Home12th Standard History Tamil Medium Book Back Question answers12th History - Lesson 5 - ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட்சிகர தேசியவாதத்தின் காலம்...
- Advertisment -

12th History – Lesson 5 – ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட்சிகர தேசியவாதத்தின் காலம் – Tamil Medium

 

12th history lesson 5 the period of revolutionary nationalism in the struggle against imperialism tamil medium 242915923 Tamil Mixer Education

12th History – Lesson 5 – ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட்சிகர தேசியவாதத்தின் காலம் – Tamil
Medium

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

1.இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

)
1920

)
1925

)
1930

)
1935

விடை: ) 1925

 

2.கல்பனா தத் எதனுடன் தொடர்புடையவர்?

)
ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட்
ரிபப்ளிகன் அசோசியேஷன்

)
வங்காள சபை

)
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

)
இந்தியக் குடியரசு இராணுவம்

விடை: ) இந்தியக்
குடியரசு இராணுவம்

 

3.பின்வருவனவற்றைப் பொருத்துக.

. கான்பூர்
சதி வழக்கு – 1.அடிப்படை
உரிமைகள்

. மீரட்
சதி வழக்கு – 2. சூரியா
சென்

. சிட்டகாங்
ஆயுதக் கிடங்கு – 3. 1929

. இந்திய
தேசிய காங்கிரசின் கராச்சி
மாநாடு 4. 1924

)1,2,3,4

)
2,3,4,1

)
3,4,1,2

)
4,3.2.1

விடை: ) 4,3,2,1

 

4.கீழ்க்காண்பவர்களில் 64 நாட்கள் உண்ணாவிரதத்திற்குப் பிறகு சிறையில் உயிரிழந்தவர் யார்?

)
புலின் தாஸ்

)
சச்சின் சன்யால்

)ஜதீந்திரநாத் தாஸ்

)
பிரித்தி வதேதார்

விடை: ) ஜதீந்திரநாத் தாஸ்

 

5.பின்வரும் கூற்றுகளில் பொருளாதாரப் பெரும் மந்தம் குறித்துச் சரியானவை.

i) இது வட
அமெரிக்காவில் ஏற்பட்டது

ii) வால் தெருவில்
ஏற்பட்ட வீழ்ச்சியானது பெரும்
மந்தத்தை விரைவுபடுத்தியது.

iii) பெரும் மந்தம்
வசதி படைத்தவர்களை மட்டுமே
பாதித்தது

iv) விலை வீழ்ச்சி
அடைந்ததால் பெரும் மந்தத்தின் போது சிறப்பான வாழ்க்கை
முறையை தொழிலாளர்கள்

அனுபவித்தனர்.

)
i
மற்றும் ii

)
i, ii
மற்றும் iii

)
மற்றும் iv

)
i, iii
மற்றும் iv

விடை: ) i மற்றும்
ii

 

6.முதலாவது பருத்தித் தொழிற்சாலை பம்பாயில் தொடங்கப்பட்ட ஆண்டு

)1852

)
1854

)
1861

)
1865

விடை: ) 1854

 

7.கொடுக்கப்பட்ட குறிப்புகளை கொண்டு சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

i) “ChittagongArmoury Raiders
Reminiscences”
எனும் நூல்கல்பனாதத் என்பவரால்
எழுதப்பட்டது.

ii) கல்பனா தத்தாய்நாட்டின் விடுதலைக்காக ஆயுதம்
தாங்கி போராடினார்

iii) கல்பனாதத் பேரரசருக்கு எதிராகப் போர் தோடுத்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டார்.

)
மட்டும்

)
1
மற்றும் ii

)
ii
மற்றும் iii

)
அனைத்தும்

விடை: ) அனைத்தும்

 

8.முதலாவது பயணிகள் இரயில் 1853 இல் எந்த இடங்களுக்கு இடையே ஓடியது?

.  மதராஸ்அரக்கோணம்

.  பம்பாய்பூனா

.
பம்பாய்தானே

.
கொல்கத்தாஹூக்ளி

விடை: ) பம்பாய
தானே

 

9.கல்கத்தாவில் முதலாவது சணல் ஆலை தொடங்கப்பட்ட ஆண்டு ………

)1855

)
1866

)
1877

)
1888

விடை: ) 1855

 

10.பின்வருவோரில் கான்பூர் சதி வழக்கில் கைது செய்யப்பட்டவர் யார்?

)
எம்.என்.ராய்

)
பகத் சிங்

)எஸ்..டாங்கே

)
ராம் பிரசாத் பிஸ்மில்

விடை: ) எம்.என்.ராய்

 

11.கான்பூர் சதி வழக்குக் குறித்த பின்வரும் எந்த கூற்றுகள் சரியானவை?

i) சணல் மற்றும்
பருத்தி தொழிற்சாலைகளில் தொழிற்சங்கங்கள் தோன்றின.

ii) இவ்வழக்கில் கம்யூனிஸ்ட்களும் தொழிற்சங்கவாதிகளும் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

iii) இவ்வழக்கு நீதிபதி
H.E.
ஹோம்ஸ் என்பவரின் முன்பாக
விசாரணைக்கு வந்தது.

iv) விசாரணைமற்றும் சிறைத்தண்டனையானது இந்தியாவில் காங்கிரஸ்
நடவடிக்கைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

)
i, ii
மற்றும் iii

)
i, iii
மற்றும் iv

)
ii, iii
மற்றும் iv|

)
i, ii
மற்றும் iv

விடை: ) i, ii மற்றும்
iv

 

II. குறுகிய விடையளிக்கவும்

1.இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்க கிரேட் பிரிட்டனால் அனுப்பப்பட்ட மூன்று ஆங்கில கம்யூனிசவாதிகளின்
பெயர்களைக் குறிப்பிடுக.

விடை: இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியை கட்டியமைக்க உதவுவதற்கென பிரிட்டானிய கம்யூனிஸ்ட் கட்சியால்
அனுப்பிவைக்கப்பட்ட கம்யூனிஸ்ட்டுகள்.

பிலிப் ஸ்ப்ராட்

பான் ப்ராட்லி

லெஸ்டர் ஹட்சின்சன் ஆகியோர் ஆவார்.

 

2.மீரட் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞரை அடையாளப்படுத்துக.

விடை: கே.எஃப்
நாரிமன், எம்.சி.சக்லா
போன்ற புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் மீரட் சதி வழக்கில்
குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாடினர்.

 

3.புகழ்பெற்ற கோரக்பூர் நீதிபதியான H.E. ஹோம்ஸ் பற்றி நீவிர் அறிவது யாது?

விடை: அமர்வு நீதிபதி
H.E.
ஹோம்ஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இவர் கோரக்பூர்
அமர்வு நீதிபதியாக பணியாற்றிய போது சௌரிசௌரா வழக்கில்
தொடர்பு கொண்டவர்களாக குற்றம்
சாட்டப்பட்ட 172 விவசாயிகளுக்கு மரண
தண்டனை விதித்து தீர்ப்பளித்து பிரசித்தி பெற்றவர்.

 

4.இரண்டாவது லாகூர் சதி என்றறியப்படும் நிகழ்வு யாது?

விடை:

  • ராஜகுரு, சுகதேவ்.
    ஜஹீந்திரநாத் தாஸ்
    ஆகியோருடன் பகத்சிங்கும் மேலும்
    21
    பேரும் கைது செய்யப்பட்டு, “சாண்டர்ஸ் கொலைதொடர்பான
    விசாரணைக்கு ஆளாக்கப்பட்டனர்.
  • இந்த வழக்கு
    இரண்டாவது லாகூர் சதி
    வழக்கு என்று அறியப்படுகிறது.
  • இதில் ஜஹிந்திரநாத் தாஸ் என்பவர் சிறையின்
    மோசமான நிலை, பாரபட்சமான நடவடிக்கைகளை எதிர்த்து
    64
    நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டு, சிறையிலேயே மரணமடைந்தார்.

 

5.இந்தியாவின் நவீன தொழிற்சாலையின் தந்தை என ஜே.என். டாடா அழைக்கப்பட காரணம் என்ன ?

விடை:

  • ஜே.என்.டாடா
    என்கிற ஜாம்ஷெட்ஜி நுஸவர்வஞ்சி டாடா பரோடாவில் உள்ள
    நல்சாரி என்ற இடத்தில்
    ஒரு பார்சி வணிக
    குடும்பத்திலிருந்து வந்தவர்.
  • இந்தியாவின் முதல்
    வெற்றிகரமான தொழிலதிபர் இவர்
    என்பதால், “இந்திய நவீனத்
    தொழிலகங்களின் தந்தை
    என அழைக்கப்படுகிறார்.

 

III. சுருக்கமான விடையளிக்கவும்

1.சிட்டகாங் ஆயுதப் படைத் தாக்குதலை நடத்த சூரியாசென் எவ்வாறு திட்டமிட்டார்?

விடை:

  • சூரியா சென்னின்
    புரட்சிக் குழுவான இந்தியக்
    குடியரசு இராணுவம் சிட்டகாங்கை கைபற்ற மறைந்திருந்து தாக்கும்
    கொரில்லா பாணி தாக்குதலை
    நடத்த திட்டமிட்டனர்.
  • 1930 ஏப்ரல் 18 அன்று
    இரவில் சிட்டகாங் படைத்தளம்
    தாக்கி தகர்க்கப்பட்டது.
  • மாகாணத்தின் பிற
    பகுதிகளிலிருந்து தனிமைப்படுத்தும் முகமாக ரயில்வே
    தகவல்தொடர்பு வலை
    பின்னல்களை துண்டிக்கும் பொருட்டு
    தந்தி, அலுவலகங்கள், படைத்தளங்கள், காவல்துறை முகாம்கள் போன்றவைகளை தகர்த்தனர்.
  • காலனிய நிர்வாகத்திற்கு நேரடியாக சவால் விடுக்கும் நோக்குடன் அது நடந்தேறியது.

 

2.டாடா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் (TISCO) பற்றி குறிப்பு எழுதுக.

விடை:

  • 1907ல் பீகாரில்
    உள்ள சாகிநகரில் டாடா
    குழுமத்தால் டாடா இரும்பு
    மற்றும் எஃகு நிறுவனம்
    (TISCO)
    முதன்முதலில் சுதேசி
    இயக்கத்தின் ஒரு நிகழ்வாக
    அமைக்கப்பட்டது.
  • இந்தத்துறையில் உள்ள
    மற்ற முயற்சியாளர்களை விட
    டாடா மிக உன்னத
    நிலையை அடைந்துள்ளது.
  • அதன் உற்பத்தி
    1912-13
    ல் 31,000 டன்னிலிருந்து 1917-18ல்
    1,81000
    டன்னாக அதிகரித்தது.

 

3.தென்னிந்தியாவில் தொழிற்சங்கங்களின்
வளர்ச்சிக்காகச் சிங்காரவேலர் ஆற்றிய பங்களிப்புக் குறித்து எழுதுக.

விடை:

  • சிங்காரவேலர் இளமைகாலத்தில் புத்தமதத்தை தழுவினார், பிறகு
    இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்து செயல்பட்டார்.
  • எனினும் சில
    காலத்திற்குப்பிறகு அவர்
    புரட்சிகர தேசியவாத பாதையை
    தேர்ந்தெடுத்தார்.
  • திரு.வி.கல்யாண
    சுந்தரத்துடன் இணைந்து
    தென்னிந்தியாவில் பல
    தொழிற்சங்கங்களை தோற்றுவித்தார்
  • 1923 ஆம் ஆண்டு
    மே மாதம் முதல்
    நாள் முதன் முறையாக
    நாட்டில் மேதினத்தை கொண்டாடினார்.
  • 1928ல் தென்னிந்திய ரயில்வே வேலை நிறுத்தத்தை (பொன்மலை, திருச்சிராப்பள்ளி) ஏற்பாடு
    செய்ததில் இவர் முக்கியப்
    பங்கு வகித்தள் அதற்காக
    தண்டனை பெற்றார்.

 

IV. விரிவான விடையளிக்கவும்

1.பகத்சிங்கின் புரட்சிகர தேசியவாதம் மற்றும் புரட்சிகர நடவடிக்கைகள் எவ்வாறு அவரைத் தூக்கு மேடைக்கு இட்டுச் சென்றது? (மார்ச் 2020)

விடை:

பகத்சிங்கின் பின்புலம்:

  • தேசியவாதத்தின் ஓர்
    ஒப்பற்ற நிலையைப் பகத்சிங்
    பிரதிநிதித்துவப் படுத்துகிறார். அவருடைய புரட்சிகர
  • தேசியவாத நிலைப்பாடு, ஒரு தனித்த வழி
    என்ற அளவில் ஒட்டுமொத்த விடுதலை இயக்கத்தின் லட்சியங்களுக்காகப் பெரிதும் பாராட்டப்படுகிறது.
  • பகத்சிங்கின் 14ஆம்
    வயதில் ஜாலியன் வாலாபாக்
    படுகொலை நிகழ்ந்தது. அவர்
    தனது இளமைக் காலம்
    முதலாகவே, நவ்ஜவான் பாரத்
    சபா, ஹிந்துஸ்தான் ரிபப்ளிகன் அசோசியேஷன் ஆகிய அமைப்புகளில் தன்னை இணைத்துக்கொண்டார்.
  • 1929 ஆம் ஆண்டு
    ஏப்ரல் மாதம் 8 ஆம்
    தேதி மத்திய சட்டமன்றத்தில் வீசிய குண்டுகள் எவரையும்
    கொல்லவில்லை. ஆங்கிலேயர்களின் கொடுங்கோன்மைச் சட்டங்களுக்கு எதிரான
    ஒரு போராட்டச்
  • செயலாக புரட்சியாளர்களால் அது கருதப்பட்டது.

 

2.1919
– 1939
ஆம் ஆண்டுகளுக்கிடையில் காலனி ஆதிக்க இந்தியாவில் ஏற்பட்ட தொழில் வளர்ச்சியினைப் பற்றி எழுதுக.

விடை:

  • பிரிட்டிஷ் வணிகக்
    கொள்கையானது உள்நாட்டுத் தொழிற்துறையைப் பெரும் எண்ணிக்கையாக்கியது.
  • முதல் உலகப்போரின் போதும் பொருளாதாரப் பெருமந்தம் போன்ற சில எதிர்பாராத சந்தர்ப்பங்கள் காரணமாகவும் இந்தியாவில் தொழில்துறை விரிவாக்கம் ஏற்பட்டது. –
  • போர்களுக்கு இடைப்பட்ட
    காலப்பகுதி உற்பத்தி தொழில்களின் வளர்ச்சியை பாதித்துள்ளது.
  • ஆச்சிரியத்தக்க வகையில்
    இந்திய தொழில்களின் வளர்ச்சி
    சிறப்பாக இருந்தது.
  • 1923-24இல் ஒரு
    சிறிய தடுமாற்றத்திற்குப் பிறகு,
    நெசவுத் தொழில் சிறப்பாக
    செயல்படத் தொடங்கியது.
  • 1929-30ல் இந்தியாவால் 44 சதவீதம் வெளியில் இருந்து
    நுகர்வு செய்யப்பட்ட பருத்திப்
    பொருட்கள் 1933-34இல் பெருமந்த
    நிலைக்குப் பிறகு, 20.5 சதவீதமாகக் குறைந்துவிட்டது.
  • வளர்ச்சி அடைந்த
    ஏனைய இரண்டு தொழில்கள்
    சர்க்கரை உற்பத்தியும் சிமெண்ட்
    உற்பத்தியுமாகும்.
  • போர்களுக்கு இடைப்பட்ட
    ஆண்டுகளில் கப்பல் தொழிலும்
    வளர்ச்சியைக் கண்டது.
    இந்தியா நீராவிக்
  • கப்பல் கம்பெனி
    லிமிடெட் (1919) ஏனையவற்றிற்கு முன்னோடியாக இருந்தது. –
  • 1939இல், அவர்கள்
    பிரிட்டிஷாரின் பம்பாய்
    நீராவிக் கப்பல் நிறுவனத்தையும் வாங்கிவிட்டனர்.
  • இரண்டாம் உலகப்போருடன் ஒரு புதிய கட்ட
    உற்பத்தி துவங்கி. அது
    இயந்திர உற்பத்தி, விமானப்
    போக்குவரத்து. ரயில்
    பெட்டி, ரயில் எஞ்சின்
    உற்பத்தி மற்றும் பலவற்றிற்கான உற்பத்தித் தொழில்களாய் விரிவடைந்தது.

 

3.பொருளாதாரப் பெரும் மந்தம் ஏற்பட்ட போது சமூக, பொருளாதார மற்றும் அரசியல் லட்சியங்கள் வெளிப்படுத்துவதில் இந்திய தேசிய காங்கிரசின் கராச்சி மாநாட்டின் முக்கியத்துவத்தை ஆய்வு செய்க.

விடை:

  • இந்திய தேசிய
    காங்கிரஸ், புரட்சியாளர்களின் வன்முறைச்
    செயல்களுக்கு மாறாக,
    வன்முறையற்ற போராட்டங்களுக்கு மக்களை
    அணி திரட்டியது.
  • தனது சட்டமறுப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக
    காங்கிரஸ் குத்தகை செலுத்தா
    மற்றும் வரிசெலுத்தாப் போராட்டத்தைக் கடைபிடித்தது.
  • பெருமந்த அழுத்தத்தினால் ஏற்பட்ட சமூகபொருளாதாரத் தேவைகள் கராச்சியின் காங்கிரஸ்
    அமர்வில் தீவிரமாய் பேசப்பட்டது.
  • விடுதலைப் போராட்டம்
    ஒரு புதிய வடிவம்
    பெற்றது. விவசாயிகள் கிசான்
    சபா எனப்படும் விவசாயிகள் சங்கத்தில் தங்களை இணைத்துக்
    கொண்டும் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் இணைந்து கொண்டும்
    தங்களது பெரிய அளவிலான
    ஈடுபாட்டை சுதந்திரப் போராட்டக்களத்தில் உயர்த்தினர்.
  • நேருவின் தலைமையின்
    கீழ் வந்த காங்கிரஸ்
    சமூக மற்றும் பொருளாதார
    நீதி அடிப்படையில் ஒரு
    சமத்துவ சமூகத்தைப் பற்றிப்
    பேச ஆரம்பித்தது.
  • 1931 மார்ச்சில் நடந்த
    கராச்சி அமர்வு சர்தார்
    வல்லபாய் படேல் தலைமையில்
    அடிப்படை உரிமைகள் மற்றும்
    கடமைகளில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிய தோடல்லாமல் சுதந்திர
    இந்தியாவின் பொருளாதார கொள்கை
    பற்றிய ஒரு பார்வையை
    வழங்கியது.
  • அடிப்படை உரிமைகள்
    தீர்மானத்தை மேலோட்டமாய் பார்த்தால் கூட பிரிட்டிஷாரால் நமது
    அடிப்படை உரிமைகள் எப்படியெல்லாம் மறுக்கப்பட்டுள்ளது என்பது
    தெரியும்.
  • அதனால்தான் அடிப்படை
    உரிமைகள் தீர்மானத்தில் முக்கிய
    இடம் பிடித்துள்ளது.
  • கொடூரமான சட்டங்கள்
    போட்டும், அடக்குமுறைகளைக் கையாண்டும் மக்களின் சுதந்திரத்தைக் காலனியரசு
    நசுக்கியது.
  • சுதந்திர இந்தியாவில் இந்திய தேசிய காங்கிரஸ்
    தான் வழங்க உறுதி
    அளித்துள்ள உரிமைகள் பட்டியலில் காந்தியக் கொள்கைகளும் நேருவின்
    சோசலிஷப் பார்வைகளும் இடம்
    பெற்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -