Home12th Standard Tamil Book Back Questions12th Tamil - Lesson 3 - சுற்றத்தார் கண்ணே உள - New Book...
- Advertisment -

12th Tamil – Lesson 3 – சுற்றத்தார் கண்ணே உள – New Book Back Question & Answers

 

12th tamil lesson 3 sutraththaar kannae ula new book back question answers 813295949 Tamil Mixer Education
download2Bbutton 8 Tamil Mixer Education

இலக்கணத் தேர்ச்சிகொள்

1.பொருள் குழப்பமின்றி எழுதுவதற்குரிய காரணங்களுள் பொருந்துவதைத் தேர்க

)
தேவையான இடங்களில் இடைவெளி
விடாமல் எழுதுதல்

)
தேவையற்ற இடங்களில் இடைவெளி
விட்டு எழுதுதல்

)
நிறுத்தக்குறிகளை உரிய
இடங்களில் இட்டு எழுதுதல்

)வல்லின
மெய்களைத் தேவையான இடங்களில்
இடாமல் எழுதுவதால்

விடை: ) நிறுத்தக்குறிகளை உரிய இடங்களில்
இட்டு எழுதுதல்

 

2.
வல்லினம் மிகும், மிகாத் தொடர்களின் பொருளறிந்து பொருத்துக

)
பாலை பாடினான்             1)தேரை
என்னும் உயிரினத்தைப் பார்த்தான்.

)
பாலைப் பாடினான்                   2)
தேரைப் பார்த்தான்.

)
தேரை பார்த்தான்              3)
பாலைப் பாடினான்.

)தமிழர்
குடும்ப முறை                    4)
பாலைத் திணை பாடினான்

) 4, 1, 3, 2 )
2, 3, 1, 4
) 4, 3, 1, 2 )
2, 4, 1,

விடை: ) 4, 3, 1,2

 

3.வேறொரு பொருள் அமையுமாறு சொற்களைச் சேர்த்துத் தொடரமைக்க:

மாணவர்கள் வரிசையில்
நின்று அறிவியல் கண்காட்சியைக் கண்டனர்

விடை: அறிவியல் கண்காட்சி
மாணவர்கள் வரிசையில் நின்று
கண்டேன்

4.கீழ்க்காணும் சொல்லுருபுகளைப் பிரித்தும் சேர்த்தும் இருவேறு தொடர்களை அமைக்க

12th tamil lesson 3 sutraththaar kannae ula new book back question answers 1938728198 Tamil Mixer Education


 

5.காற்புள்ளி இடாமல் எழுதுவதனால் ஏற்படும் பொருள் மயக்கத்திற்கு சான்று தருக

விடை:

சான்று: நீ
என் அக்கா நான்
உன் தம்பி சுற்றுலா
செல்வோம்.

மேற்கண்ட
தொடரில் காற்புள்ளி இடாமல்
எழுதினால் நீ என்
அக்கா, நான் உன்
தம்பி என பொருள்
உண்டாகும். காற்புள்ளி இட்டால்
நீ, என் அக்கா,
நான், உன் தம்பி
என்று பொருள் உண்டாகும்.

 

6.சல சல, வந்து வந்து, கல கல, விம்மி விம்மி. இவற்றில் இரட்டைக்கிளவி தொடர்களை எழுதி, அவற்றை எழுதும் முறையைக் கூறுக:

விடை: இவற்றில் சலசல,
கலகல என்பது இரட்டைக்
கிளவிகள் ஆகும். இரட்டை
கிளவிச் சொற்களைச் சேர்த்தே
எழுத வேண்டும்

நீர் சலசலவென
ஓடியது

மாலா கலகலவெனச்
சிரித்தாள்

 

7.
திருவருட்செல்வர், திருவளர் செல்வன்இவற்றில் சரியான தொடர் எது அதற்கான இலக்கண விதி யாது?

விடை: இவற்றில் திருவளர்
செல்வன் என்பதே சரியான
தொடராகும். ஏனென்றால் வினைத்தொகை சொல்லுக்கு இடையில் வல்லினம்
மிகுதல் கூடாது.

 

நம்மை அளப்போம்

பலவுள் தெரிக

1.சங்க இலக்கியத்தில் இல்லாத சொற்கள், சங்காலச் சமூகத்தில் நடைமுறையில் இருந்துள்ளன. அவை….

)
அறவோர், துறவோர்

)
மன்றங்களும், அவைகளும்

)
திருமணமும் குடும்பமும்

)
நிதியமும் சுங்கமும்

விடை : ) திருமணமும் குடும்பமும்

 

2.பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க

) உரிமைத்தாகம்       1)பாரசீகக்
கவிஞர்.

) அஞ்ஞாடி      2) பூமணி

) ஜலாலுத்தீன் ரூமி   3)
பக்தவத்சல பாரதி

) தமிழர்
குடும்ப முறை         4 .சாகித்ய அகாதெமி

)
2, 4, 3, 1 

)2,4,
1, 3

)
3, 4, 1, 2

)
2, 3, 4, 1

விடை : ) 2, 4, 1, 3

 

3.இவற்றை வாயிலுக்கே சென்று இன்முகத்துடன் வரவேற்பாயாக என்று ஜலாலுத்தீன் ரூமி குறிப்பிடுவது

)
வக்கிரம்

)
அவமானம்

)
வஞ்சனை

)
இவை அனைத்தும்

விடை: ) இவை
அனைத்தும்

 

4.உவா உற வந்து கூடும்

உடுபதி,
இரவி ஒத்தார்யார் யார்?

)
சடாயு, இராமன்

)
இராமன், குகன்

)
இராமன், சுக்ரீவன்

)
இராமன், சவரி

விடை: ) இராமன்,
சுக்ரீவன்

 

5.எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலேஒரு

சக்தி
பிறக்குது மூச்சினிலேஎன்னும் பாரதியின் பாடல் வெளிப்படுத்துவது

)
தனிக்குடும்ப முறை

)
தாய்வழிச் சமூகம்

)
விரிந்த குடும்ப முறை

)
தந்தைவழிச் சமூக முறை

விடை: ) தந்தைவழிச் சமூக முறை

 

குறுவினா

1.புக்கில், தன்மனைசிறுகுறிப்பு எழுதுக

விடை:

புக்கில்: தற்காலிகமாகத் தங்குமிடம்புக்கில்எனப்படும்

தன்மனை:  திருமணத்திற்குப் பின்
கணவனும் மனைவியும் பெற்றோரிடம் இருந்து பிரிந்து தனியாக
வாழும் இடம்தன்மனை
எனப்படும்.

 

2.நிலையாமை குறித்து, சவரி உரைக்கும் கருத்து யாது?

விடை:

நிலையாமை குறித்து சவரி
உரைக்கும் கருத்து

என்
பொய்யான உலகப்பற்று ஒழிந்தது.

அளவற்ற
காலம் நான் மேற்கொண்டிருந்த தவம் பலித்தது.

என்பிறவி
ஒழிந்தது ,என்று இராமனிடம்
சவரி கூறினார்.

 

3.எதிர்பாராத நிகழ்வுகளை ஜலாலுத்தீன் ரூமி எவ்வாறு உருவகப்படுத்துகிறார்?

விடை: நம் மனித
வாழ்க்கை ஒரு விருந்தினர் இல்லம் போன்றது. அந்த
இல்லத்திற்கு ஒவ்வொரு
நாள் காலையிலும் ஒருவர்
வந்து கொண்டு இருப்பார்.
ஓர் ஆனந்தம், சற்று
மனச்சோர்வு, சிறிது அற்பத்தனம், சிறிய விழிப்புணர்வு என்ற
ஏதாவது ஒருவர் எதிர்பாராத விருந்தாளியாக வந்து
செல்வார்.என்று ஜலாலுத்தீன் ரூமி உருவகப்படுத்துகிறார்.

 

4.
துன்பு உளது எனின் அன்றோ சுகம் உளது? என்ற இராமனின் கூற்று பின்வரும் இரு பழமொழிகள் எதற்குப் பொருந்தும்?

)
நிழலின் அருமை வெயிலில்
தெரியும்

)
சிறு துரும்பும் பல்
குத்த உதவும்

விடை: ) நிழலின்
அருமை வெயிலில் தெரியும்

 

5. சங்ககாலத்தில் தாய்வழிச் சமூகமுறையில் பெண்கள் பெற்றிருந்த உரிமைகள் யாவை ?

 

சிறுவினா

1.பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியே இன்றைய கூட்டுக் குடும்பம் விளக்கம் எழுதுக?

விடை:

சங்ககாலத்தில் தனிக்குடும்ப அமைப்புவிரிவு பெற்று இவர்களுடன் பெற்றோர்
ஒருவரின் தந்தையும் உடன்வாழும்விரிந்த குடும்பமுறையையும் காண முடிகிறது

கணவன்,
மனைவி, மகன் ஆகியோருடன் தந்தை சேர்ந்து வாழ்ந்த
நேர்வழி குடும்ப முறையை
ஒக்கூர் மாசாத்தியார் பாடலில்
காணலாம்

விரிந்த
குடும்பத்தில் இல்லற
வாழ்வின் இறுதிக் காலத்தில்
பெருமைகள் நிறைந்த மக்களுடன்
நிறைந்து, அறத்தினை விரும்பிய
சுற்றத்தோடு சேர்ந்து கணவனும்
மனைவியும் மனையறம் காத்தலே
இல்வாழ்வில் பயனாகும் என
எண்ணினார்கள்

தொல்காப்பியரும், விரிந்த குடும்பம் பற்றிய
இக்கருத்தினைப் பதிவு
செய்கிறார்.

சங்ககாலச்
சமூகம் குடும்பம் என்ற
அமைப்பை அடிப்படை அலகாகக்
கொண்டு இருந்த நிலையைச்
சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன இன்றைய சூழலில், கணவன்,
மனைவி, மகன், மகள்
ஆகியோருடன் கணவன் அல்லது
மனைவியின் பெற்றோர் சேர்ந்து
வாழும் கூட்டுக்குடும்ப முறை
காணப்படுகிறது. ஆகவே
பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியே இன்றைய கூட்டுக்
குடும்பம் ஆகும்.

 

2.குகனோடு ஐவராகி, வீடணனோடு எழுவரான நிகழ்வினைச் சுட்டிக் காட்டுக

விடை:

இராமன்
வீடணன் இடம், நாங்கள்
நால்வர் உடன்பிறந்தவர்களாக இருந்தோம்.

பின்
வேடுவர் தலைவனான குகனை
உடன் பிறப்பாக ஏற்று
ஐவரானோம்.

அதன்
பின்னர் கதிரவன் மகனாகிய
சுக்ரீவனுடன் உறவு
கொண்டு, உடல் பிறப்பாய்
ஏற்று அறுவர்கள் ஆனோம்.

உள்ளத்தில் அன்பு கொண்டு என்னுடன்
சேர்ந்த வீடணனாகிய உன்னையும்
உடன் பிறப்பாக ஏற்று
ஐவரானோம்.

என்னைக்
காட்டிற்கு அனுப்பிய உன்
தந்தை தயரதன் இதனால்
கூடுதல் புதல்வர்களைப் பெற்று
பெருமை பெறுகிறார் என்று
கூறினார்.

 

3.வருபவர் எவராயினும் நன்றி செலுத்து” – இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக

விடை:

இடம்: பாரசீகக்
கவிஞர் ஜலாலுத்தீன் ரூமியின்
விருந்தினர் இல்லம் கவிதையில்
இடம் பெற்ற வரி
இது.

பொருள்: உன்
விருந்தினர் இல்லத்திற்கு வருபவர்
எவராயினும் இருக்கட்டும் அவருக்கு
நன்றி செலுத்து.

விளக்கம்: மனித இருப்பு விருந்தினர் இல்லம். ஒவ்வொரு காலையும்
ஒரு புது வரவு
எதிர்பாராத விருந்தாளிகள் வந்து
செல்லும் ஆனந்தம், மனச்சோர்வு, அற்பத்தனம் விழிப்புணர்வு ஆகியவற்றை
வரவேற்று விருந்தோம்பு ! துக்கங்களின் கூட்டமாக இருந்து வீட்டைத்
துப்புரவாக வெறுமைப்படுத்தும்போதும் ஒவ்வொரு
விருந்தினரையும் கௌரவமாக
நடத்து. புதியதோர் மகிழ்ச்சிக்காக அவை உன்னைத் தூசிதட்டித் தயார்படுத்தலாம். வக்கிரம்,
அவமானம், வஞ்சனை ஆகியவற்றை
வாயிலுக்கே சென்று வரவேற்பாயாக ! ஏனெனில் ஒவ்வொருவரும் ஒரு
வழிகாட்டியாக அனுப்பப்படுவதால் வருபவர் எவராயினும் நன்றி செலுத்து என்கிறார்
ரூமி.

 

4.தாயும் தந்தையும் பணிக்குச் செல்லும் இன்றைய சூழலில் குடும்ப உறுப்பினர் என்ற முறையில் நீங்கள் குடும்பத்துக்குச்
செய்யும் உதவிகள் யாவை ?

விடை:

என்
பெற்றோர்கள் இருவருமே இன்றைய
பொருளாதாரத் தேவைகளைச் சமாளிக்க,
வேலைக்குச் செல்ல வேண்டிய
தேவை உள்ளது என்பதை
உணர்ந்து செயல்படுவோம்.

என்
பெற்றோர்கள் வரும்வரை என்
தம்பி, தங்கைக்குக் கதைகள்
கூறி விளையாட்டுக் காட்டி
அன்போடு கவனித்துக் கொள்வேன்.

ஆடம்பரமான
பொருட்கள் அவர்களிடம் கேட்பதைத்
தவிர்ப்பது, மிகவும் தேவையான
பொருளை மட்டும் கேட்பேன்.

என்
தாய் வேலை முடித்துத் திரும்பி வருவதற்குமுன் வீட்டைத்
தூய்மைப்படுத்தி தேநீர்
தயாரித்து விட்டேன்.

என்
பள்ளிப்பாடங்களை அன்றாடம்
படித்து முடிப்பேன்.

கடைக்குச்
சென்று காய்கறிகள் வாங்கி
வருதல், வாகனத்தைச் சுத்தம்
செய்தல் போன்ற என்னால்
இயன்ற பணிகளைச் செய்து
பெற்றோருக்கு உதவியாக
இருப்பேன்.

வீட்டுத்
தோட்டத்தைப் பராமரிப்பது தங்கள்
நலனை மறந்து எங்கள்
நலனுக்காகவே பாடுபடும் பெற்றோர்களிடம் அன்புடனும் பாசத்துடனும் நடந்து
கொள்வேன்.

வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்குத் தேவையான
பொருள்களை வாங்கி வந்து
அம்மாவிடம் கொடுப்பேன்.

 

5.
சடாயுவை தந்தையாக ஏற்று, இராமன் ஆற்றிய கடமையை எழுதுக?

விடை:

கழுகு
வேந்தன் சடாயு, இராவணன்
சீதையை சிறை எடுத்துச்
சென்றபோது அவனைத் தடுத்து,
அவனோடு போரிட்டு இறந்தார்
.

தன்
தந்தையின் நண்பனான சடாயுவிற்கு தன் தந்தைக்குரிய தகுதியைக்
கொடுத்து இறுதிச் சடங்குகளைச் செய்தான் ராமன்.

இப்படிப்பட்ட சிறப்பான விறகுகள் இசை
என்று கண்டவர் வியக்கும்
படியான கரிய அகில்
கட்டைகளையும் சந்தனக்
கட்டைகளையும் இராமன்
கொண்டு வந்து வைத்தான்.

தேவையான
அளவு தருப்பைப் புற்களையும் ஒழுங்குபட அடுக்கினான் பூக்களையும் கொண்டு வந்து தூவினான்
மணலினால் மேடையைத் திருத்தமாக அமைத்தான்.

நன்னீரையும் எடுத்து வந்தான்

இறுதிச்
சடங்கு செய்யப்படக்கூடிய மேடைக்குத் தன் தந்தையாகிய சடாயுவைப்
பெரிய கைகளில் தூக்கிக்
கொண்டு வந்தான்.

 

நெடுவினா

1.குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் என்னும் பார் அமைப்பு கட்டமைக்கப்படுகிறது
எவ்வாறு? விளக்குக

விடை:

முன்னுரை: குடும்பம்
என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் என்னும்
பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது. குடும்பம் தொடங்கிக்
குலம், கூட்டம், பெருங்குழு. சமூகம் என்ற அமைப்பு
வரை விரிவு பெறுகிறது.
குடும்பமே மனி சமூகத்தின் அடிப்படை அலகாக உள்ளது.

குடும்பம்:

குடும்பம்
எனும் அமைப்பு ஏற்படுவதற்கு அடிப்படைக் திருமணம், நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல
குடும்பம், திருமணம் இரண்டும்
ஒன்றையொன்று சார்ந்தே செயல்படுகின்றன. குடும்பம் எனும் சொல்
முதன்முதலில் திருக்குறளில்தான் (1029)வருகிறது .

சங்க
இலக்கியத்தில்குடம்பை‘,
குடும்பு‘, ‘குடும்புஆகிய
சொற்கள் குடும்ப அமைப்போடு
தொடர்புடையவை. ‘குடும்பம்
எனும் சொல் கூடிவாழுதல் என்று பொருள்படுகிறது.

குடும்பு
எனும் சொல்லின்அம்
விகுதி சேர்ந்துகுடும்பம்
எனும் சொல் உருவானது.
பண்டைத் தமிழர்கள் குடும்பம்
எனும் அமைப்பின் வாழ்ந்த
இடங்கள் பற்றிப் பல
குறிப்புகள் கிடைக்கின்றன .

மணந்தகம்:

குடும்பமும் உயிரிகளைப் போன்றே தோன்றுகிறது; வளர்கிறது; பல கட்டங்களைக் கடக்கிறது. அதன் வாழ்க்கைச் சுழற்சியில் பல வடிவங்களில் நிலை மாற்றம் பெறுகிறது.
இத்தகைய நீண்ட பாதையில்
குடும்பத்தின் தொடக்கம்
திருமணம். மணம்புரிந்த கணவனும்
மனைவியும் சேர்ந்து இல்லற
வாழ்வில் ஈடுபடக்கூடிய தொடக்கக்கட்டமே மணந்தகம்எனப்படுகிறது. முதல்
குழந்தை பிறக்கும் வரை
உள்ள கால கட்டமாகும். தனிக்குடும்ப உருவாக்கத்தின் தொடக்க நிலையாகும்.

தாய்வழிக் குடும்பம்:

சங்ககாலத்தில் பெண் திருமணம் செய்த
பின்னரும் தன் இல்லத்திலேயே தொடர்ந்து வாழ்க்கை நடத்தும்
தாய முறை இருந்துள்ளது. மனைவியின் இல்லத்துக்குச் சென்று
கணவன் வாழ்ந்தான். தாய்வழிச்
சொத்துகள் பெண்டிருக்கே போய்ச்
சேர்ந்தன.

தந்தை
வழிக் குடும்பம்:

பெண்
மையச் சமூகத்தில் பெண்
திருமணத்திற்கு பின்
தன் கணவனுடைய தந்தையகத்தில் வாழ வேண்டும். மணமானபின்
தலைவன் தலைவியை அவனுடைய
இல்லத்திற்கு அழைத்து
வந்தபோது அவனுடைய தாய்
அவளுக்குச் சிலம்புகழி நோன்பு
செய்திருக்கிறாள்.

தனிக்குடும்பம்:

தாய்,
தந்தை, குழந்தை மூவருமுள்ள தனிக்குடும்பம் மிகவும்
நெருக்கமானது        தனிக்குடும்ப வகை,
சமூக படிமலர்ச்சியில் இறுதியாக
ஏற்பட்ட ஒன்று. இன்றைய
தொழிற்சமூகத்தில் பெரும்பான்மையாகக் காணப்படுகிறது பல
ஆதிக்குடிகளிடமும் தனிக்குடும்ப முறை முக்கியமான குடும்ப
முறையாக இருந்தது .

விரிந்த குடும்பம்:

கணவன்,
மனைவி, மகன் ஆகியோருடன் தந்தை சேர்ந்து வாழ்ந்த
நேர்வழி விரிந்த குடும்ப
முறையை ஒக்கூர் மாசாத்தியார் புறநானூற்றுப் பாடல்
கூறுகிறது.இல்லற வாழ்வின்
இறுதிக் காலத்தில் பெருமைகள்
நிறைந்த மக்களுடன் நிறைந்து,
அறத்தினை விரும்பிய சுற்றத்தோடு சேர்ந்து, தலைவனும் தலைவியும்
மனையறம் காத்தலே இல்வாழ்வின் பயனாகும். எனச் சங்ககால
மக்கள் எண்ணினார்கள்

முடிவுரை:

சங்கச்
சமூகம் குடும்பம் என்ற
அமைப்பை அடிப்படை அலகு
கொண்டிருந்த நிலையைச் சங்க
இலக்கியங்கள் காட்டுகின்றன. அதன் தொடர்ச்சியாகவே இன்றை
சமூக அமைப்பும் கூட்டுக்குடும்பம், தனிக்குடும்பம் என்ற
அலகுகளைக் கொண்டதாகவும் தந்தைவழிக் குடும்ப அமைப்பை கொண்டதாகவும் இருக்கிறது. இம்முறை தமிழ்ச்
சமூகத்தின் அடையாளம் ஆகும்
.

 

2.
பண்பின் படிமமாகப் படைக்கப்பட்ட இராமன், பிற உயிர்களுடன் கொண்டிருந்த உறவு நிலையைப் பாடப்பகுதி வழி நிறுவுக?

விடை:

குகனுடன் உறவு:

இராமன்
பேரரசனாக இருந்தாலும் வேடுவர்
தலைவனான குகன் தன்
உடன்பிறப்பு ஏற்றுக் கொள்கிறான். பாறை உடலுக்குள் பஞ்சு
உள்ளம் கொண்ட குகனை
நோக்கி, ‘நீ என்
தம்பி ; இலக்குவன் உன்
தம்பி; அழகிய நெற்றியைக் கொண்ட சீதை உனக்கு
அண்ணி, குளிர் கடலும்
இந்நிலமும் எல்லாம் உனதே
ஆகும். நான் உன்னுடைய
ஏவலுக்கேற்ப பணிபுரிபவன்என்று
கூறி அணைத்துக் கொண்டார்.

சடாயுயுடன் உறவு:

கழுகு
வேந்தன் சடாயு, இராவணன்
சீதையை சிறையெடுத்துச் சென்றபோது
தடுத்து, போர் புரிந்து
இறக்கிறான். தசரதனின் நண்பனாகிய
சடாயுவிற்கு இறுதிக் சடங்குகளை
இராமன் செய்கிறான். எவ்வாறு
என்றால் சந்தனக் கட்டைகளையும் அகில் கட்டைகளையும் கொண்டு
வந்து வைத்தான், தருப்பைப்
புற்கள் தேவையான அளவுக்கு
ஒழுங்குபட அடுக்கினான். பூக்களையும் கொண்டுவந்து தூவினான். மணலினால்
மேடையைத் திருத்தமாக அமைத்தான்.
நன்னீரையும் எடுத்து வந்தான்.
சடாயுவை பெரிய கைகளில்
தூக்கிக் கொண்டு வந்தான்

 

சவரியிடம் உறவு:

இவனுக்கு
முன்னே இப்படியொருவர் இருந்தார்
என்று பிறிதொருவரைக் காட்ட
இயலாத முதற்பொருளாகிய இராமன்
சவரியிடம் இனிதாகப் பேசினான்
தன்னையே நினைத்துத் தவம்
இருந்த சவரியிடம், ‘இவ்வளவு
காலம் நீ துன்பம்
ஏதுமின்றி நலமுடன் இருந்தாய்
அல்லவா?’ என்று பரிவுடன்
கேட்டார்.

இராமன்
வானரத்தலைவனான சுக்ரீவனிடம் இனி நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது? விண்ணிலும் மண்ணிலும் உள்ள உன்
பகைவர் என்பகைவர். தீயவராக
இருந்தாலும்கூட உன்
நண்பர்கள் என் நண்பர்கள்,
உன் உறவினர் என்
உறவினர், அன்பு மிகுந்த
என் சுற்றத்தினர் உன்
சுற்றத்தினர். நீ
என் உயிர் நண்பன்
என்றான்

விடணனிடம் உறவு:

இராமன்
இருக்குமிடம் தேடிவந்து
அடைக்கலமான அரக்கர் குல
வீடணன் தன் உடன்
பிறந்தவள் எண்ணி இலங்கை
அரசை அவனுக்கு உடைமையாக்கினான். மேலும்குகனோடு சேர்ந்து
நாங்கள் ஐவர் ஆனோம்.
பின்னர் கதிரவன் மகன்
சுக்ரீவனுடன் சேர்ந்து
அறுவர் ஆனோம். உள்ளத்தில் அன்பு கொண்டு வந்த
அன்பனே! உன்னோடு சேர்ந்து
நாங்கள் எழுவரானோம். என்
தந்தை இதனால் பெருமை
பெறுகிறார்என்றான்.

இவ்வாறு,
வேடர்கள், வானரங்கள், அரக்கர்கள் என்று பிற உயிரில்
பேதம் பார்க்காமல் ஒரு
குடும்பமாக்கிப் பண்பின்
படிமமாக இராமன் விளங்கினான்.

 

3.உரிமைத்தாகம்கதையில் சகோதரர்கள் இருவரும் ஒன்றிணையாமல்

இருந்திருந்தால்………. கதையைத் தொடர்ந்து எழுதி முடிக்க

விடை:

உரிமைத்தாகம்:

முன்னுரை:

கிராமத்தில் வாழக்கூடிய மனிதர்களுக்கும் நிலங்களுக்குமான உறவுமுறை முதன்மையானதாகும். நிலம்
சடப்பொருள் அல்ல. நிலத்தோடு
பேசக்கூடிய மனிதர்கள் இன்றைக்கும் கிராமங்களில் வாழ்ந்து
கொண்டிருக்கின்றனர். வெக்கை
நிறைந்த கரிசல் மண்ணில்
அடமானம் வைத்த தன்
நிலத்தை மீட்க முடியாமல்
தன் மண்ணை விட்டுப்
பிரிந்து செல்லும் துயரத்தை
இக்கதை பதிவு செய்கிறது.

பாகப்பிரிவினை:

முத்தையனும் வெள்ளைச்சாமியும் உடன்பிறந்த சகோதரர்கள். முத்தையனின் மனைவி
மூக்கம்மாள், வெள்ளையனுக்கு அண்ணியாக
இல்லாமல் அன்னையாக இருந்தாள்.

வெள்ளைச்சாமிக்குத் திருமணமானதும், அவன்
மனைவி பேச்சைக் கேட்டு
சொத்தில் பங்கு கேட்டார்.
பாகம் பிரிக்கும்போது தன்
அண்ணன் முத்தையனை எடுத்தெறிந்து பேசினான். தன் தம்பிதானே!
பேசிட்டுப் போறான் என்று
முத்தையன் நினைத்தாலும், அவன்
பேசிய பேச்சு நெஞ்சில்
முள்ளாய்க் குத்தியது. வளர்த்த
கிடா மார்பில் பாய்ந்து
ரணமானது அவன் மனசெல்லாம்

நம்பிக்கைக்கிரயம்:

வெள்ளைச்சாமி இரண்டு வருடங்களுக்கு முன்னர்
மேலூர் பங்காருசாமியிடம் இருநூறு
ரூபாய் கடன் வாங்கியிருந்தான். வட்டிக்கு ஈடாக
ஆறுமாதத்திற்கு     முன்பு தன்
நிலத்தை நம்பிக்கைக்கிரயமாக பங்காருசாமிக்கு எழுதிக் கொடுத்தான்.

முத்தையனின் தீராக்
கோபம்:

தம்பி
வெள்ளையன் தன் நிலத்தை
பங்காருசாமிக்கு நம்பிக்கைக்கிரயம் எழுதிக் கொடுத்தது
பற்றி மூக்கம்மாள் முத்தையனிடம் கூறினாள். வெள்ளைச்சாமி பேசிய
பேச்சு முத்தையனின் மனதில்
ஆறாத வடுவாய் இருந்ததால், அவன் தம்பிக்கு உதவ
மறுத்துவிட்டான்.

பங்காருசாமி நிலத்தைக் கையகப்படுத்துதல்:

ஊரில்
விதைப்பு நேரம் என்பதால்
அனைவரும் மும்முரமாய் விதைத்துக் கொண்டிருந்தனர். ஆனால்,
வெள்ளைச்சாமியோ பங்காருசாமியிடம் கைகட்டி கண்ணீருடன் நின்று கொண்டிருந்தான். வாங்கிய
பணத்தை எப்படியாவது அடுத்த
ஆண்டிற்குள் தந்துவிடுவதாகவும் நிலத்தைத்
தன்னிடம் திருப்பித் தருமாறும்
பங்காருசாமியிடம் கெஞ்சினான். ஆனால், பங்காருசாமியோ எதையும்
காதில் வாங்காமல், ‘யானை
வாய்க்குள் போன கரும்பு,
திரும்பாததுபோல நிலத்தைத்
தன் பெயருக்கு மாற்றி
எழுதிக் கொண்டிருந்தார்

வெள்ளைச்சாமியின் கதறல்:

மண்டியிட்டு கடவுளிடம் கதறி அழும்
பக்தனைப் போல, வெள்ளைச்சாமி நிலத்திலே நெடுஞ்சாண்கிடையாக விழுந்து
கதறி அழுதான். பூமித்தாயே! இதுவர என் குடும்பத்தக் காப்பாத்தினியே! இன்னிக்கு
உன்னக் காப்பாத்தாம பறிகொடுத்து நிக்கறனே ! என்ன மன்னிச்சிரும்மா. உன்னவிட்டா எனக்கு வேற
யாரு இருக்கா நான்
என்ன செய்வேன்னு தெரியலையே?
என்று வெள்ளையன் புலம்பி
அழுதான்.

வெள்ளைச்சாமி ஊரைவிட்டு வெளியேறல்:

தன்
மண்ணை விட்டு அகலும்
ஏதிலியாய், சோகத்தைச் சுமந்து
கொண்டு எங்கு செல்வதென்று தெரியாமல் கனத்த மனத்துடன்
வெள்ளைச்சாமி தன்
சொந்த மண்ணை விட்டுப்
பிரிந்து சென்றான்.

கண்ணீர்ப் பூக்கள்:

வெள்ளைச்சாமி பரபரப்பான ஒரு நகரத்தின்
மூலையில் தினக்கூலியாக வாழ்க்கையைக் கழித்து
வருகிறான். அவனின் மகன்
தொட்டியிலே மண்ணை நிரப்பி
ஒரு செடியை நட்டு
நீர் ஊற்றிக் கொண்டிருந்தான். வெள்ளையனின் மனைவி, சொன்ன
வேலையைச் செய்யாம என்ன
செஞ்சிட்டு இருக்க? என்று
மகனை திட்டிய போது,
வெள்ளையன் அவனைத் திட்டாதே,
அவனுக்கினு சொந்தமா இருக்கிறது இந்த மண்ணுமட்டுந்தான் என்று
கூறிக் கண் கலங்க,
செடியில் பூபூக்கும் முன்பே
அவன் கண்களில் கண்ணீர்
பூத்தன

முடிவுரை:

மண்
என்பது வெறும் மண்மட்டும் அல்ல; அது பண்பாடு;
வாழ்க்கையின் அங்கம்,
வருவாய் பெரிதாக வரவில்லையென்றாலும் நில உரிமை.
நிலம் சார்ந்த வேளாண்மை
ஆகியவற்றை ஒரு பண்பாடு
கொண்டிருந்த மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

download2Bbutton 9 Tamil Mixer Education

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -