1.
படத்துக்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டுபிடிக்க
அ)
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும்
பயனும் அது
ஆ)
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
இ)
சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்
ஏமப்
புணையைச் சுடும்.
விடை: இ) சினம்
என்னும் சேர்ந்தாரைக் கொல்லி
இனம் என்னும் ஏமப்
புணையைச் சுடும்.
2.
கடலின் பெரியது
அ)
உற்ற காலத்தில் செய்த உதவி
ஆ)
பயன் ஆராயாமல் ஒருவர் செய்த உதவி
இ)
தினையளவு செய்த உதவி
விடை: ஆ) பயன்
ஆராயாமல் ஒருவர் செய்த
உதவி
3. பின்வரும்
நாலடியார் பாடலின் பொருளுக்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டறிக.
நல்லார்
நயவர் இருப்ப நயம் இலாக்
கல்லார்க்
கொன்றாகிய காரணம் – தொல்லை
வினைப்பயன்
அல்லது வேல்நெடுங் கண்ணாய்
நினைப்ப
வருவதொன் றில்
அ)
இருவேறு உலகத்து இயற்கை; திருவேறு
தெள்ளியர்
ஆதலும் வேறு.
ஆ)
நல்லவை எல்லாம் தீயவாம் தீயவும்
நல்லவாம்
செல்வம் செயற்கு
இ)
ஊழில் பெருவலி யாஉள மற்று ஒன்று
சூழினும்
தான்முந்து உறும்.
விடை: ஆ) நல்லவை
எல்லாம் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம்
செயற்கு
4. கீழ்க்காணும் புதுக்கவிதைக்குப்
பொருந்தும் திருக்குறளைக் தேர்ந்தெடுக்க.
உயர்
அலுவலரின் வருகை
அலுவலகமே
அல்லாடும்
அவருடைய
சினம் அனைவரும் அறிந்ததே
கோப்புகளை
விரைந்து முடிக்க
ஒழுங்கு
செய்ய
நேரத்தில்
இருக்க வேண்டும்
விரைகிறது
மனம்
பரபரப்பும்
மனவழுத்தமுமாய்
வண்டியை
எடுக்கிறேன்
காலைக்
கட்டிக் கொள்கிறது குழந்தை
‘போ அந்தப் பக்கம்’
உதறிச்
செல்கிறேன் குழந்தையை.
விடை: செல் இடத்துக்
காப்பான் சினம்காப்பான் அல்இடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்?
5. இலக்கணக்
குறிப்புத் தருக.
விடை:
அன்பும்
அறமும் – எண்ணும்மை
நன்கலம்
– பண்புத் தொகை
மறத்தல்
– தொழிற் பெயர்
உலகு
– இடவாகு பெயர்
6.
பொருள் கூறுக.
விடை: வெகுளி – கோபம்
புணை – தெப்பம்
ஏமம் – பாதுகாப்பு
திரு – செல்வம்
7.
வையகமும் வானகமும் ஆற்றலரிது – எதற்கு?
அ)
செய்யாமல் செய்த உதவி
ஆ)
பயன் தூக்கார் செய்த உதவி
இ)
தினைத்துணை நன்றி
ஈ)
செய்ந்நன்றி
விடை: அ) செய்யாமல்
செய்த உதவி
8.
பகையும் உளவோ பிற? – பொருள் கூறுக.
விடை: முகமலர்ச்சியையும் அகமகிழ்ச்சியையும் கொல்லுகின்ற சினத்தை
விட வேறுபகை இல்லை.
9.
செல்லிடத்து – புணர்ச்சி விதி கூறுக.
விடை: செல்லிடத்து = செல்
+ இடத்து
‘தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்’ என்ற விதிப்படி,
செல் + ல் + இடத்து
என்றாகியது.
உடல்
மேல் உயிர் வந்து
ஒன்றுவதே இயல்பு என்ற
விதிப்படி, ல் + இ
= L = செல்லிடத்து என்று புணர்ந்தது.
10.
பொருத்திக் காட்டுக.
அ)
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் – 1. சேர்ந்தாரைக் கொல்லி
ஆ)
பயன்தூக்கார் செய்த உதவி – 2. ஞாலத்தின் மாணப் பெரிது
இ)
சினம் – 3. தெய்வத்துள் வைக்கப்படும்
ஈ)
காலத்தினாற் செய்த நன்றி – 4. நன்மை கடலின் பெரிது
அ)
4, 3, 2, 1
ஆ)
3, 4, 1, 2
இ)
1, 2, 3, 4
ஈ)
2, 3, 4, 1
விடை: ஆ) 3, 4, 1, 2
குறுவினா
1.
முயல்வாருள் எல்லாம் தலை என வள்ளுவர் யாரைச் சுட்டுகிறார்?
விடை: அறத்தின் வழியாக
இல்லற வாழ்க்கை வாழ்பவர்
முயல்வருள் எல்லாம் தலையானவர்.
2.
ஞாலத்தின் பெரியது எது?
விடை: ஒருவர் நமக்கு
உரிய காலத்தில் செய்த
உதவியானது அளவில் சிறியதாக
இருந்தாலும், அஃது உலகைவிடப்
பெரியதாகும்.
3. மறக்கக்
கூடாதது, மறக்கக் கூடியது எவற்றை ?
விடை: ஒருவர் நமக்குச்
செய்த நன்மையை ஒருநாளும்
மறக்கக்கூடாது.
ஒருவர் நமக்குச்
செய்த தீமையை அப்பொழுதே
மறந்து விட வேண்டும்.
மறக்க கூடாதது
– நன்மை ; மறக்கக்கூடியது – தீமை.
4. செல்வம்
இருப்பதற்கான வழியாக வள்ளுவம் உரைப்பன யாவை?
விடை: ஒருவரிடம் இருக்கும்
செல்வம் குறையாமலிருக்க வேண்டுமென்றால், அவர் பிறருடைய கைப்பொருளை விரும்பாமல் இருத்தல் வேண்டும்.
5.
சினத்தை ஏன் காக்க வேண்டும் ?
விடை: சினமானது தன்னைக்
கொண்டவனையே அழித்து விடும்.
எனவே தன்னைக் காத்துக்
கொள்ள விரும்புகிறவன் சினத்தைக்
காக்க வேண்டும்.
சிறுவினா
1.
‘அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும்
பயனும் அது’ – இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக.
விடை:
இக்குறட்பாவில் பயின்று
வரும் அணி நிரல்நிறை
அணியாகும்.
அணி
இலக்கணம்:
ஒரு
செய்யுளின் முதலில் சொல்லையும் பொருளையும் வரிசையாக (நிரலாக)
நிறுத்தி, அவ்வரிசைப்படியே பொருள்கொள்ளும் முறையாகும். அதாவது சில
சொற்களை முதலில் ஒரு
வரிசையில் வைத்து, அச்சொற்களோடு தொடர்புடைய சொற்களை அடுத்த
வரிசையில் முறைமாறாமல் சொல்வது
நிரல் நிறை அணியாகும்.
பொருள்:
இல்வாழ்க்கையில் நாம் அன்பும் அறனும்
கொண்டு ஒழுகினால், அதுவே
நமக்கு வாழ்க்கையின் பண்பினையும் பயனையும் முழுமையாகத் தரும்.
அணிப்பொருத்தம்:
இக்குறட்பாவில் அன்பு, அறன் என்ற
சொற்களை முதலில் ஒரு
வரிசையில் நிறுத்திய திருவள்ளுவர் அவற்றோடு தொடர்புடைய பண்பு,
பயன் என்பவற்றை முறையே
அடுத்த வரிசையில் இணைத்து
பொருள் கொள்ளுமாறு அமைத்துள்ளார். எனவே, இக்திருக்குறள் ‘நிரல்
நிறை அணிக்குப் பொருத்தமாயிற்று.
அன்பு
– பண்பு ; அறன் – பயன்
என்று நிரல்பட உள்ளது.
2.
இல்வாழ்க்கை சிறப்புற அறநெறியோடு வாழ்தலின் முக்கியத்துவத்தை வள்ளுவர் வழிநின்று விளக்குக.
விடை:
(i) ஒருவன்
எல்லா உயிர்களிடத்தும் அன்பு
காட்டியும், அறச்செயல்கள் செய்தும்
வாழும் இல்லற வாழ்வைப்
பெறுவான் என்றால், அவன்
இல்வாழ்க்கை அன்பினால் உருவான
நல்ல பண் பையும்,
அறச் செயலினால் உருவாகின்ற நல்ல புகழாகிய பயனையும்
அடைவான்.
(ii) அறத்தின்
இயல்போடு இல்லற வாழ்க்கையை வாழ்பவன் முயற்சி செய்து
புகழடைய விரும்பும் எல்லாரை
விடவும் தலைசிறந்தவன் ஆவான்.
(iii) உலகத்தில்
வாழவேண்டிய அறநெறியில் நின்று
வாழ வேண்டும். அவ்வாறு
வாழ்ந்தால் வானுலகத்தில் உள்ள
தெய்வத்திற்கு இணையாக
மதிக்கப்படுவார்.
3.
எவற்றையெல்லாம் விட நன்றி உயர்ந்தது? குறள் வழி விளக்குக.
விடை:
இந்நில
உலகம், வானகம், கடல்,
பனை இவைகளை விடவும்
நன்றி உயர்ந்தது.
நாம்
பிறருக்கு எந்த ஒரு
உதவியும் செய்யாமலிருக்கும் நிலையில்
பிறர் நமக்குச் செய்த
உதவியை நினைத்துப் பார்த்தால் விண்ணுலகத்தையும் மண்ணுலகத்தையும் கொடுத்தாலும் ஈடாகாது.
ஒருவர்
நமக்கு உரிய காலத்தில்
செய்த உதவியானது அளவில்
சிறியதாக இருந்தாலும், அது
உலகை விடப் பெரியதாகும்.
மறுபலனை
எதிர்பார்க்காமல் ஒருவர்
நமக்குச் செய்த உதவியின்
அளவை ஆராய்ந்து பார்த்தால், அதன் நன்மை கடலை
விடப் பெரியதாகும்.
ஒருவர்
தினையளவு உதவியைச் செய்தாலும் அதன் பயனை அனுபவித்து அறிந்தவர்கள் அவ்வுதவியை பனையளவாகக் கொள்வர்.
4.
சினத்தால் வரும் கேட்டினைக் கூறுக.
விடை:
நமக்கு
ஏற்படும் தீமையான விளைவுகள்
அனைத்தும் நாம் கொள்ளும்
சினத்தால் வரும். அதனால்,
நாம் யாரிடமும் சினம்
கொள்ளாமல் அதை மறந்து
விட வேண்டும்.
சினம்
என்னும் பகை, முகத்தில்
அழகு கூட்டுகின்ற சிரிப்பையும், உள்ளத்தில் அருளைக் கூட்டுகின்ற மகிழ்ச்சியையும் கொள்ளும்.
சினமானது
தன்னைக் கொண்டவனையே அழித்து
விடும். எனவே தன்னைக்
காத்துக் கொள்ள விரும்புகிறவன் சினத்தைக் காக்க வேண்டும்.
சினமானது,
தன்னைச் சேர்ந்தவரையும் அழிக்கும்
நெருப்பாகும். அஃது
ஒருவருடைய சுற்றம் என்கின்ற
பாதுகாப்புத் தெப்பத்தையும் சுட்டழித்து விடும்.
5.
கீழ்க்காணும் குறளில் ஏகதேச உருவக அணி எவ்வாறு பயின்று வருகிறது என்பதை விளக்குக.
சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்
ஏமப் புணையைச் சுடும்.
விடை:
சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்
ஏமப் புணையைச்
சுடும்.
இக்குறட்பாவில் ஏகதேச உருவக அணி
பயின்று வருகின்றது.
அணி
இலக்கணம்:
கவிஞர்
செய்யுளில் இரு பொருள்களைக் கூறி அதில் ஒன்றை
மட்டும் உருவகப்படுத்தி, அதற்கேற்ப
இணையானதொரு பொருளை உருவகம்
செய்யாது விட்டுவிடுவது ஏகதேச
உருவக அணியாகும்.
விளக்கம்:
சினம்
தன்னைக் கொண்டவனை மட்டுமல்லாமல் அவனைச் சேர்ந்த சுற்றத்தாரையும் சேர்த்து அழிந்துவிடும். தன்னைச்
சேர்ந்தவரையும் அழித்துவிடும் கொல்லியாகிய சினம், நம்மை
மட்டுமில்லாமல் நமக்குப்
பாதுகாப்பாக இருக்கக்கூடிய இனமென்னும் தெப்பத்தை அழித்துவிடும்.
அணிப்பொருத்தம்:
இக்குறட்பாவில் இனம் என்பதைத் தெப்பமாக
உருவகப்படுத்தியுள்ள வள்ளுவர்
சினத்தை உருவகப்படுத்தாமல் விட்டுள்ளார். எனவே, இக்குறட்பாவில் ஏகதேச
உருவக அணி பயின்று
வந்துள்ளது.
நெடுவினா
1.
செய்ந்நன்றியறிதலே அறம் என்பதை வாயுறை வாழ்த்தின் துணைக்கொண்டு நிறுவுக.
விடை:
விண்
மண்:
“செய்யாமல்
செய்த உதவிக்கு வையகமும்
வானகமும்
ஆற்ற லரிது”
நாம் பிறருக்கு
எந்த ஒரு உதவியும்
செய்யாமலிருக்கும் நிலையில்
பிறர் நமக்குச் செய்த
உதவியை நினைத்துப் பார்த்தால் விண்ணுலகத்தையும் மண்ணுலகத்தையும் கொடுத்தாலும் ஈடாகாது.
உலகம்:
“காலத்தி
னால்செய்த நன்றி சிறிது
எனினும்
ஞாலத்தின்
மாணப் பெரிது”
ஒருவர் நமக்கு
உரிய காலத்தில் செய்த
உதவியானது அளவில் சிறியதாக
இருந்தாலும் அது உலகத்தின்
அளவை விடப் பெரியதாகும்.
கடல்:
“பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை
கடலிற் பெரிது”
எந்தப் பயனையும்
எதிர்பார்க்காமல் ஒருவர்
நமக்குச் செய்த உதவியின்
அளவை ஆராய்ந்து பார்த்தால், அதன் நன்மை கடலைவிடப்
பெரியதாகும்.
பனை:
“தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர்
பயன்தெரி வார்”
ஒருவர் தினையளவு
உதவியைச் செய்தாலும் அதன்
பயனை அனுபவித்து அறிந்தவர்கள் அவ்வுதவியைப் பனையளவாகக் கொள்வர்.
வாழ
வழி:
“நன்றி
மறப்பது நன்றன்று; நன்றல்லது
அன்றே
மறப்பது நன்று”
ஒருவர் நமக்குச்
செய்த நன்மையை ஒருநாளும்
மறக்கக்கூடாது. ஒருவர்
நமக்குச் செய்த தீமையை
அப்பொழுதே மறந்துவிட வேண்டும்.
தப்பிக்க முடியாது.
“எந்நன்றி
கொன்றார்க்கும் உய்வுண்டாம்;
உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு”
எந்த அறத்தை
அழித்தாலும் தப்பிப் பிழைக்கலாம். ஆனால், ஒருவர் செய்த
உதவியை மறந்தவர்க்குத் தப்பிப்
பிழைக்கும் வழியே கிடையாது.
எனவே,
செய்ந்நன்றியறிதலே சிறந்த
அறம் என்பதனை வள்ளும்
உணர்த்துகின்றது.
2.
சினத்தைக் காத்தல் வாழ்வை மேன்மைப்படுத்தும்.
இக்கூற்றை முப்பால் வழி விரித்துரைக்க.
விடை: சினமானது அருள்
உள்ளத்தை அழித்து மெய்யுணர்வை அடையாது செய்துவிடும். சினத்தைக்
காத்தால் வாழ்வு மேன்மையடையும் சினத்தைக் காப்பான்.
சினம்
செல்லுமிடம்:
“செல்
இடத்துக் காப்பான் சினம்காப்பான் அல்இடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்?”
தன் சினம்
செல்லுபடியாகும் தன்னை
விடவும் மெலியாரிடத்தில் சினம்
கொள்ளாமல் சினத்தைக் காத்துக்
கொள்பவனே உண்மையில் சினத்தைக்
காப்பவனாவான்.
மறத்தல் நன்று:
“மறத்தல்
வெகுளியை யார்மாட்டும்; தீய
பிறத்தல்
அதனான் வரும்”
ஒருவனுக்குத் தீமையான
விளைவுகள் சினத்தாலேயே ஏற்படும்
என்பதால் யாரிடத்திலும் சினம்
கொள்ளாமல் அதனை மறந்துவிடுவது நன்மையாகும்.
சினம்
எனும் பகை:
“நகையும்
உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும்
உளவோப் பிற?”
சினம் எனும்
பகை, முகத்தில் அழகு
கூட்டுகின்ற சிரிப்பையும், உள்ளத்தின் அருளுக்கு அழகு கூட்டுகின்ற மகிழ்ச்சியையும் கொல்லும்.
தன்னைக்காக்க சினம்
தவிர்:
“தன்னைத்தான் காக்கின் சினம்காக்க; காவாக்கால்
தன்னையே
கொல்லுஞ் சினம்”
சினமானது தன்னைக்
கொண்டவனையே அழித்துவிடும். எனவே,
தன்னைக் காத்துக் கொள்ள
விரும்புகிறவன் சினத்தைக்
காக்க வேண்டும்.
சுற்றம் பேண
சினத்தைத் தவிர்:
“சினம்
என்னும் சேர்ந்தாரைக் கொல்லி
இனம்என்னும்
ஏமப்
புணையச் சுடும்”
சினமானது, தன்னைச்
சேர்ந்தவரையும் அழிக்கும்
நெருப்பாகும். அஃது
ஒருவனுடைய சுற்றம் என்கின்ற
பாதுகாப்புத் தெப்பத்தையும் சுட்டழித்து விடும். எனவே,
சினத்தைக் காத்தோமென்றால், எளியவரோடு
பகை மேற்கொள்ளமாட்டோம்; யாரிடத்தும் சினம் கொள்ள மாட்டோம்;
முகமலர்ச்சியும், அகமகிழ்ச்சியும் அதிகமாகும்; தன்னையே காத்துக்
கொள்வோம்; சுற்றத்தையும் காப்பாற்றுவோம். இதனால் வாழ்வு மேன்மைப்படுத்தப்படும் என்று முப்பால்
கூறுகின்றது.