12th History – Lesson 9 – ஓர் புதிய சமூக – பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல் – Tamil
Medium
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
1.பின்வருவனவற்றை காலவரிசைப்படுத்துக.
i) ஜமீன்தாரி முறை
ஒழிப்புச் சட்டங்கள்
ii) அதிக விளைச்சலைத் தரும் வீரிய ரக
விதைகளின் பயன்பாடு
iii) தமிழ்நாட்டின் முதல்
நில உச்சவரம்புச் சட்டம்
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து விடையினைத் தேர்வு
செய்க.
அ)
ii,i, iii
ஆ)
i, iii, ii
இ)
iii, ii,i
ஈ)
ii, iii,i
விடை: ஆ) i, iii,ii
2.
இந்திய அரசாங்கம் ______ வகையான மேம்பாட்டிற்காக உறுதி பூண்டுள்ளது.
அ)
முதலாளித்துவ
ஆ)
சமதர்ம
இ)
தெய்வீக
ஈ)
தொழிற்சாலை
விடை: ஆ) சமதர்ம
3.இந்திய அரசியலமைப்பில் முதலாவது திருத்தம் எப்போது மேற்கொள்ளப்பட்டது?
அ)
1951
ஆ)
1952
இ)
1976
ஈ)
1978
விடை: அ) 1951
4.கொடுக்கப்பட்டுள்ள விடைக் குறிப்புகளைக் கொண்டு பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க.
அ. தொழில்
மேம்பாடு கொள்கைத் தீர்மானம்
– 1. 1951-56
ஆ. இந்திய
அறிவியல் நிறுவனம் – 2. இரண்டாவது
ஐந்தாண்டு திட்டம்
இ. மகலனோபிஸ்
– 3. 1909
ஈ முதலாவது
ஐந்தாண்டு திட்டம் – 4. 1956
அ.
1 2 3 4
ஆ.
3 1 4 2
இ.
4 3 2 1
ஈ
4 2 3 1
விடை: இ) 4 3 2 1
5.நில சீர்திருத்தச் சட்டம் தமிழ்நாட்டில் இரண்டாவது முறையாக எப்போது நடைமுறைப்படுத்தப்பட்டது?
அ)
1961
ஆ)
1972
இ)
1976
ஈ)
1978
விடை: ஆ) 1972
6.பூமிதான இயக்கத்தைத் தொடங்கியவர்.
அ)
ராம் மனோகர் லோகியா
ஆ)
ஜெயப்பிரகாஷ் நாராயணன்
இ)
வினோபா பாவே
ஈ)
சுந்தர் லால் பகுகுணா
விடை: இ) வினோபா
பாவே
7.கூற்று: ஜமீன்தாரிமுறை ஒழிப்பு அதன் முக்கிய நோக்கத்தில் ஒரு பகுதியையே எட்டியது.
காரணம்:
பல நிலச்சுவான்தாரர்கள்
குத்தகைதாரர்களை வெளியேற்றி நிலம் அவர்களது சுயகட்டுப்பாட்டின் கீழ் வேளாண்மையில் உள்ளதாக உரிமை கோரினர்.
அ)
கூற்று மற்றும் காரணம்
சரி, காரணம் கூற்றை
விளக்குகிறது.
ஆ)
கூற்று மற்றும் காரணம்
சரி, காரணம் கூற்றை
விளக்கவில்லை .
இ)
கூற்று சரி ; காரணம்
தவறு
ஈ)
கூற்று தவறு, காரணம்
சரி
விடை: அ) கூற்று
மற்றும் காரணம் சரி,
காரணம் கூற்றை விளக்குகிறது.
8.தொழில் வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறைச் சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?
அ)
1951
ஆ)
1961
இ)
1971
ஈ)
1972
விடை: அ) 1951
9.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?
அ)
2005
ஆ)
2006
இ)
2007
ஈ)
2008
விடை: அ) 2005
10.எந்த ஆண்டு இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் கடும் நெருக்கடியைச் சந்தித்தன?
அ)
1961
ஆ)
1991
இ)
2008
ஈ)
2005
விடை: ஆ) 1991
11.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டம் (MGNREGA) எத்தனை நாட்கள் வேலைவாய்ப்பை ஒரு தனிநபருக்கு வழங்குகிறது?
அ)
200
ஆ)
150
இ)
100
ஈ)
75
விடை: இ) 100
12.டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் எப்போது அமைக்கப்பட்டது?
அ)
1905
ஆ)
1921
இ)
1945
ஈ)
1957
விடை: இ) 1945
13.1951ஆம் ஆண்டில் இந்தியாவில் எத்தனை பொதுத்துறை நிறுவனங்கள் செயல்பட்டன?
அ)
5
ஆ)
7
இ)
6
ஈ)
225
விடை: அ) 5
II. குறுகிய விடையளிக்கவும்
1.நாடு விடுதலை அடைந்த போது இந்திய பொருளாதாரத்தின் நிலைகள் குறித்து ஒரு குறிப்பு வரைக.
விடை:
- 1947இல் இந்தியா
விடுதலையடைந்த போது
நாட்டின் பொருளாதாரம் மிகவும்
வலுவற்றதாகவும் பல
பிரச்சனைகளையும் எதிர்
கொண்டது. - கைவினைத் தொழில்கள்
பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகியதால் திறமைமிக்க கைவினைஞர்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். - வேளாண் துறையில்
மக்கள் நெருக்கடி அதிகமானதோடு தனி நபரின் தலாவருமானமும் குறைந்தது.
2.ஜவஹர்லால் நேரு தலைமையிலான புதிய அரசாங்கத்தின் முன்னிருந்த முக்கிய கடமைகள் யாவை?
விடை:
- பொருளாதாரத்தை வளர்த்தல்.
- வேளாண்துறை நிலைமைகளை
மேம்படுத்துதல். - உற்பத்தித் துறையை
விரிவாக்கம் செய்தல். - வேலை வாய்ப்புகளைப் பெருக்கி வறுமையைக் குறைத்தல்
போன்ற மாபெரும் கடமைகளை
ஜவஹர்லால் நேரு தலைமையிலான புதிய அரசாங்கம் எதிர்
கொண்டது.
3.சமதர்ம சமூக அமைப்பு என்பதைப் பற்றி நீ அறிந்ததென்ன?
விடை:
சமதர்ம
சமூக அமைப்பு என்பது
ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பது,
சுரண்டலை ஒழிப்பது, செல்வம்
ஓரிடத்தில் குவிக்கப்படுவதைத் தடுப்பது
ஆகியனவாகும்.
சமூகநீதியானது அனைத்து குடிமக்களும் கல்வி
மற்றும் வேலைவாய்ப்பில் சமவாய்ப்பைப் பெறுவதாகும்.
4.இந்தியா விடுதலை அடைந்ததைத் தொடர்ந்து பொதுத்துறை நிறுவனங்களை அமைப்பது தொடர்பாக வைக்கப்பட்ட இரண்டு முக்கிய கருத்துக்களை சுட்டிக் காட்டுக?
விடை:
முதலாவதாக
கருத்தியல் நிலையில் அரசாங்கம்
ஒரு சமதர்ம வளர்ச்சிக்கு உறுதியளித்தது. இது
பொருளாதாரத்தின் மீது
அரசின் அதிக அளவிலான
கட்டுப்பாட்டை உள்ளடக்கியிருந்தது.
இரண்டாவது
நடைமுறை சார்ந்தது. நடைமுறையில் கனரகத் தொழில்களை உருவாக்க
வேண்டிய பொறுப்பை அரசே
ஏற்க வேண்டியிருந்தது. ஏனெனில்
அவற்றை உருவாக்க மிக
அதிகமான முதலீடு தேவைப்பட்டது.
5.பூமிதான இயக்கம் பற்றி எழுதுக.
விடை:
நிலம்
இல்லாத ஏழைகளுக்கு உபரியாக
நிலம் உள்ளவர்களிடமிருந்து நிலங்களை
தானமாக பெற்றுத் தருவது
பூமிதான இயக்கமாகும்.
வினோபா
பாவே தனது பூமிதான
இயக்கத்தின் மூலம் பெரும்
நிலவுடைமையாளர்கள் தங்களிடம்
உபரியாக உள்ள நிலங்களைத் தாங்களாவே முன்வந்து வழங்க
இணங்க வைத்த முயற்சிகள் மக்களின் கவனத்தைப் பெரிதும்
கவர்ந்தது.
III. சுருக்கமான விடையளிக்கவும்
1.குத்தகை சீர்திருத்தங்களின்
நோக்கங்கள் யாவை?
விடை:
- குத்தகையை முறைப்படுத்துவது.
- குத்தகைதாரர்களின் உரிமைகளை
பாதுகாப்பது. - நிலவுடைமையாளர்களிடமிருந்து நிலங்களைப் பறிமுதல் செய்து அவற்றிற்கான உரிமையை குத்தகைதாரர்களுக்கு அளிப்பது.
2.இந்தியாவில் பசுமைப்புரட்சியின்
விளைவுகள் யாவை?
விடை:
- இந்தியா உணவு
தானிய உற்பத்தியில் தன்னிறைவு
பெற்றது. - விவசாயிகளிடமிருந்து உபரி
உணவு தானியங்களை விலைக்கு
வாங்கிய அரசு பெருமளவில் தானியக் கையிருப்பை ஏற்படுத்தி அவற்றை இந்திய உணவுக்
கழகத்திற்குச் சொந்தமான
சேமிப்புக் கிடங்குகளில் சேமித்து
வைத்தது. - மக்களுக்கான உணவு
பாதுகாப்பும் உறுதி
செய்யப்பட்டது. - பசுமைப்புரட்சி மிகவும்
வெற்றிகரமானதாக இருந்தபோதிலும் அது சில எதிர்மறையானவிளைவுகளையும் ஏற்படுத்தியது. - வசதி வாய்ப்புகள் நிறைந்த பகுதிகள் வசதி
வாய்ப்புகள் குறைந்த பகுதிகள்
ஆகியவற்றிற்கு இடையிலான
ஏற்ற தாழ்வுகளை அதிகரித்தது. - காலப்போக்கில் விவசாயிகளிடையே அதிக அளவில் ரசாயன
உரங்களையும் பூச்சிக் கொல்லி
மருந்துகளையும் பயன்படுத்தும் பழக்கம் ஏற்பட்டதன் விளைவாகச்
சூழலியல் பிரச்சனைகள் தோன்றலாயின.
3.மத்திய அரசு 1980களில் கொண்டு வந்த ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டத்தை விளக்குக?
விடை:
- 1980இல் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம்
என்ற பெயரில் ஓர்
ஒருமுகப்படுத்தப்பட்ட திட்டம்
அறிமுகம் செய்யப்பட்டது. - கிராமப்புற குடும்பங்களின் பொருளாதார நிலையை உயர்த்துவதற்கு அவர்களுக்கு சில சொத்துக்களை வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
- நிலத்தை மேம்படுத்துவதற்காகவோ பால் உற்பத்திக்காகப் பசுக்கள் அல்லது ஆடுகளை
வழங்குதல் அல்லது சிறிய
கடைகள் வைக்கவோ அல்லது
வேறுவணிகத் தொடர்பான வியாபாரங்கள் செய்வதற்கான உதவியாகவோ இருக்கலாம். - இதன் இலக்கு
ஐந்து ஆண்டுகளில் (1980-1985) ஒவ்வொரு
ஊராட்சி ஒன்றியத்திலும் ஆண்டொன்றுக்கு 600 குடும்பங்களுக்கு உதவிகள்
வழங்குவது. - இந்த உதவிகள்
15 மில்லியன் குடும்பங்களுக்கு சென்றடைவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. - 1999 ஆம் ஆண்டு
வரையின் 53:5 மில்லியன் குடும்பங்களை இத்திட்டம் சென்றடைந்தது.
4.இந்திய வேளாண்மையின் பின்தங்கிய நிலைக்கான காரணங்கள் யாவை?
விடை: இந்திய வேளாண்மையில் பின்தங்கிய நிலைக்கான காரணங்கள்
இரண்டு வகைப்படும். அவையாவன,
நிறுவன காரணி
– நில உடைமை மற்றும்
விவசாய தொழிலாளர்கள் இடையே
நிலவிய சமூக பொருளாதார
சிக்கல்கள்.
தொழில்நுட்ப காரணி
– வீரிய விதைகள், இரசாயன
உரங்கள், நீர்ப்பாசனம் மற்றும்
இயந்திரங்களை பயன்படுத்தாமை ஆகியவையாகும்.
5.பொதுத்துறை நிறுவனங்களின் குறைந்த செயல்பாட்டிற்கான காரணிகள் யாவை?
விடை:
- நிறுவனங்கள் அமைக்கப்பட வேண்டிய இடங்கள் குறித்து
மாறுபட்ட கருத்துக்கள். - கட்டுமானப் பணிகளை
முடிப்பதில் ஏற்படும் தாமதத்தால் அதிக முதலீட்டு செலவு. - தேவைக்கு அதிகமானோர் பணியமர்த்தப்பட்டனர். இதனால்
நிறுவனங்களை இயக்குவதற்கான செலவு
அதிகரித்தது. இவைகள் பொதுத்துறை நிறுவனங்களின் குறைந்த
செயல்பாட்டிற்கான காரணங்களாகும்.
IV. விரிவான விடையளிக்கவும்
1.ஊரக மறுசீரமைப்பு தொடர்பாக இந்திய அரசு பின்பற்றிய நடவடிக்கைகளை முன்னிலைப்படுத்துக.
விடை:
1.
ஜமீன்தாரி முறை ஒழிப்பு :
- ஜமீன்தார் என்பவர்கள் நில உடைமையாளர் வகுப்பைச்
சேர்ந்தவர்களாவர். தங்கள்
நிலங்களில் விவசாயம் செய்யும்
விவசாயிகளிடமிருந்து குத்தகை
வசூல் செய்து அரசுக்கு
குறிப்பிட்ட அளவு வரியாக
செலுத்துவர். - ஜமீன்தார்கள் பொதுவாக
விவசாயிகளிடமிருந்து அதிக
தொகையினை வசூலித்து அவர்களை
வறிய நிலைக்கு உள்ளாக்கினர். - இவர்களின் உரிமைகளை
ஒழித்து இவர்களிடமிருந்து நிலங்களை
மீட்டு விவசாயிகளுக்குத் தருவது
அரசின் குறிக்கோளாகும். - 1951மற்றும் 1955 இல்
அரசு நிறைவேற்றிய அரசியல்
அமைப்பு சட்டதிருத்தங்கள் மூலம்
1956ல்ஜமீன்தாரி முறை ஒழிப்பு
நிறைவு பெற்றது. - இதன்மூலம் 30 லட்சம்
குடியானவர்களும், குத்தகைதாரர்களும் 62 லட்சம் ஹெக்டேர்
நிலங்களுக்கு உரிமையாளர்களாயினர். - இருந்த போதிலும்
இச்சீர்திருத்தத்தின் மூலம்
திட்டமிடப்பட்ட நோக்கங்களில் ஒரு சிறுபகுதியை மட்டுமே
எட்ட முடிந்தது.
2.
குத்தகை சீர்திருத்தம்:
- இந்தியாவில் பயிரிடப்படும் மொத்த நிலத்தில் ஏறத்தாழ
50 விழுக்காடு நிலங்கள் குத்தகை
முறையின் கீழ் இருந்தன. - குத்தகை என்பது
பொருளாக, நிலத்தில் விளைந்த
விளைச்சலில் குறிப்பிட்ட பங்காக
பெறப்பட்டது. - நில உரிமையாளர்களிடமிருந்து விவசாயிகளை பாதுகாப்பதன் மூலம் விவசாயிகளுக்கு அதிகாரமளிப்பது, என முடிவு செய்தது.
- குத்தகைதாரர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும். குத்தகை
உரிமையை மரபுரிமையாக்குவதற்கும் இயற்றப்பட்ட சட்டங்கள் வெற்றி பெறவில்லை. - ஒரு முழுமையான
நடைமுறைப்படுத்தக் கூடிய
நில உச்ச வரம்பு
இல்லாத சூழ்நிலையில் குத்தகை
சீர்திருத்தங்கள் பயனற்று
போயின.
2.
சுதந்திர இந்தியாவில் ஏற்பட்ட கல்வி முன்னேற்றம் குறித்து மதிப்பிடுக.
விடை:
- கல்வி மற்றும்
சுகாதாரம் ஆகியவை சமூகத்
துறையில் இடம் பெற்றிருப்பதோடு கல்வியின் நிலையம் சுகாதாரக்
குறிப்பான்களுமே ஒரு
நாட்டின் சமூகவளர்ச்சியை மதிப்பிடுவதற்கான அளவுகோல்களாக உள்ளன. - இந்தியாவில் 1951 இல்
18.3 விழுக்காட்டிலிருந்து எழுத்தறிவு நிலை 2011இல் 74 விழுக்காடாக உயர்ந்துள்ளது. - ஆண்களில் 82 விழுக்காட்டினரும், பெண்களில் 65 விழுக்காட்டினரும் எழுத்தறிவு பெற்றுள்ளனர். எழுத்தறிவில் பெண்கள்
பின்தங்கியிருந்தனர். - தொடக்கக் கல்வி
முதல் உயர்நிலைப்பள்ளி வரையிலான
பள்ளிகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்தது. - மேல்படிப்பு மையங்களின் எண்ணிக்கையும் பெருகிற்று. 2014-15 இல் நாட்டில்
12.72 லட்சம் தொடக்க உயர்
தொடக்கப் பள்ளிகளும் 2.45 லட்சம்
இடைநிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளும் 38,498 கல்லூரிகளும் 43 மத்தியப்
பல்கலைக்கழகங்களும் 316 மாநிலப்
பல்கலைக்கழகங்களும் செயல்பட்டன. - நகர மற்றும்
கிராமப்புறங்களில் இடைநிற்கும் குழந்தைகள் பெரும்பாலும் ஏழைக்
குடும்பங்களைச் சேர்ந்தோராகவே இருந்தனர். - குறிப்பாகப் பெண்
குழந்தைகளே இடை நிற்றலில்
அதிகமாக இருந்தனர். - சேர்க்கை விகிதத்திலும் இடைநிற்றல் விகிதத்திலும் மிகப்பெரும் பிராந்திய வேறுபாடுகள் காணப்பட்டன. ஆகவே பின்தங்கிய மாநிலங்களிலும் பகுதிகளிலும் பள்ளிக்
கல்வியின் நிலை மோசமாகவே
இருந்தது. - இடைநிற்றல் பிரச்சனையை தீர்க்க அரசாங்கத்தினால் அனைவருக்கும் கல்வித்திட்டம், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம்
மற்றும் அண்மையில் ஒருங்கிணைக்கப்பட்ட திட்டமான ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம்
போன்றவற்றின் மூலம்
பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
3.
முதல் இரண்டு ஐந்தாண்டு திட்டங்களின் சாதனைகளை மதிப்பிடுக.
விடை:
- முதலாவது ஐந்தாண்டு
திட்டம் (1951-56) வேளாண்மையை வளர்ப்பதிலும் குறிப்பாக
வேளாண் உற்பத்தியிலும் கவனம்
செலுத்தியது. - மொத்த முதலீட்டில் 31 விழுக்காடுகள் வேளாண்மைக்கும் நீர்பாசனத்திற்கும் ஒதுக்கப்பட்டது.
- இதற்கு பின்னர்
தொழில் துறைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. மொத்த
முதலீட்டில் வேளாண்மைக்கான பங்கு
20 விழுக்காட்டிற்கும் 24 விழுக்காட்டிற்கும் இடையே இருந்தது. - பொதுவாக மகலனோபிஸ்திட்டம் என அறியப்பட்ட இரண்டாவது ஐந்தாண்டு திட்டம்
(1956-61)பொருளாதார முன்னேற்றத்தை அடைவதற்கு
கரைத் தொழிற்சாலைகளுக்கு முக்கியத்துவம் வழங்கியது. முதலாவது திட்டத்தில் 6 விழுக்காடாக இருந்த தொழில்துறையின் பங்கு இரண்டாவது திட்டத்திற்குப் பின்னர் 24 விழுக்காடாக உயர்ந்தது. - முதலிரண்டு திட்டங்களும் ஓரளவிற்கு மிதமான 4 விழுக்காடுவளர்ச்சியை இலக்காகக் கொண்டிருந்தன. இதை பொருளாதார நிபுணர்கள் இந்து வளர்ச்சி விகிதம்
என அழைத்தனர். - இந்த வளர்ச்சி
விகிதங்கள் அடையப்பட்டதால் அவை
வெற்றி பெற்ற திட்டங்களாகக் கருதப்பட்டன.
4.
இந்திய விடுதலைக்குப்பின்
ஏற்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் வளர்ச்சி குறித்து ஆய்க.
விடை:
அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்கள்:
- விடுதலைக்கு முன்னர்
இந்தியாவிலிருந்து ஒரேயொரு
அறிவியல் ஆய்வு நிறுவனம்
1909இல் J.R.D. டாட்டா மற்றும்
மைசூர் மகாராஜா ஆகியோரின்
நிதியுதவியில் பெங்களூருவில் அமைக்கப்பட்ட இந்திய
அறிவியல் நிறுவனம் மட்டுமேயாகும். - 1945 இல் முன்னவர்
ஹோழி. J.பாபா என்பாரின்
முன்னெடுப்பில் டாட்டா
என்பவரின் நிதியுதவியுடன் டாட்டா
அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம்
நிறுவப்பெற்றது. - புனேயில் அமைக்கப்பட்ட தேசிய வேதியியல் ஆய்வகம்
புதுதில்லியில் அமைக்கப்பட்ட தேசிய இயற்பியல் ஆய்வகம்
ஆகியவை நாடு விடுதலை
பெற்ற காலத்தில் முதன்முதலாக அமைக்கப்பட்டவை.
ஆராய்ச்சி நிறுவனங்களின் வகைகள்:
அறிவியல்
துறையின் வானியற்பியல், மண்ணியல்,
நிலவியல், சார் இயற்பியல்,
உயிரணு மற்றும் மூலக்கூறு
உயிரியல் கணித அறிவியல்
மற்றும் பல பிரிவுகளில் ஆய்வினை மேற்கொள்ளும் நிறுவனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து பெருகின.
அணுசக்தி ஆணையம்:
அணுச்சக்தி ஆணையமானது அணு அறிவியலின் வளர்ச்சிக்கு மைய
முகமையானதாக திகழ்கிறது. அணுச்சக்தி உற்பத்தி அணு ஆயூத
உற்பத்தி ஆகிய இரண்டின்
மீதும் கவனம் செலுத்தும்.
போர்திறம்
சார்ந்த ஆய்வுக்கான பல
நிறுவனங்களுக்கு அணுசக்தி
ஆணையம் நிதியளிக்கிறது.
வேளாண்மை:
வேளாண்மை
வளர்ச்சியும் ஆய்வுகளையும் இந்திய வேளாண்மை ஆய்வுக்கழகம் ஒருங்கிணைக்கிறது. இதன்
ஆய்வுகள் வேளாண்மை குறித்து
மட்டுமல்லாமல் துணை
நடவடிக்கைகளாக மீன்
வளர்ப்பு, வனங்கள், பால்வளம்,
தாவர மரபியல், உயிரி
– தொழில் நுட்பம், பல்வேறு
பயிர் வகைகளான நெல்,
உருளைக்கிழங்கு வகைகள்,
பழங்கள் மற்றும் பூச்சிகளை
கட்டுப்படுத்துதல் ஆகிய
நடவடிக்கைகளையும் இவ்வமைப்பு மேற்கொள்கிறது.
வேளாண்மை பல்கலைக்கழகங்கள்:
வேளாண்மை
பல்கலைக்கழகம் கல்வி
கற்பித்தல், வேளாண்மை நடைமுறைகள் குறித்த ஆய்வு ஆகியவற்றில் செயலூக்கத்துடன் ஈடுபட்டுள்ளன.
இந்தியாவில் 67 வேளாண்மை பல்கலைகழகம் உள்ளன.
இவற்றில் 3 பல்கலைக்கழகங்கள் தமிழகத்தில் அமைந்துள்ளன.
தொழில்நுட்ப நிறுவனங்கள்:
- இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்கள் பொறியியலின் வெவ்வேறு
பிரிவுகளுக்காக நிறுவப்பெற்ற சிறப்பு நிறுவனங்களாகும். - முதல் IIT கரக்பூரில் நிறுவப்பெற்றது. தொடர்ந்து
டெல்லி பம்பாய் கான்பூர்
மற்றும் சென்னை ஆகிய
இடங்களில் உருவாக்கப்பட்டன. - இச்சமயம் நமது
நாட்டில் 23 IIT கள் செயல்படுகிறது. - 31 தேசிய தொழில்நுட்ப நிறுவனங்களும், 23 இந்திய
தகவல் தொழில் நுட்பகழக
நிறுவனங்களும் செயல்படுகின்றன.
V. செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)
தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் மற்றும் தனியார்மயமாக்கல் கொள்கைகளில் நேர்மறை மற்றும் எதிர்மறை
விளைவுகள் குறித்த வகுப்பறையில் விவாதம் நடத்தவும்.