Join Whatsapp Group

Join Telegram Group

12th History – Lesson 13 – ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும் – Tamil Medium

By admin

Updated on:

 

12th History – Lesson 13 – ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும் – Tamil
Medium

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

1.ஜெர்மனியின் முன்னேறி வந்து கொண்டிருந்த படைகளை பிரான்ஸ் வெற்றிகரமாக தடுத்து தோற்கடித்த போரின் பெயர் என்ன?

)
மார்னே போர்

)
டானென்பர்க் போர்

)
வெர்டூன் போர்


)
சோம் போர்

விடை: ) மார்னே
போர்

 

2.‘அரசின் தடையற்ற ‘ (Laissez Faire) என்னும் பதத்தை உருவாக்கியவர் ……………. ஆவார்.

)
ஜான் A. ஹாப்சன்

)
கார்ல் மார்க்ஸ்

)
ஃபிஷர்

)
கௌர்னே

விடை: ) கௌர்னே

 

3.An
Inquiry into the Nature and Cause of the Wealth of Nations
என்ற நூலை எழுதியவர் …………….. ஆவார்.

)
ஆடம் ஸ்மித்

)
தாமஸ் பைன்

)
குஸ்னே

)
கார்ல் மார்க்ஸ்

விடை: ) ஆடம்
ஸ்மித்

 

4.இங்கிலாந்து ……………… ஆம் ஆண்டில் தடையற்ற வணிகக் கொள்கையைப் பின்பற்றத் துவங்கியது

)
1833

)
1836

)
1843

)
1858

விடை: ) 1833

 

5.கூற்று: பத்தொன்பதாம் நூற்றாண்டின் இரண்டாவது பாதியில் பல நாடுகள் மிகை உற்பத்தியால் பிரச்சனைகளை எதிர்கொண்டன.

காரணம்:
மிகை உற்பத்தி, நாடுகளை புதிய சந்தைகளைக் கண்டுபிடிக்க அழுத்தங்கொடுத்தது.

)
கூற்றும் காரணமும் சரி.
காரணம் கூற்றை விளக்குகிறது

)
கூற்றும் காரணமும் சரி.
ஆனால் காரணம் கூற்றை
விளக்கவில்லை

)
கூற்று சரி. காரணம்
தவறு

)
அமெரிக்க ஐக்கிய நாடு

விடை: ) கூற்றும்
காரணமும் சரி. காரணம்
கூற்றை விளக்குகிறது

 

6.1879ஆம் ஆண்டில் ……………. கட்டண சட்டத்தை இயற்றியது.

)
ஜெர்மனி

)
பிரான்ஸ்

)
பிரிட்டன்

)
அமெரிக்க ஐக்கிய நாடு

விடை: ) ஜெர்மனி

 

7.…………..
க்குப் பின் ஷிமனோசெகி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

)
ரஷ்யஜப்பனியப் போர்

)
இரண்டாம் அபினிப் போர்

)
இரண்டாம் ஆங்கிலோசீனப்
போர்

)
சீனஜப்பானியப் போர்

விடை: ) சீனஜப்பானியப் போர்

 

8.போர்ட்ஸ்ம வுத் ஒப்பந்தம் ஏற்படும் பொருட்டு மத்தியஸ்தம் புரிந்த நாடு ………….. ஆகும்.

)
ஸ்பெயின்

)
பிரிட்டன்

)
அமெரிக்க ஐக்கிய நாடு

)
பிரான்ஸ்

விடை: ) அமெரிக்க
ஐக்கிய நாடு

 

9.எந்த நாடு 21 நிர்ப்பந்தங்களை புதிதாக உருவாக்கப்பட்ட சீன குடியரசின் தலைவர் முன் சமர்ப்பித்தது?

)
பிரான்ஸ்

)
ரஷ்யா

)
ஜப்பான்

)
பிரிட்டன்

விடை: ) ஜப்பான்

 

10.……………….
அடிப்படையாகக் கொண்டு அல்பேனியா எனும் புதுநாடு உருவாக்கப்பட்டது.

)
புக்காரெஸ்ட் உடன்படிக்கை, 1913

)
வெர்செய்ல்ஸ் உடன்படிக்கை , 1919

)
லண்டன் உடன்படிக்கை, 1913

)
செயின்ட் ஜெர்மெய்ன் உடன்படிக்கை

விடை: ) லண்டன்
உடன்படிக்கை, 1813

 

11.கீழ்க்காண்பனவற்றுள் எந்நாடு மையநாடுகள் சக்தியில் அங்கம் வகிக்கவில்லை?

)
பல்கேரியா

)
ஆஸ்திரியஹங்கேரி

)
துருக்கி

)
மான்டி நீக்ரோ

விடை: ) ஆஸ்திரியஹங்கேரி

 

12.பாரிசை நெருங்கிக் கொண்டிருந்த தாக்குதலை உணர்ந்து பிரெஞ்சு அரசு …….. பகுதிக்கு நகர்ந்து சென்றது.

)
மார்செல்லிஸ்

)
போர்டியாக்ஸ்

)
லியோன்ஸ்

)
வெர்செய்ல்ஸ்

விடை: ) போர்டியாக்ஸ்

 

13.கீழ்க்காண்பனவற்றுள் வெர்செய்ல்ஸ் ஒப்பந்தத்தின் பகுதியாக கருதப்படாதது எது?

)
ஜெர்மனி அல்சேஸ் மற்றும்
லொரைன் பகுதிகளை பிரான்சிடம் ஒப்படைக்க வேண்டும்

)
சார் பள்ளத்தாக்கு பிரான்சிற்கு வழங்கப்பட வேண்டும்

)
ரைன்லாந்தை தோழமை நாடுகள்
ஆக்கிரமித்துக் கொள்ள
வேண்டும்

)
டான்சிக் போலந்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லப்பட
வேண்டும்

விடை: ) ரைன்லாந்தை தோழமை நாடுகள் ஆக்கிரமித்துக் கொள்ள வேண்டும்

 

14.கீழ்க்காண்பனவற்றுள் சரியாகப் பொருத்தப்படாத ஒன்றைச் சுட்டுக.

.விடுதலை
ஆணை – 1. இரண்டாம் அலெக்ஸாண்டர்

.இரத்த
ஞாயிறு – 2. இரண்டாம் நிக்கோலஸ்

.(ரஷ்யாவில்
500
அடிமைகளின் கலவரங்கள் – 3. முதலாம்
நிக்கோலஸ்

.பிரெஸ்ட்லிடோவ்ஸ்க் உடன்படிக்கை – 4. மூன்றாம் அலெக்ஸாண்டர்

விடை: ) பிரெஸ்ட்லிடோவ்ஸ்க் உடன்படிக்கைமூன்றாம் அலெக்ஸாண்டர்

 

15.கூற்று: பன்னாட்டு சங்கம் அதிகாரத்தை செயல்படுத்த முடியாத நிலையில் இருந்தது.

காரணம்:
கூட்டுப்பாதுகாப்புஎன்ற கொள்கையை மெய் வழக்கத்திற்குள் நடைமுறைப்படுத்த முடியவில்லை .

)
கூற்றும் காரணமும் சரி.
காரணம் கூற்றை விளக்குகிறது

)
கூற்றும் காரணமும் சரி.
ஆனால் காரணம் கூற்றை
விளக்கவில்லை

)
கூற்று சரி. காரணம்
தவறு

)
கூற்று தவறு. காரணம்
சரி

விடை: ) கூற்றும்
காரணமும் சரி. ஆனால்
காரணம் கூற்றை விளக்கவில்லை

 

16.கூற்று: உலகையே கடுமையாக பாதித்தப் பொருளாதார பெருமந்தம் சோவியத் ரஷ்யாவை பாதிக்கவில்லை.

காரணம்:
நிலம் சமூக உடைமையாக அறிவிக்கப்பட்டு ஏழை மக்களுக்குப் பிரித்து வழங்கப்பட்டது.

)
கூற்றும் காரணமும் சரி.
காரணம் கூற்றை விளக்குகிறது

)
கூற்றும் காரணமும் சரி.
ஆனால் காரணம் கூற்றை
விளக்கவில்லை

)
கூற்று சரி. காரணம்
தவறு

)
கூற்று தவறு. காரணம்
சரி

விடை: ) கூற்றும்
காரணமும் சரி. காரணம்
கூற்றை விளக்குகிறது

 

17.பன்னாட்டு சங்கத்தின் முதல் பொது செயலாளரான எரிக்ட்ரம்மோன்ட் ………. …….நாட்டைச் சேர்ந்தவர் ஆவார்.

)
பிரான்ஸ்

)
தென்னாப்பிரிக்கா

)
பிரிட்டன்

)
அமெரிக்க ஐக்கிய நாடு

விடை: ) பிரிட்டன்

 

18.பன்னாட்டு சங்கம் ………….. ஆம் ஆண்டு கலைக்கப்பட்டது.

)
1939

)
1941

)
1945

)
1946

விடை: ) 1946

 

19.ஹிட்லரை ஜெர்மனியின் பிரதம அமைச்சராக நியமித்தவர் யார்?

)
ஜெனரல் லூடன்டார்ஃப்

)
வான் ஹிண்டன்பர்க்

)
ஜெனரல் ஸ்மட்ஸ்

)
ஆல்ஃபிரட்வான் பெத்மண்

விடை: ) வான்
ஹிண்டன்பர்க்

 

20.முசோலினி ஆசிரியராகப் பணியாற்றிய பத்திரிகையின் பெயர் யாது?

)
அவந்தி

)
ப்ராவதா

)
மார்க்சிஸ்ட்

)
மெயன் காமப்

விடை: ) அவந்தி

 

II. குறுகிய விடையளிக்கவும்

1.ஜெர்மனி பிரான்சை தனிமைப்படுத்த முனைந்ததேன்?

விடை:

பிரான்ஸ்
நாடு அல்சேசையும், லொரைனையும் இழந்தமைக்குப் பழிவாங்கக் கூடும் என்று பிஸ்மார்க் எதிர்பார்த்தார்.

அதனால்
பிரான்சை தனிமைப்படுத்த அவர்
(
ஜெர்மனி) தீர்மானம் கொண்டார்.

 

2.பிரிட்டனுக்கும் பிரான்சுக்குமிடையே
1904
இல் கையெழுத்திடப்பட்ட
நாடுகளுக்கிடையே நட்புறவின் (Entente Cordiale)
முக்கியத்துவம் யாது?

விடை:

பிரான்சு
பிரிட்டனின் நட்பைக் கோரி
மொராக்கோ, எகிப்து சார்ந்த
பிணக்குகளை தீர்க்க முன்வந்தது.

மொராக்கோவில் தன்னிச்சையாக செயல்பட
விடுத்து, பிரிட்டன் எகிப்தை
ஆக்கிரமித்தமைக்கு பிரான்சின் அங்கீகாரத்தை பெற்றது.

 

3.பால்கன் சிக்கலின் விளைவுகள் உள்ளடக்கிய சிறப்புக் கூறுகளை எழுதுக.

விடை:

பல்கேரியர்கள் தாங்கள் வஞ்சிக்கப்பட்டதாக உணர்ந்து
அதற்காக செர்பியர்களை பழிவாங்க
துடித்தனர்.

செர்பியர்கள் மிதமிஞ்சிய வெற்றிக்களிப்பில் திளைத்தார்கள்.

ஆஸ்திரியர்களுக்கு எதிரான போராட்டங்கள் செர்பியாவிலும், அதன்
அண்டை நாடான போஸ்னியாவிலும் மிகுந்த தீவிரவாதத் தன்மை
கொண்டதாக மாறியது.

 

4.“மூவர் தலையீடுஎனப்படுவது யாது?

விடை:

  • சீனஜப்பானிய
    போரின் முடிவில் ஏற்படுத்தப்பட்ட ஷிமனோசெக் உடன்படிக்கையின் படி
    ஜப்பானிற்கு ஃபார்மோஷா, ஆர்தர்
    துறைமுகம், லியோடுங் தீபகற்பம்
    ஆகிய பகுதிகள் வழங்கப்பட்டன.
  • ஜப்பானின் இந்த
    தீடீர் வளர்ச்சியைக் கண்டு
    ஐரோப்பிய சக்திகள் அஞ்சின.
  • எனவே பிரான்சு,
    இங்கிலாந்து, ரஷ்யா ஆகிய
    நாடுகள் தலையிட்டு ஜப்பானை
    லியோடுங் தீபகற்பத்தை ஒப்படைக்கும்படி செய்தன. இதுவே மூவர்
    தலையீடு எனப்படுகிறது.

 

5.முதல் உலகப்போரின் காலத்தில் கிழக்கு திசையில் வான் ஹிண்டன்பர்க் ஆற்றியப் பங்கை விளக்குக.

விடை:

  • கிழக்கு திசையில்
    ரஷ்ய படைகள் பிரஷ்யாவின் கிழக்குப் பகுதி வரை
    ஊடுருவிச் சென்றன.
  • ஜெர்மானிய ஜெனரல்
    வான் ஹிண்டன் பர்க்
    ரஷ்யப் படைகளை எதிர்த்து
    போரிடச் சென்றார்.
  • டானென்பர்க் போரில்
    வான் ஹிண்டன் பர்க்கின்
    போர் திறத்தால் ரஷ்யாவை
    தோற்கடித்தார்.

 

6.ஜட்லாந்துப் போரின் முக்கியத்துவம் பற்றி எடுத்தியம்புக.

விடை:

  • மே 1916ல்
    டென்மார்க்கின் ஜட்லாந்து
    தீபகற்பத்திற்கு அருகில்
    நடைபெற்ற கடல் போர்
    மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
  • இப்போர் முடிவுபடாத ஒரு போராக இருந்தது.
  • ஜட்லாந்து போர்
    முதல் உலகப்போரின் மிக
    பெரும் கடற்போராக கருதப்படுகிறது.
  • கடற்படைப் போர்களை
    ஜெர்மனிய அரசு நீர்முழ்கி கப்பல்களுக்கு தடையேற்படுத்தும் நோக்கம் கொண்ட
    நேச நாடுகளின் கப்பல்களைத் தடையில்லாமல் தாக்க
    அதிகாரம் வழங்கியப் பின்
    நின்று போனது.

 

7.நிகிலிசம் என்றால் என்ன?

விடை:

பல்லாண்டு கால்
கட்டியெழுப்புதலின் வடிவமான
சமூக அமைப்பை எதிர்க்கும் உணர்வின் பிரதிநிதித்துவமே நிகிலிசம்
ஆகும்.

நிகிலிசம் நாட்டின்
அரசு, கிறித்துவ ஆலயம்,
குடும்பம் போன்ற நிறுவனங்கள் கொண்டிருந்த அதிகாரத்தை மறுத்தது.

அதன் நம்பிக்கைகள் விஞ்ஞான அடிப்படையிலான உண்மையைச்
சுற்றியே அமைந்திருந்தன.

 

8.கிரீசிற்கும் பல்கேரியாவிற்குமிடையே
1925
இல் எழுந்த சர்ச்சையை பன்னாட்டு சங்கம் எவ்வாறு தீர்த்து வைத்தது?

விடை:

  • கிரீஸ் பல்கேரியாவின் மீது 1925ல் போர்
    தொடுத்தது.
  • பன்னாட்டுச் சங்கம்
    போர் நிறுத்த ஆணையை
    வெளியிட்டு ஆக்கிரமிப்பை தடுத்தது.
  • விசாரணை மேற்கொண்ட
    பிறகு கிரீசை நஷ்ட
    ஈடு வழங்க ஆணையிட்டது.

 

9.லேட்டரன் உடன்படிக்கை எவ்வாறு முசோலினியின் அதிகாரத்திற்கு சட்டரீதியான அங்கீகாரம் வழங்கியது?

விடை:

  • பாசிசி கட்சிக்கு
    மதிப்பை சம்பாதிக்கும் பொருட்டு
    முசோலினி வாட்டிகன் நகருக்கு
    தனிநாடு அங்கீகாரம் வழங்கினார்.
  • இதனால் ரோமன்
    கத்தோலிக்கத் திருச்சபை
    இத்தாலியப் பேரரசை அங்கீகரித்தது.
  • இத்தாலியின் தேசிய
    சமயமாக ரோமன் கத்தோலிக்க மரபு ஏற்றுக் கொள்ளப்பட்டது. பள்ளிகளில் சமயக்கல்வி கட்டாயமாக்கப்பட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டது.
  • மேற்கூறியவற்றை உள்ளடக்கிய லேட்டரன் உடன்படிக்கை மூலம்
    முசோலினியின் அதிகாரத்திற்கு சட்ட ரீதியான அங்கீகாரம் வழங்கப்பட்டது.

 

10.மூன்றாவது ரெய்ச் என்றால் என்ன?

விடை:

  • ஜெர்மனியில் ஹிட்லரின்
    நாஜி அரசு மூன்றாவது
    ரெய்ச் என குறிப்பிடப்படுகிறது.
  • முதல் உலகப்போருக்குப் பின்பு ஏற்படுத்தப்பட்ட பாராளுமன்ற மக்களாட்சி முறைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
  • இதனால் ஜெர்மனி
    முழுமையான மையப்படுத்தப்பட்ட அரசானது.

 

III. சுருக்கமான விடையளிக்கவும்

1.முதல் மொராக்கோ சிக்கல் எவ்வாறு நிகழ்ந்தது?

விடை:

  • இங்கிலாந்தோடு ஏற்பட்ட
    புரிதலை முன்னிறுத்தி பிரான்சு
    மொராக்கோவில் தனது
    திட்டங்களுக்கு செயல்வடிவம் கொடுக்க நினைத்தது.
  • ஒரு பிரஞ்சு
    தூதுக்குழு 1905ல் மொராக்கோவின் ஃபெஸ் நகரை வந்தடைந்தது.
  • அதை பிரான்சின் பாதுகாப்பிற்குட்பட்ட பகுதியாகவே கருதி செயல்பட்டது.
  • இதற்கு ஜெர்மனி
    தனது எதிர்ப்பைத் தெரிவித்தது.
  • இந்த சர்ச்சையை
    ஐரோப்பிய மாநாடு ஒன்றினுக்கு எடுத்துச் செல்ல பிரான்ஸ்
    உடன்பட்டது.

 

2.அகழிப்போர் எவ்வாறு நடத்தப்பட்டது?

விடை:

  • உலகப் போரை
    அடையாளப்படுத்தும் அகழி
    முறையானது இரண்டு முதல்
    நான்கு அகழிகள் ஒன்றனுக்கு இணையாக மற்றொன்று செல்வதேயாகும்.
  • ஒவ்வொரு அகழியையும் எதிரிகள் சுட்டாலும் சில
    அடிகளுக்கு மேல் தோட்டா
    செல்ல முடியாதபடி நேர்கோட்டில் இல்லாமல் வளைந்து நெளிந்து
    வடிவமைத்திருந்தனர்.
  • அகழிகளின் முக்கிய
    வரிசைகள் ஒன்றோடு ஒன்று
    இணைக்கப்படவும், பின்புறத்தில் தொடர் இணைப்பு அகழிகளும்
    ஏற்படுத்தப்பட்டு அதன்
    வாயிலாக உணவு, வெடிபொருள்கள், புதிய துருப்புகள், கடிதங்கள்,
  • ஆணைகள் போன்றவை
    பரிமாற்றம் செய்யப்பட்டன.

 

3.மிக ஆபத்தான U-படகுகள் மற்றும் Q-கப்பல்கள் பற்றி நீவீர் அறிந்தது என்ன?

விடை:

Q-கப்பல்களும் U-படகுகளும்:

  • முதல் உலகப்போரின் காலத்தில் ஜெர்மனி கொண்டிருந்த மிக அச்சுறுத்தும் ஆயுதம்
    நீர்மூழ்கிகள் அல்லது
    U-
    படகுகளாகும்.
  • பிரிட்டனின் கப்பல்கள்
    அனைத்தையும் மூழ்கடிக்கும் உத்தியை
    ஜெர்மானியர்கள் கடைபிடித்தனர்.
  • Q-கப்பல்கள் பிரிட்டனின் ஜெர்மனிக்கான பதிலடியாகும்.
  • பிரிட்டன் இக்கப்பல்களின் வாயிலாக ஜெர்மனியைத் தாக்குதலைத் தூண்டச் செய்து பின்
    மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ஆயுதங்களையும் படை பலத்தையும் கொண்டு
    பதிலடி கொடுக்கும் உத்தியைக்
    கையாண்டது.

 

4.போரில் அமெரிக்கா நுழைந்த பிறகு நிகழ்ந்தவற்றை வரிசைக்கிரமமாக எடுத்துக் கூறுக.

விடை:

  • அமெரிக்காப் போரில்
    இறங்கியது நேச நாடுகளின்
    வெற்றியை முன்பே உறுதி
    செய்தது போலாயிற்று.
  • ஜெர்மனியின் நட்பு
    நாடுகள் அனைத்தும் அதனைக்
    கைவிட்டு விலகின.
  • பல்கேரியா முதலில்
    சரணடைந்தது.
  • துருக்கியர்கள் போர்
    நிறுத்த ஒப்பந்தத்தில் கையொப்பம்
    இட்டனர்.
  • கெய்சர் அரியணையைத் துறந்து ஹாலந்திற்கு ஓட்டம்
    பிடித்தார்.
  • ஜெர்மனி நவம்பர்
    11
    அன்று சரணடைவதாக கையெழுத்திட்டது.

 

5.ரஷ்யப் புரட்சி அந்நாட்டிற்கு வெளியில் ஏற்படுத்திய பாதிப்புகளை விளக்குக.

விடை:

  • ரஷ்யப் புரட்சி
    உலகம் முழுவதிலும் வாழும்
    மக்களின் நினைவுகளில் பெரும்
    தாக்கத்தை ஏற்படுத்தியது.
  • பல்வேறு நாடுகளிலும் பொதுவுடைமை கட்சி உருவாக்கப்பட்டது.
  • சோவியத் ஐக்கியம்
    காலனி ஆட்சிக்குட்பட்ட நாடுகளை
    தங்களின் விடுதலைக்காகப் போராட
    அறிவுறுத்தி அந்நாடுகளுக்குத் தேவையான
    உதவிகளைச் செய்தது.
  • நிலவுடைமை சீர்திருத்தம், சமூக நலன், தொழிலாளர்
    உரிமைகள், பாலின சமத்துவம்
    போன்ற முக்கியத்துவமானது உலகம்
    முழுவதும் விவாதப் பொருளானது.
  • இது வளர்ந்து
    வரும் நாடுகளுக்கு உத்வேகமளித்ததோடு, முதலாளித்துவத்திற்கு மாற்றான
    ஒரு முறையையும் அறிமுகப்படுத்தியது.

 

6.பன்னாட்டு சங்கம் வெற்றிகரமாக முடித்து வைத்த சிக்கல்கள் பற்றி குறிப்பு வரைக.

விடை:

  • 1920 முதல் 1925 வரை
    பல சிக்கல்களைத் தீர்த்து
    வைக்க அழைத்திருந்தாலும் குறிப்பாக
    மூன்று பிரச்சினைகளை தீர்த்து
    வைத்தது.
  • ஆலந்து தீவுகளின்
    மீது ஸ்வீடனும், பின்லாந்தும் உரிமை கோரின. பன்னாட்டு
    சங்கம் அத்தீவு பின்லாந்தை சேர நெறி ஏற்படுத்தியது.
  • சைலேசியாவை போலந்தும்,
    ஜெர்மனியும் கோரிய போது
    சங்கம் தலையிட்டு வெற்றிகரமாகத் தீர்த்தது.
  • கிரீஸ் பல்கேரியாவின் மீது போர் தொடுத்த
    போது சங்கம் போர்
    நிறுத்த ஆணையை வெளியிட்டு போரை நிறுத்தியது.

 

7.பொருளாதார பெருமந்தம் எவ்வாறு அரசியல் தளத்தில் தாக்கத்தை வெளிப்படுத்தியது என்பதனை விளக்குக.

விடை:

  • பொருளாதார பெருமந்தம் உலக அரசியல் தளத்தில்
    மாற்றங்களை கொண்டு வந்தது.
  • இங்கிலாந்தில் நடைபெற்ற
    தேர்தலில் தொழிலாளர் கட்சி
    தோல்வியுற்றது.
  • பொருளாதார பெருமந்தத்திற்குப் பின் அமெரிக்காவில் 20 ஆண்டு கால குடியரசு
    கட்சி ஆட்சியை இழந்தது.
  • இத்தாலி மற்றும்
    ஜெர்மனியில் பாசிச, நாசிச
    கட்சிகள் அதிகாரத்தை கைப்பற்றின.
  • அர்ஜென்டினா, பிரேசில்,
    சிலி ஆகிய நாடுகளிலும் அரசு மாற்றம் ஆனது.

 

IV. விரிவான விடையளிக்கவும்

1.முதல் உலகப்போரின் காரணங்களையும், விளைவுகளையும் கணக்கிடுக.

விடை:

  • முதல் உலகப்
    போருக்கான காரணங்கள்: * ஜெர்மனியின் பேராசைமிக்க காலனி ஆதிக்க
    பேராதிக்க நடவடிக்கை, ஐரோப்பிய
    நாடுகளின் ரகசிய ராணுவ ஒப்பந்தங்கள்.
  • உலக நாடுகளின்
    ஆதிக்க வெறியை தடுக்க
    சர்வதேச அமைப்பு இல்லாமை.
    ரஷ்யா ஜெர்மனி பிரான்ஸ்
    நாடுகள் படை பலத்தை
    அதிகப்படுத்தியமை.
  • ஐரோப்பிய நாடுகளுக்கிடையே குடியேற்றங்களை அமைப்பதிலும் வணிக நடவடிக்கைகளிலும் ஏற்பட்ட
    போட்டி.
  • ஆப்ரிக்க நாடான
    மொராக்கோவை பிரான்ஸ் கைப்பற்றியதை ஜெர்மனி ஏற்காமை. முதல்
    பால்கன் போரில் துருக்கி
    தோற்கடிக்கப்பட்டு போரின்
    முடிவில் கிடைத்த பகுதிகளை
    பிரிப்பதில் ஏற்பட்ட பிரச்சனை.

உடனடி காரணம்:

போஸனிய தலைநகர்
செரோஜிவா நகரில் ஆஸ்திரிய
பட்டத்து இளவரசர் பெர்டினாண்டும் அரசி இசபெல்லாவும் சுட்டுக்
கொல்லப்பட்டது உடனடிக்
காரணமாக அமைந்தது.

விளைவுகள்:

  • 1919 பாரிஸ் அமைதி
    மாநாட்டின் மூலம் முதல்
    உலகப்போர் முடிவுக்கு வந்தது.
  • தோல்வியுற்ற நாடுகளின்
    மீது பல்வேறு உடன்படிக்கைகள் செய்து கொள்ளப்பட்டது.
  • ஜெர்மனி மீது
    அவமானகரமான வெர்செய்ல்ஸ் உடன்படிக்கை திணிக்கப்பட்டது.
  • ஆஸ்திரியா ஜெர்மன்,
    ஹங்கேரி டிரையனான், பல்கேரியா
    நியூலி, துருக்கி செவ்ரேஸ்
    உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டன.
  • அமெரிக்க அதிபர்
    உட்ரோ வில்சனின் 14 அம்ச
    கோட்பாட்டின் அடிப்படையில் உடன்படிக்கை சரத்துக்கள் வரையப்பட்டன.

 

2.“மார்க்ஸ் தீப்பொறியை வழங்கவும், அதைலெனின் தீபமாக ஏற்றினார்தெளிவுபடுத்துக.

விடை:

  • மார்க்ஸ்சும் ஏங்கல்சும் சோஷலிச புரட்சிக்கு உழைக்கும்
    மக்கள் எவ்வாறு அவசியமோ
    அது போலவே நடுத்தர
    மக்களும் தேவை எனக்
    கருதினர். எனினும் சோஷலிச
    சிந்தனைகளை விட ஒடுக்கப்பட்ட வாழ்க்கை சூழல் அமைந்த
    இடத்தில் மார்க்சியமே செழித்து
    வளர்ந்தது.
  • பெரும் நிறுவன
    ஆற்றல் கொண்ட லெனின்
    மார்க்கசியத்தின் திறன்பெற்ற தலைவரானார்.
  • ரஷ்யாவில் சார்
    மன்னர் இரண்டாம் நிகோலஸ்
    அனுபவமில்லாதவர் அவர்
    ஆட்சியில் இரத்த ஞாயிறு
  • சம்பவத்தில் நிறைய
    பொதுமக்கள் மாண்டதும் அவரின்
    முடிவை எதிர்த்த பாராளுமன்றமோ அடிக்கடி கலைக்கப்பட்டதும் அவருக்கு
    அப்பெயரை தந்தது.
  • 1917 பிப்ரவரியில் உணவு
    பற்றாக்குறையால் பெண்
    தொழிலாளர்கள் வேலை
    நிறுத்தத்தில் இறங்க
    அவர்களுக்கு ஆதரவாக 4 லட்சம்
    தொழிற்சாலை பணியாளர்கள் போராட்டத்தில் இறங்கினர்.
  • மார்ச் 15 அன்று
    மன்னர் பதவி விலகினார்.
  • அரசின் செயல்பாடுகளை எடுத்துச் செல்ல டூமாவில்
    இருந்தவர்கள் சோவியத்துக்களின் ஒப்புதல் பெற்று
    இடைக்கால அரசை நிறுவினர்.
  • புரட்சி தொடங்கிய
    காலத்தில் லெனின் சுவிட்சர்லாந்தில் இருந்தார். அனைத்து
    அதிகாரங்களும் சோவியத்துக்களுக்கே என்ற அவரது
    கூற்று 
    தொழிலாளர்களை ஈர்த்தது.
  • இடைக்கால அரசு
    புரிந்த தவறுகள் போல்ஷ்விக்குள் தலைமையில் பெட்ரோகிராட் கிளர்ச்சியை தீவிரமாக்கியது.
  • பின்லாந்தில் மறைந்திருந்த லெனின் தவிர மற்ற
    போல்ஷ்விக்குகள் கைது
    செய்யப்பட்டனர். கெரன்ஸ்கி
    பிரதமரானார்.
  • அக்டோபர் மாதம்
    லெனின் போல்ஷ்விக் கட்சியிடம் ஒரு புரட்சியை நடத்த
    அறிவுறுத்தினார்.
  • அதற்கு ட்ராட்ஸ்கி செயல் வடிவம் கொடுத்தார்.
  • அரசு கட்டமைப்புயாவும் நவம்பர் 3 அன்று
    புரட்சி படையால் கைப்பற்றப்பட்டது.
  • 1917 நவம்பர் 8 அன்று
    லெனின் தலைமையில் புது
    பொதுவுடைமை அரசு பதவி
    ஏற்றது.

 

3.வெர்செய்ல்ஸ் ஒப்பந்தம் ஜெர்மனியைப் பொறுத்தமட்டில் கடுமையானதாகவும், அவமானப்படுத்தக் கூடியதாகவும் தெரிந்ததுஇக்கூற்றினுக்கான ஆதாரப் பின்புலத்தை உறுதிப்படுத்துக.

விடை:

வெர்செய்ல்ஸ் ஒப்பந்தமும் ஜெர்மனியும்:

  • ஜெர்மனியும் அதன்
    கூட்டு நாடுகளுமே போரில்
    விளைந்த இழப்புகளுக்கும் சேதங்களுக்கும் பொறுப்பெனக் கொள்ளப்பட்டது.
  • அல்சேசையும் லொரைனையும் ஜெர்மனி பிரான்சிடம் ஒப்படைத்தது.
  • சார் பள்ளத்தாக்கின் நிலக்கரி சுரங்கங்களை பிரான்சிடம் வழங்கப்படவேண்டும் என
    முடிவு செய்யப்பட்டது.
  • ஜெர்மனியின் பால்டிக்
    துறைமுகமான டான்சிக் பன்னாட்டு
    நிறுவனத்தின் மேற்பார்வையில் விடப்பட்டது.
  • கடல் வெளியில்
    ஜெர்மனி வைத்திருந்த பகுதிகள்
    யாவையும் தோழமை நாடுகளுக்கு விட்டுக் கொடுக்கக் கட்டாயப்படுத்தப்பட்டது.
  • ஜெர்மானிய காலனிகள்
    யாவும் பன்னாட்டு சபையின்
    கட்டாயத்திற்குள் கொண்டுவரப்பட்டது
  • பிரான்சு மற்றும்
    பெல்ஜியத்தின் மீது
    புதிய தாக்குதலை தவிர்க்கும் பொருட்டு ரைன் பள்ளத்தாக்கில் அரண் அமைக்கவோ படைகளை
    குவிக்கவோ ஜெர்மனிக்கு தடைவிதிக்கப்பட்டது.

ஜெர்மனிய படைகுறைப்பு:

  • ஜெர்மனி நிராயுதபாணியாக்கப்பட்டு அதன் நீர்முழ்கிக் கப்பல்களையும், போர்க்
    கப்பல்களையும் இழக்கச்
    செய்யப்பட்டது.
  • இராணுவப் பயன்பாட்டிற்கோ, கப்பற்படையின் தேவைக்கென்றோ ஜெர்மனி விமானங்களை கொண்டிருக்கக்கூடாது.
  • தரைப்படை அதிகாரிகளையும், பிறப்பணியாளர்களையும் சேர்த்து
    1,00,000
    என்ற எண்ணிக்கையைத் தாண்டக்கூடாது.
  • கடற்படையும் வெகுவாகக்
    குறைக்கப்பட்டது.
  • இவ்வாறாக வெற்றியாளர்களால் பகுதி வாரியாகவும், இராணுவ வகையிலும் பொருளாதார
    முறையிலும் ஜெர்மனி பலவீனப்படுத்தப்பட்டு அவமானப்படுத்தக்கூடியதாக அமைந்தது.

 

4.முசோலினியும், ஹிட்லரும் பாசிச அரசுகளை முறையே இத்தாலியிலும் ஜெர்மனியிலும் நிறுவ சாதகமான சூழல் எழுந்தமையை விளக்குக.

விடை:

பாசிசம்:

  • முதலாம் உலகப்
    போரில் பங்கு பெற்றதன்
    விளைவாக இத்தாலியின் பொருளாதாரம் சீரழிந்தது.
  • போரில் வெற்றி
    பெற்றது ஆனால் அமைதி
    இழந்தது.
  • நிலையான ஆட்சி
    இல்லாமையால் மக்கள் அதிருப்தி
    அடைந்தனர்.
  • நாட்டின் கடன்
    சுமை பன்மடங்கானது.
  • 1922 அக்டோபர் 30ம்
    நாள் பாசிஸ்டுகள் ரோம்
    நகரில் பிரம்மாண்ட அணி
    வகுப்பை நடத்தினர்.
  • அரசர் விக்டர்
    இமானுவேல் அரசமைக்கும்படி முசோலினிக்கு வேண்டுகோள் 
    விடுத்தார்.

நாசிசம்:

  • முதல் உலகப்போரின் போது ஹிட்லர் பவேரிய
    ராணுவத்தில் பணியாற்றினார். யூத
    மார்க்சியவாதிகளை வெறுத்தார்.
  • 1923ல் சரியாக
    திட்டமிடாமல் மூனிச்
    புறநகர் பகுதியில் அவர்
    நடத்த முயன்ற புரட்சி
    தோல்வியில் முடிந்து சிறைப்படுத்தப்பட்டார்.
  • சிறையில் இருந்த
    காலத்தில் தன் சிந்தனைகளை மெயின் கெம்ப் என்னும்
    நூலாக எழுதினார்.
  • 1931ல் உலக
    பெருமந்தம் ஜெர்மனியை சிக்க
    வைத்தது.
  • இதனால் முதலாளிகள் நிலவுடைமையாளர்கள் பாசிசத்தின் பக்கம் சாய்ந்தனர்.
  • ஹிட்லர் இதை
    நன்கு பயன்படுத்திக் கொண்டார்.
  • ஜெர்மனியில் குடியரசு
    கட்சி ஆட்சி வீழ்ந்ததை
    தொடர்ந்து தொழிலதிபர்கள் தந்த
    அழுத்தத்தால் குடியரசுத் தலைவர் ஹிண்டன்பர்க் ஹிட்லரை
    ஜெர்மனியின் சான்சலராக நியமித்தார்.
  • ஹிட்லரின் நாசிச
    அரசு ஜெர்மனியில் பாராளுமன்ற மக்களாட்சி முறைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

 

V. செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

1. இணையத்தில் (YouTube) இருக்கும்
முதல் உலகப்போர் தொடர்பான
காணொளிகளை மாணவர்களுக்குத்

தெரியப்படுத்தலாம்.

2. முதல் உலகப்போருக்கு முன்பும் பின்பும் வரைபடத்தில் நிகழ்ந்துள்ள மாற்றங்களை ஒப்பிட்டு போர் நடந்த
பகுதிகளைக் குறிக்க மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உதவலாம்.

3. பன்னாட்டு சங்கத்தின் வெற்றி, தோல்விகளை மாணவர்களைக் கொண்டு விவாதிக்கச் செய்யலாம்.
(
மார்ச் 2020)

4.ஆசிரியர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Related Post

Leave a Comment

× Xerox Shop [1 page - 50p Only]