Join Whatsapp Group

Join Telegram Group

12th Tamil – Lesson 7 – அருமை உடைய செயல் – New Book Back Question & Answers

By admin

Updated on:

 

download2Bbutton 3 Tamil Mixer Education

இலக்கணத் தேர்ச்சி கொள்

1.பின்வருவனவற்றுள் தொன்மத்திற்குப் பொருந்தா ஒன்றைத்

) கர்ணன்,
தோற்றான் போ

) வயதில்
சிறியவள், ஆனாலும் தலைவி

) இந்த
நாரதரிடம் எச்சரிக்கையாக இரு

) இந்தா
போறான் ,தருமன்

விடை: ) வயதில்
சிறியவள் ஆனாலும் தலைவி

 

2.தொன்மம் பற்றிய கூற்றுகளுள் தவறான ஒன்றைத் தேர்க?

) உருவாக்கப்பட்டு இறுகிவிட்ட வடிவங்கள்

) பழங்கதையைக் கொண்டு கருத்தை விளக்குவது

) நம்ப
முடியாதது போல் தோன்றும்
நிகழ்ச்சிகள் செய்திகள்.

) விளங்காத
கருத்துகளைப் பழமொழியின் மூலம் விளக்குவது

விடை: ) விளங்காத
கருத்துகளைப் பழமொழியின் மூலம் விளக்குவது.

 

3.சாபவிமோசனம்‘, ‘அகலிகைகதைகள் தொன்மங்களைப் பயன்படுத்தியவர்

) கு.
அழகிரிசாமி

)புதுமைப்பித்தன்

) ஜெயமோகன்

) எஸ்.
ராமகிருஷ்ணன்

விடை: ) புதுமைப்பித்தன்

 

4.பண்புக் குறியீடுகளைக் கதை மாந்தர்களோடு பொருத்துக

i) அறம்      1) 1) கர்ணன்

ii) வலிமை 2) மனுநீதிச் சோழன்

)நீதி        3) பீமன்

) வள்ளல் 4) தருமன்

)
3, 2, 1, 4

)
4, 3, 2, 1

)
2, 4, 3, 1

)
4, 3, 1, 2

விடை: ) 4, 3, 2, 1

 

5.தொன்மம்விளக்கம் தருக

விடை: கடவுளர்கள், தேவர்கள்,
மக்கள், விலங்குகள் ஆகிய
பல்வன உயிரினங்களையும் ஒருங்கிணைத்து, படித்தால் நம்ப முடியாதது
போல் தோன்றுகின்ற செய்திகளையும் நிகழ்ச்சிகளையும் கொண்டு
இயங்குகின் பழமையான கதைகள்
தொன்மம் என்று கூறுவர்.

 

6.பேச்சு வழக்கில் தொன்மம் வெளிப்படும் இருதொடர்களை எழுதுக?

விடை:

1.கிழித்த
கோட்டை தாண்ட மாட்டான்
.

2.இந்தா
போறான் சகுனி

 

7.உள்மனம் ஒரு பாற்கடல்

அதைக்
கடைந்தால் அமுதம் மட்டுமல்ல

ஆலகாலம்
வெளிப்படும் என்பதை நீ அறிவாய் அல்லவா

இக்கவிதையில் வெளிப்படும் தொன்மம் யாது?

விடை: கவிதையில் வெளிப்படும் தொன்மம் பாற்கடல், அமுதம்,
ஆலகாலம் ஆகியன தொன்மங்கள்..

 

நம்மை அளப்போம்

பலவுள் தெரிக

1.
பலர் துஞ்சவும் தாம் துஞ்சான் விழித்திருந்தவரும் அவரைப் பாடியவரும்

) சோழன்
நெடுங்கிள்ளி, பாணர்

) சோழன்
நலங்கிள்ளி, கோவூர்கிழார்

) கணைக்கால்
இரும்பொறையை, கபிலர்

) கரிகாலன்,
உருத்திரங்கண்ணனார்

விடை: ) சோழன்
நலங்கிள்ளி, கோவூர்கிழார்

 

2.அதிசய மலரின் புன்னகையைப் பிடித்தவாறு தமிழ்நதி கடக்கச் சொல்லு

) கடந்தகாலத் துயரங்களை

) பச்சையம்
இழந்த நிலத்தை

) ஆட்களற்ற
பொழுதை

) அனைத்தையும்

விடை: ) கடந்தகாலத் துயரங்களை

 

3.முச்சந்தி இலக்கியம் என்பது

கூற்று 1: கதை வடிவிலான வடிவம் உடையது

கூற்று 2 : பெரிய எழுத்துப் புத்தகம் என்று அழைக்கப்படுவது

) கூற்று
1
சரி, கூற்று 2 தவறு

) கூற்று
1, 2
சரி

) கூற்று
1, 2
தவறு

) கூற்று
1
தவறு, கூற்று 2

விடை: 1 ) கூற்று
1, 2,
சரி

 

4.உண்டு பிறந்து வளர்ந்த இடந்தனில்இத்தொடரில் பெயரெச்சம்

)
உண்டு

)
பிறந்து

)வளர்ந்த

)
இடந்தனில்

விடை: ) வளர்ந்த

 

5.யானை புக்க
புலம் போலஇவ்வுவமைக்குப் பொருத்தமான தொ டர்

)
தனக்குப் பயன்படும், பிறருக்குப் பயன்படாது..

)
தனக்கும் பயன்படாது, பிறருக்கும் பயன்படாது.

)
பிறருக்குப் பயன்படும், தனக்குப்
பயன்படாது

)
தனக்கும் பயன்படும், பிறருக்கும் பயன்படும்

விடை: ) தனக்கும்
பயன்படாது, பிறருக்கும் பயன்படாது.

 

குறுவினா

1.பருவத்தே பயிர் செய்நேர மேலாண்மையை பொருத்தி எழுதுக?

விடை:

எந்தப்
பருவத்திலே பயிர் செய்ய
வேண்டுமோ அந்தப் பருவத்திலேயே பயிர் செய்துவிடுவது நல்லது.
பருவங்கள் மாறிப் பயிர்
செய்தால் விளைச்சல் விளையாட்டு. உழைப்பு, பொருள் வீணாகும்
என்ற நேர மேலாண்மையை இத்தொடர் உணர்த்துகின்றது.

ஞாலம்
கருதினும் கைகூடும் காலம்

கருதி
இடத்தால் செயின்.

ஏற்ற காலத்தை
அறிந்து ஏற்ற இடத்தையும் தெரிந்து ஒரு செயலை
மேற்கொண்டால் உலகத்தையே
அடைய நினைத்தாலும் அதுவும்
கைகூடும் பருவத்தே பயிர்
செய்தால் உரிய விளைச்சலை,
பயனைப் பயிரானது தருவது
போல ஒரு செயலைச்
செய்வதற்கு ஏற்ற காலத்தைத்
தேர்வு செய்தால் வெற்றி
நிச்சயம் என்பது உறுதி.

 

2.எந்த ஒரு பொருளைப் பயன்படுத்தும் போதும் அதற்குப் பின்னால் உள்ள மனிதர்களின் உழைப்பு நாம் சிந்திப்பதில்லை. ஒரு தேநீர் பருகும் போது அதற்குப் பின்னால் உள்ள மனித உழைப்பைச் சிந்தித்து உங்கள் கருத்தை எழுதுக?

விடை:

நாம்
குடிக்கும் தேநீர் தானாக
வருவது அல்ல. பிறர்
உண்டாக்கிக் கொடுப்பது.

அதற்கு
நீர் வேண்டும்; சர்க்கரை
வேண்டும். தேயிலை வேண்டும்
.

அதைச்
சரியாகக் கலந்து கொடுக்கும் பக்குவம் வேண்டும் இத்தனை
பொருள்களைக் கொடுக்க நமக்கு
உதவியவர்கள் எத்தனை பேர்.

அதை
ஒருங்கிணைத்து கொடுப்பவர், உழைப்பு சேர்ந்துதான் நமக்குத்
தே கிடைக்கிறது.

சாதாரணமான
தேநீருக்காக இத்தனை பேருடைய
உழைப்பு தேவைப்படும் என்றால்,
நம் நலவாழ்விற்கு எத்தனை
பேருடைய உழைப்பு தேவைப்படும் எனவே உழைப்பவருடைய உழைப்பை
நாம் மதிக்கக் கற்றுக்கொள் வேண்டும்

 

3.அறிவுடை வேந்தனின் நெறி குறித்து, பிசிராந்தையார் கூறுவன யாவை?

விடை:

அறிவுடைய
அரசன். வரி திரட்டும்
முறை அறிந்து மக்களிடமிருந்து வரி திரட்டினால் நாடு,
கோடிக்கணக்கில் செல்வத்தைப் பெற்றுச் செழிப்படையும்.

 

4.
செவியறிவுறூஉ துறையை விளக்குக?

விடை:

அரசன்
செய்ய வேண்டிய கடமைகளை
முறை தவறாமல் செய்யுமாறு அவர் கேட்க அறிவுறுத்தல், செவியறிவுறூஉ என்னும்
துறையாகும்.

 

சிறுவினா

1.வேளாண் மேலாண்மை குறித்து நீவிர் பரிந்துரை பலவற்றை எழுதுக?

விடை:

வேளாண்மைக்குள்ளும் மேலாண்மைக் கூறுகள்
உண்டு.

சரியான
பயிரைத் தேர்ந்தெடுத்தல், உரிய
நேரத்தில் விதைத்தல், நீர்
மேலாண்மையை நெறிப்படுத்துதல், அறுவடைக்குப்பின் பாதுகாத்தல், உரிய
விலை வரும்வரை இருப்பு
வைத்தல் என்று ஒவ்வொரு
கட்டத்திலும் விழிப்புணர்வும், பொறுப்புணர்வும், நிருவாக
நெறியும் இணைந்தால்தான் வேளாண்மை
செழிக்கும்.

மேலும்
நிலத்தைக் காயவைப்பது, எருவைப்பது, உழுவது, களை பிடுங்குவது வேலி இடுவது, தண்ணீர்
பாய்ச்சுவது என்று நேர
மேலாண்மையும் வேளாண்
வேளாண்மையுடன் இணைப்பது
தேவையான ஒன்றாகும்.

 

2.அதிசய மலரின் பூச்செடி எவ்வாறு முளைத்ததாக, தமிழ்நதி கூறுகிறார்?

விடை:

குண்டு
மழை பொழிந்தது; நிலங்கள்
அழிக்கப்பட்டன ; மனிதர்கள்
சிதறி ஓடினர்.

மனிதர்கள்
எவரும் நடமாடாத பொழுதுகளில்தான் யானைகள் நடமாடும் அப்போது
அவை இட்ட எச்சத்தில் இருந்தோ அல்லது ஏதோவொரு
மனிதருடைய காலணிகளின் பின்புறம்
விதையாக ஓட்டிக்கிடந்தோ ஒரு
செடி உயிர் பெற்றிருக்கலாம்.

போரின்
பின் பிறந்த குழந்தையென அதிசய மலர் ஒன்று
மலர்கிறது.

அச்செடியில் மலரை அடையாளம் கண்டு
எங்கிருந்தோ வண்ணத்துப் பூச்சி
ஒன்று வருகிறது.

நாளை
பறவைகளும் அங்கு வரலாம்.

செடியிலிருந்து பெருங்காடு உருவாகலாம்.

அக்காடு
பெருமழையைக் கொண்டு வரும்
அந்த அதிசய மலரின்
புன்னகைப் பேரூழி கடந்து
பிழைத்திருக்கும்..

என
பூச்செடி தோன்றிய காரணத்தைத் தமிழ்நதி விளக்குகிறார்

 

3.எங்கிருந்தோ வருகிறது வண்ணத்துப் பூச்சி ஒன்று

விடை:

பறவைகளும்
வரக்கூடும் நாளைஇடஞ்சுட்டிப் பொருள் விளக்குக?

இடம்:

கவிஞர்
தமிழ்நதி எழுதியஅதிசயமலர்
என்ற கவிதையில் இடம்பெறுகின்ற வரிகள் இவை.

பொருள்:

மலரை
அடையாளம் கண்டு எங்கிருந்தோ வண்ணத்துப்பூச்சி ஒன்று
வருகிறது. நாளை பறவைகளும்
வரலாம்.

விளக்கம்:

குண்டு
மழை பொழிந்தது. நிலங்கள்
அழிக்கப்பட்டன. மனிதர்கள்
சிதறி ஓடினர். அழிக்கப்பட்ட மண்ணில் பூ ஒன்று
மலர்கிறது. யானைகளின் எச்சங்களில் இருந்தோ, எவருடைய காலணியின்
பின்புறம் கிடந்தோ எப்படியோ
செடி முளைத்தது. மலர்
மலர்ந்தது. பச்சையம் இல்லாத
சாம்பல் நிலத்து மலரை
நாடி வண்ணத்துப்பூச்சி ஒன்று
வந்துள்ளது. நாளை அதன்
சுவையைத்தேடி பறவைகளும்
வரும் என்ற நம்பிக்கையுடன் கவிஞர் வாழ்க்கையை எதிர்கொள்கிறார்.

 

4.
யானை புக்க புலம் போல

தானும்
கண்ணன் உலகமும் கெடுமேஉவமையையும் பொருளையும் பொருத்தி விளக்குக?

விடை:

உவமை:

யானை
தானாகச் சென்று வயலில்
நெற்கதிர்களை உண்ணத்
தொடங்கின தானும் உண்ணாமல்
பிறர்க்கும் பயன்படாமல் நெல்மணிகள் வீணாகும்.

உவமேயம்:

குடிமக்களிடம் நாள்தோறும் வரியைத் திரட்ட
விரும்பும் அரசன் தாது
பயனடைய மாட்டான்; நாட்டு
மக்களும் துன்புறுவர் .

உவம
உருபு: போல

விளக்கம்:

ஒரு
மாவிற்குக் குறைந்த நிலமாயினும் அதன்கண் விளைந்த நெல்லை
அறுத்து உணவாக்கிக் கவளமாகக்
கொடுத்தால் யானைக்கு பல
நாட்கள் உணவாகும். நூறு
மடங்கு பெரிய வயலாக
இருந்தாலும் யானை தனித்துச்
சென் வயலில் புகுந்து
உண்ணுமாயின் அதன் வாயில்
புகுந்த நெல்லை விட
அது கால்களில் மிதிபட்டு
அழிந்த நெல்லின் அளவு
அதிகமாகும் அதுபோல அறிவுடைய
அரசன், வரி திரட்டும்
முறை அறிந்து மக்களிடம்
இரு வரி திரட்டினால் நாடு கோடிக்கணக்கில் செல்வத்தைப் பெற்றுச் சிறப்படைய அரசன்
அறிவில் குறைந்தவனாகி முறை
அறியாத சுற்றத்தாரோடு ஆரவார
குடிமக்களின் அன்பு
கெடுமாறு நாள்தோறும் வரியைத்
திரட்ட விரும்புவது யார்
தான் புகுந்த நிலத்தில்
தானும் உண்ணாமல் பிறர்க்கும் பயன்படாமல் வீணாக்கு போன்றது.
அரசன் தானும் பயனடைய
மாட்டான். நாட்டு மக்களும்
துன்புறுவர்.

பொருத்தம்:

வயல்நாட்டிற்கும்

யானைமன்னனுக்கும் பயிர்மக்களுக்கும் நெல்மணிகளைத் தின்பதுவரி திரட்டுவதற்கும் உவமைகள் சொல்லப்பட்டுள்ளன..

 

நெடுவினா

1.எளிய மக்களின் வலிகளை நாட்டுப்புற இலக்கிய வடிவங்களே முழுமையாக பிரதிபலிக்கின்றனநிறுவுக?

விடை:

முன்னுரை:

19-ஆம்
நூற்றாண்டில் ஏற்பட்ட
பஞ்சத்தினாலும் வெள்ளையர்
வஞ்சத்தினாலும் ஆங்கிலேயரின் குடியேற்ற நாடுகளில் தமிழர்கள்
கரும்புத் தோட்டத் தொழிலாளர்களாகவும்,தேயிலைத் தோட்டக்
கூலிகளாகவும் புலம்
பெயர்ந்து துன்பக் கேணியில்
அல்லற்பட்டனர். அத்தகைய
எளிய விளிம்பு நிலை
மக்களின் வலிகளை கும்மிப்பாடல்கள் வந்த நூல்கள்
பேசிய தேயிலைத் தோட்டப்பாட்டுஎன்ற முகம்மது ராவுத்தர்
பாடலான நாட்டுப்புற இலக்கிய
வடிவம் இந்திய நாட்டு
எளிய மக்களின் வலிகளை
பிரதிபலிக்கின்றன.

அற்பப்பிராணி:

நாகரிகத்திலும் ராஜதந்திரத்திலும் சிறந்த
இந்திய கைத்தொழில் வல்ல
மக்கள் பஞ்சத்தினாலும் வெள்ளையர்
வஞ்சத்தினாலும் அற்பப்
பிராணிகளைப் போல் ஆக்கிவிட்டார்கள். அதனால் நம்
மக்கள் பிறந்து வளர்ந்து,
வாழ்ந்த இடங்களில் பேயினுக்கும் கீழாக, நாயினிக்கும் கீழாக
குழந்தைகளோடும் குடும்பத்தோடும் துன்பப்பட்டு துயரத்திற்கு உள்ளானார்கள்.

சாகும்
வரை தலைச்சுமை:

வேலைக்கு
வாருங்கள் என்று நம்மை
அன்புடன் அழைத்து ஒன்றைப்
பத்து நூறு. ஆயிரமாக
மாற்றி தவறு தவறாகக்
கணக்கெழுதினார்கள். சாகும்
வரைக்கும் தலைச்சுமையாக மாற்றினார்கள். கடனைக் கொடுக்க இயலாதவர்களை சாதுரியமாக பேசி கப்பலில்
ஏற்றி இலங்கை, அந்தமான்
போன்ற அக்கரை நாட்டில்
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் ஆக்கினர்.

மண்ணுளி பாம்பு:

அங்கும்
உண்ண உணவுக்கும், தேவைப்படும் செலவுக்கும் ஒவ்வொரு நாளும்
சிரமப்பட்டு குழந்தை, குடும்பத்துடன் மண்ணுளிப் பாம்பு வாழ
வைத்தார் (இவ்வளவு துன்பத்துக்கும் ஒரே காரணம், நம்மிடம்
கல்வி, ஒழுக்கம், நாகரிகம்
என்ப்வை இல்லாததுதான். எனவே
ஏற்றமுள்ள கல்வியைக் கற்று
ஒற்றுமையாய் வாழ்வோம்.

எளிய
மக்களின் வலிகள்:

எளிய
மக்களை இந்நாட்டுப்புற இலக்கிய
வடிவம் நாயினும் கீழ்;
பேயினும் கீழ் மண்ணுளிப்
பாம்புகள் என்று அருமையாகச் சுட்டுகின்றது. வெள்ளை
அதிகாரிகளை குரங்கு போன்றவர்கள் பதக்கங்காணிகள் எனச்
சுட்டுவது அருமை மண்ணுக்குள்ளே முகத்தைப் பதிய வைக்கும்
பாம்புகள் என்று மக்கள்
தங்களை வர்ணிக்கும்போது இதயத்தில்
இரத்தம் வடிகிறது. தேயிலைத்
தோட்டத் தொழிலாளர்களின் வலிகள்
மிக அழகாக இப்பாடல்
பதிவு செய்துள்ளது

முடிவுரை:

மக்கள்
இயல்பாகத் தங்கள் வாழ்வில்
ஏற்படும் தாக்கங்களை, வலிகளைப்
பாடல்கள் கதைப்பாடல்கள் உள்ளிட்ட
இலக்கிய வடிவங்களில் வெளிப்படுத்துகின்றனர். செவ்வியல் இலக்கிய
மரபு பாடாத. சொல்லாத
அல்லது புறக்கணித்த கருப்பொருள்களையெல்லாம் நாட்டுப்புற இலக்கியங்கள் பாடுபொருள்களாகின.

 

2.சங்க கால வரலாற்றை அறிந்து கொள்ள, புகளூர் கல்வெட்டு எவ்வகையில் துணை புரிகிறதுவிளக்குக

விடை:

முன்னுரை:

தொல்லியல்
கடந்த காலத்தைக் காட்டும்
கண்ணாடி கல்வெட்டுகள் கடந்த
காலத்தின் பக்கங்கள். தொல்லியல்
கல்வெட்டுகள் அந்தந்த
நிலப்பகுதிகளில் சமூக,
அரச, திருவாசகம் முதலியவற்றைக் குறித்த செய்திகளை அறியத்
துணை செய்கின்றன. அத்தகைய
சிறப்பு வாய்ந்த கல்வெட்டுகளில் ஒன்று புகளூர்க் கல்வெட்டாகும். அதனைக்கண்டறிந்தவர் ஐராவதம்
மகாதேவன் ஆவர்.

புகளூர் கல்வெட்டுகள்:

சங்ககாலத்
தமிழ் மன்னர்களைப் பற்றிய
எவ்விதமான புறச்சான்றுகளுமே தமிழகத்தில் கிடைக்கவில்லை என்ற
குறை நீங்கக் கிடைத்தவையே புகளூர்க் கல்வெட்டுகள், இந்திய
அரசின் தொல்பொருள் துறையினர்
ஆண்டுதோறும் வெளியிட்டு வந்த
தென்னிந்தியக் கல்வெட்டுகள் பற்றிய அறிக்கைகளில் ஆம்
ஆண்டுகளின் தொகுதியில் புகளூர்க்
கல்வெட்டுகளைப் பற்றிய
செய்திகள் முதன்முதலாகக் கிடைக்கின்றன.

இவ்வறிக்கையில் ஆறு நாட்டான் குன்றின்
மீதுள்ள குகைகளில் ஒன்றில்
நான்கு வரிகள் எழுதப்பட்டுள்ள ஒரு பிராமிக் கல்வெட்டு
இருப்பதாகவும், அதில்
ஆதன்என்ற சொல்
காணப்படுவதால் அக்கல்வெட்டு சேர மன்னர்கள் பற்றியதாக
இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

குகையின்
உயரமான வாயிலுக்கு மேலே
மிகப்பெரிய எழுத்துகளில் நான்கு
நீண்ட வரிகளில் தெளிவாகப்
பொறிக்கப்பட்டிருந்தது பிராமிக்
கல்வெட்டு, அதைக் கண்டதும்
ஐராவதம் மகாதேவன் கல்வெட்டு
எழுத்துக்கூட்டி வாசித்துப் படியெடுத்துக் கொண்டார்

கல்வெட்டுச் செய்தி:

புகளூர்க்
கல்வெட்டு நான்கு வரி
கல்வெட்டு. நாற்பது ஆண்டுகளாக
படிக்க முடியாமல் விட்டுவிட்ட கல்வெட்டு, சங்ககால வரலாற்றை
அறிந்து கொள்ளத் துணை
புரிகிறது.

புகளூர் கல்வெட்டு முழுவாசகம் பின்வருமாறு

அம்மண்ணன் யாற்றூர்
செங்காயபன் உறைய்

கோ ஆதன்
செல்லிரும் பொறை மகன்

பெருங் கடுங்கோன்
மகன் இளங்

 கடுங்கோ இளங்கோ
ஆக அறுத்த கல்

என்னும்
கல்வெட்டு முதல்வரியில்யாற்றூர்
என்னும் இடத்தைச் சேர்ந்த
இது சங்ககால தமிழ்
மன்னனின் கல்வெட்டுகள் என்பதை
உறுதி செய்கிறது சங்ககால
நூல்களில் மட்டும் இதுவரை
காணப்பட்ட பெருங்கடுங்கோ, இளங்கடுங்கோ, இளங்கோ ஆகிய பண்டைத்
தமிழ் மன்னர்களின் பெயர்கள்
முதன் முறையாக புகளூர்க்
கல்வெட்டு காணப்பட்டன.

சமண
துறவியானசெங்காயபன்வசிக்கும்
உறையுள் இது என்று
குறிப்பிடப்பட்டிருந்தது, இரண்டாவது
வரியில் உள்ளகோ
என்ற முதல் சொல்லே
இக்கல்வெட்டு கருவூரில்
இருந்து ஆட்சி செய்த
சேரல் இரும்பொறை மன்னர்கள்
பொறித்தது. பதிற்றுப்பத்தில், ஏனைய
சில சங்க நூல்களிலும் பாடப்பெற்ற பழந்தமிழ் மன்னர்கள்
இவர்கள். இக்கல்வெட்டு கி.பி.
இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்தது.
புகளூர்க் கல்வெட்டு காணப்படும் மூன்று தலைமுறை மன்னர்கள்
முறையே பதிற்றுப்பத்து ஏழாவது.
எட்டாவது, ஒன்பதாது பாட்டுடைத் தலைவர்கள் ஆவர்.

முடிவுரை:

பதிற்றுப்பத்தில் இடம்பெற்ற சேர
அரசர்களின் பெயர்கள் புகளூர்க்
கல்வெட்டு இடம்பெற்றுள்ளதை ஐராவதம்
மகாதேவன் கண்டுபிடித்தது இலக்கியத்தையும், கல்வெட்டாய்வையும் ஒருங்கிணைத்தது. சங்க காலத்தை அறிய
இலக்கியங்கள் மட்டுமே
துணை என்றிருந்த நிலையில்
கல்வெட்டுகளும் துணையாக
இருப்பதை புகளூர்க் கல்வெட்டு
மூலம் நன்கு அறிந்து
கொள்ளலாம்.

 

3.
நிர்வாக மேலாண்மை குறித்து வெ. இறையன்பு கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.

முன்னுரை:

மனித
இனம் தோன்றியபோதே மேலாண்மையும் துளிர்க்கத் தொடங்கி விட்டது.
புராதன மனிதரிடம் குருத்துவிட்ட தலைமைப் பண்பும் வழிநடத்தும் இயல்புகளுமே அவனை இயற்கையோடு இயையவும் இடர்களைத் தாண்டி
நீடிக்கவும் உதவின.

நிர்வாக மேலாண்மை:

உயர்பதவிகளில் இருப்பவர்கள் எல்லாவற்றிலும் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பது சாத்தியமில்லை, ஆனால்
யார் திறமைசாலிகள் என்று
அறிந்து அவர்களை அருகில்
வைத்துக் கொண்டால்போதும். தெரிந்திருப்பது ஒரு வகை அறிவு
என்றால், யாருக்குத் தெரியும்
என்று தெரிந்திருப்பது மற்றோர்
அறிவு. நாலடியார் அதையே
பக்குவமாகச் சொல்கிறார்

கல்லாரே
யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்

நல்லறிவு
நாளுந் தலைப்படுவர்தொல்சிறப்பின்

ஒண்ணிறப்
பாதிரிப்பூச் சேர்ந்தலாற் புத்தோடு

தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு”.

நிருவாகத்தில் வரவே செலவைத் தீர்மானிக்க வேண்டும். வரவைத் தாண்டி
நிறையச் செலவு செய்பவன்,
அடுத்தவர்களிடம் கையேந்த
வேண்டிய அவல் நிலைக்குத் தள்ளப்படுவோம்.

டைமன்
என்பவன் ஏதென்ஸ் நகரில்
இருந்தான். அவன் வரவு
குறைந்தால் செலவு நீடித்தது.
அவனது உதவியாளர் நிதி
நிலைமையை பற்றி பேச
வருகிற பொழுதெல்லாம் கேட்க
மறுத்து. ஒரு கட்டத்தில் கடன் கொடுத்தவர்கள் கழுத்த
நெரிக்கிறார்கள். ஆனால்
அப்போதும் அவன் வருந்தவில்லை . தான் அளித்த விருந்தை
உண்டவர்கள், உதவுவார்கள் என்று
பொய்க்கணக்குப் போடுகிறான் அவனுடைய சேவகர்கள் நான்கு
திசைகளிலும் சென்று வெறும்
கையோடும் வெளிறிய முகத்தோடும் திரும்புகிறார்கள். அவன்
ஊருக்கு ஒதுக்குப்புறமாகச் செல்கிறான். மனித இனத்தையே வெறுக்கிறான். ‘டைமன் பற்றிய ஷேக்ஸ்பியரின் நாடகம் நிதி மேலாண்மை
பற்றிய மிகச் சிறந்த
வாழ்வியல் விளக்கம்.

அவ்வையார் நல்வழியில்,

ஆன
முதலில் அதிகம் செலவானால்

மானம்
அழிந்து மதிகெட்டுப்போனதிசை

எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்

நல்லார்க்கும் பொல்லனாம் நாடு“.

என்று நிதியைக்
கண்டபடி கையாள்பவர்களுக்கு அறிவுறுத்துகிறார்.

நிர்வாக நெறி:

அடுத்தவர்
நலனுக்காக வாழ்பவரே தலைமைப்
பண்பு மிக்கவர். இந்திரர்க்குரிய அமுதமே கிடைப்பதாயினும் அது
நமக்கு இனியது எனக்
கருதித் தாமே தனித்து
உண்ணாதவர் அவர். அப்படித்தான் அதியன் ஔவைக்கு நெல்லிக்கனியைத் தந்தான். இவ்வாறு நிருவாக
நெறிகளை இலக்கியங்கள் பகர்ந்தன.

முடிவுரை:

நாட்டின்
முன்னேற்றம் மேலாண் சிந்தனையில் தொடங்குகிறது. உலக
இலக்கியங்கள் அனைத்திலும் மேலாண்மைக் கருத்துகள் மென்மையாகப் பரவிக் கிடக்கின்றன. அவை
பன்னீர்ப் புஷ்பங்கள் காற்றில்
பரவவிடும் வானத்தைப் போல
வசீகரமானவை.

download2Bbutton 4 Tamil Mixer Education

Related Post

Leave a Comment

× Xerox Shop [1 page - 50p Only]