளி
ஒண்ணுமே
வறுங் கூவலுக்கு உத்தியை
ஒடுக்க
(வற்றிய சிறிய
கிணறு தனக்குள் கடலை
அடக்கிக் கொள்ள முடியுமா)
சொல்லாலும் பொருளாலும் அப்பாலும் சிறப்பாலும் கம்பராமாயணத்தைப் போன்றே
இரட்சணிய யாத்திரிகம் அமைந்து
இருப்பதால் எச்.ஏ.
கிருட்டிணனாரைக் ‘கிறித்தவக் கம்பர்‘ என்று சொல்வதில்
தமிழுக்குப் பெருமையே.
3.
கோடை மழை‘ கதை வாயிலாக விளக்கப்படும் மனிதநேயப் பண்புகளை ? விளக்குக
விடை:
முன்னுரை:
குழந்தைகள் பெற்றோர் கொண்டாடப்படுகிறார்கள். பெற்றோர்
என்ற சொல்லே ‘பேறுபெற்றோர்‘ என்ற பொருள் கொண்டது,
தாய் தந்தை இல்லாத
எதிலிக் குழந்தைகளின் நிலை
மிகக் கொடியதாகும். குழந்தைகள் ஏற்று வளர்க்கும் மனிதப்
பண்பு வரவேற்கப்படவேண்டிய ஒன்று.
பிள்ளைகள் இல்லாமல் ஏதிலி
நிலையில் தவிக்கும் முதியோர்களையும் ஏற்று அரவணைப்பவர்களே மனிதத்தை
மேம்படுத்துபவர்கள்.
ஆறுமுகத்தின் மனிதப்
பண்பு:
காய்ச்சலால் அவஸ்தைப்படும் குழந்தையை
வைத்துக் கொண்டு மருத்துவமனையில் அவஸ்தைப்பட்டுக் கொண்டுள்ளார் ஆறுமுகம். குழந்தை ஆறுமுகத்தின் மகன் குழந்தை மகன்
அவனுடைய மனைவியின் மரணத்தைப்
பொறுத்துக் கொள்ள முடியாமல்
விசத்தைக் குடித்து உயிரை
விட்டு விட்டான் வயதான
காலத்தில் குழந்தையை எடுத்துக்
கொண்டு அலைகிறார் ஆறுமுகம்
தனக்குப் பின்னால் குழந்தை
துன்பப்படக்கூடாது என்பதற்காக மருந்து கடை பாபுவிடம்
சொல்லி குழந்தையை தத்துக்
கொடுக்க ஏற்பாடு செய்கிறார் குழந்தையின் பிரிவு தனக்கு
கஷ்டம் என்றாலும் குழந்தையின் எதிர்காலத்தை நினைத்து
அப்படிச் செய்கிறார் ஆறுமுகம்.
பாபுவின் மனிதநேயம்:
மருந்துக்கடை பாபு மனிதநேயம் மிக்கவர்.
தன் கண்முன் ஆறுமுகம்
படு துன்பத்தைக் காண்கிறார். ஆறுமுகத்தின் மகனுடைய
குழந்தை பாடும் துன்பத்தையே காண்கிறார். உள்ளம் உருகுகின்றது. துன்பம் துடைக்க குழந்தையைத் தத்து கொடுக்க ஏற்பாடு
செய்கிறார். நல்ல மனம்
வாழ்க .
தத்தெடுக்க வந்த
தம்பதியர் மனிதநேயம்:
குழந்தையைத் தத்தெடுக்க வந்த தம்பதிகள்
நாங்கள் குழந்தையை நல்லபடியாக வைத்துக் கொள்கிறோம் என்று
எந்தப் பெற்றோராவது சொல்வார்களா என்று கேட்கும்போதே அவர்கள்
குழந்தையை தத்து எடுக்கவில்லை 1 பெத்து எடுக்க வந்தவர்களைப் போல் உள்ளார்கள் எனத்
தெரிகின்றது. இதற்கும் மேலாக
ஆறுமுகத்திடம் நன்றி
சொல்லுவதற்குப் பதிலாக
உதவி கேட்கிறார் குழந்தையைப் பிரிந்து சிரமப்படாமல் நீங்களும்
எங்களோடு வந்திடுங்கய்யா என்று
சொல்வது மனித நேயத்தின்
உச்சம்.
ஏதிலிக் குழந்தை:
ஏதிலிக்
குழந்தைகளை கவனிப்பது நன்று.
பிள்ளைகளை இழந்து ஏதிலிக்
குழந்தையைப் போல இருக்கும்
பெற்றோர்களை கவனிப்பது மிக
நன்று. இந்த இரண்டு
நன்மைகளையும் செய்ய
துணிந்த தம்பதிகளுக்கு சமுதாயம்
சொல்கிறது நன்றி, இது
போன்ற கோடை மழைகள்தான் இன்றைய சமுதாயத்திற்குத் தேவை
மனித நேயத்தை வடித்துக்
காட்டும் கோடை மழை
இதயத்தில் கொட்டும் மழை!
முடிவுரை:
பாசம்,
பரிவு, பாசம் தாண்டிய
கோபம், வழிகாட்டல், பேருதவி
போன்ற மனிதநேயப் பண்புகள்
கோடை மழையில்‘ பேரருவியாய் விழுந்து, ஆறாய் ஓடி
பண்பெனும் கடலை நிறைக்கின்றது.