12th History – Lesson 10 – நவீன உலகம்: பகுத்தறிவின் காலம் – Tamil
Medium
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
1.கீழ்க்கண்டவற்றில் எது சுதந்திரமான வர்த்தக நகரம் இல்லை ?
அ)
நூரெம்பெர்க்
ஆ)
ஆன்ட்வெர்ப்
இ)
ஜெனோவா
ஈ)
செயின்ட் பீட்டர்ஸ்பர்க்
விடை: ஈ) செயின்ட்
பீட்டர்ஸ்பர்க்
2.கீழ்க்கண்டவற்றில் எது சமயத்தை இரண்டாம் நிலைக்கு தள்ளியது?
அ)
மறுமலர்ச்சி
ஆ)
சமயச் சீர்திருத்தம்
இ)
புவியியல் கண்டுபிடிப்பு
ஈ)
வர்த்தகப் புரட்சி
விடை: அ) மறுமலர்ச்சி
3.கீழ்க்கண்ட போப்பாண்டவர்களில்
இத்தாலிய மறுமலர்ச்சிக்கு ஆதரவாகச் செயல்படாதவர் யார்?
அ)
ஐந்தாம் நிக்கோலஸ்
ஆ)
இரண்டாம் ஜூலியஸ்
இ)
இரண்டாம் பயஸ்
ஈ)
மூன்றாம் பால்
விடை: ஈ) மூன்றாம்
பால்
4.வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எவருடைய வெற்றி பெரிதும் ஊக்கம் தந்தது?
அ)
மார்க்கோ போலோ
ஆ)
ரோஜர் பேக்கன்
இ)
கொலம்பஸ்
ஈ)
பார்தோலோமியோ டயஸ்
விடை: இ) கொலம்பஸ்
5.கூற்று: காகிதம் கி.மு (பொ.ஆ.மு) இரண்டாம் நூற்றாண்டில் சீனாவில் தோன்றியது.
காரணம்:
நகரும் அமைப்பிலான அச்சு இயந்திரத்தை ஜெர்மனி கண்டுபிடித்தது.
அ)
கூற்று மற்றும் காரணம்
இரண்டும் சரி. காரணம்
கூற்றை விளக்குகிறது.
ஆ)கூற்று
மற்றும் காரணம் இரண்டும்
சரி. ஆனால் காரணம்
கூற்றை விளக்கவில்லை .
இ)
கூற்று சரி, காரணம்
தவறு
ஈ)
கூற்று தவறு. காரணம்
சரி
விடை: ஆ) கூற்று
மற்றும் காரணம் இரண்டும்
சரி. ஆனால் காரணம்
கூற்றை விளக்கவில்லை .
6.பின்வருவனவற்றில் எது மறுமலர்ச்சி காலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு யோசனை அல்ல?
அ)
பகுத்தறிவுவாதம்
ஆ)
ஐயுறவுவாதம்
இ)
அரசில்லா நிலை
ஈ)
தனித்துவம்
விடை: இ) அரசில்லா
நிலை
7.நவீன செயல்முறை அறிவியலின் தந்தை எனக் கருதப்படுபவர் யார்?
அ)
அரிஸ்டாட்டில்
ஆ)
பிளாட்டோ
இ)
ரோஜர் பேக்கன்
ஈ)
லாண்ட்ஸ்டெய்னர்
விடை: இ) ரோஜர்
பேக்கன்
8.மனிதகுலத்தை சமயமரபு அல்லது அதிகாரம் மூலமாக ஆட்சி செலுத்தாமல் காரணங்கள் மூலம் ஆட்சி செலுத்த வேண்டும் என்று விரும்பியவர் யார்?
அ)
தாந்தே
ஆ)
மாக்கியவல்லி
இ)
ரோஜர் பேக்கன்
ஈ)
பெட்ரார்க்
விடை: இ) ரோஜர்
பேக்கன்
9.துருக்கியர்களுக்கு எதிரான போரில் மேற்கத்திய நாடுகளின் உதவியை நாடி இத்தாலிக்கு சென்றவர் யார்?
அ)
ஜியோவனி அவுரிஸ்பா
ஆ)
மேனுவல் கிரைசாலொரஸ்
இ)
ரோஜர் பேக்கன்
ஈ)
கொலம்பஸ்
விடை: ஆ) மேனுவல்
கிரைசாலொரஸ்
10.கூற்று: கலிலியோ கலிலிதேவாலய விரோத போக்குக்காக கிறித்தவதிருச்சபையால்
விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
காரணம்:
சூரியனை மையமாக வைத்து கோள்கள் சுற்றுகின்றன என்ற கோபர்நிகஸின் சூரியமையக் கோட்பாட்டை அவர் ஏற்றார்.
அ)
கூற்று மற்றும் காரணம்
இரண்டும் சரி. காரணம்
கூற்றை விளக்குகிறது.
ஆ)
கூற்று மற்றும் காரணம்
இரண்டும் சரி. ஆனால்
காரணம் கூற்றை விளக்கவில்லை .
இ)
கூற்று சரி. காரணம்
தவறு
ஈ)
கூற்று தவறு. காரணம்
சரி.
விடை: அ) கூற்று
மற்றும் காரணம் இரண்டும்
சரி. காரணம் கூற்றை
விளக்குகிறது.
11.கீழ்க்கண்டவற்றில் எது சரியான அறிக்கை அல்லது அறிக்கைகள்?
அறிக்கை I: இத்தாலியர்கள் தாங்கள் பண்டைய வைக்கிங்கின் வழித்தோன்றல்கள் என்ற
நம்பிக்கையை பாதுகாக்க முயன்றனர்.
அறிக்கை II: துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்து மூலமாக
கடல் பயண ஆபத்துகள்
குறைக்கப்பட்டன.
அறிக்கை III: கிறித்தவ
சமயத்தைப் பரப்பும் ஆர்வம்
புதிய நிலப்பகுதிகளை கண்டுபிடிப்பதில் ஊக்கம் தந்தது.
அறிக்கை IV: பெர்டினான்ட் மெகல்லன் மேற்குநோக்கிப் பயணித்து
பிரேசிலைக் கண்டுபிடித்தார்.
அ)
I, II மற்றும் III
ஆ)
II மற்றும் III
இ)
1 மற்றும் III
ஈ)
அனைத்தும் சரி
விடை: ஆ) II மற்றும்
III
12.கீழ்க்கண்டவற்றில் எது லியானர்டோ டாவின்சியின் ஓவியம் இல்லை?
அ)
வர்ஜின் ஆஃப் ராக்ஸ்
ஆ)
இறுதி விருந்து
இ)
மோனலிசா
ஈ)
மடோனாவும் குழந்தையும்
விடை: ஈ) மடோனாவும்
குழந்தையும்
13.போப்பாண்டவரால் கட்டப்பட்ட ரோமில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தை நவீனமயமாக்கியவர் யார்?
அ)
டோனடெல்லா
ஆ)
ரபேல்
இ)
லியானர்டோ டாவின்சி
ஈ)
மைக்கேல் ஆஞ்சிலோ
விடை: ஈ) மைக்கேல்
ஆஞ்சிலோ
14.கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருத்தப்படவில்லை
?
அ)
மார்லோவ் – டிடோ
ஆ)ஷேக்ஸ்பியர் – கிங் லியர்
இ)
பிரான்சிஸ் பேக்கன் – நோவும்
ஆர்கனும்
ஈ)
ரோஜர் பேக்கன் – டெக்கமரான்
விடை: ஈ) ரோஜர்
பேக்கன் – டெக்கமரான்
15.கூற்று: துருக்கிய வெற்றிகளும் கான்ஸ்டான்டிநோபிளின்
வீழ்ச்சியும் கிழக்குப் பகுதிக்கு ஒரு கடல் வழித்தடத்தை கண்டுபிடிக்க ஊக்கமாக இருந்தது.
காரணம்:
கிழக்கில் இருந்து கிடைக்கும் பொருட்களின் தேவைகள் அதிகரித்ததால் கடல்வழி – வாணிபத்தை கட்டுப்படுத்த ஐரோப்பிய நாடுகள் விரும்பின.
அ)
கூற்று மற்றும் காரணம்
இரண்டும் சரி. காரணம்
கூற்றை விளக்குகிறது.
ஆ)கூற்று
மற்றும் காரணம் இரண்டும்
சரி. ஆனால் காரணம்
கூற்றை விளக்கவில்லை .
இ)
கூற்று சரி காரணம்
தவறு கட்ட
ஈ)
கூற்று தவறு காரணம்
சரி.
விடை: இ) கூற்று
சரி காரணம் தவறு
16.மெகல்லனின் மறைவுக்குப் பிறகு எந்தக் கப்பல் திரும்பியது?
அ)
சாண்டா மரியா
ஆ)
பிண்ட்டா
இ)
நினா
ஈ)
விட்டோரியா
விடை: ஈ) விட்டோரியா
17.ஸ்பெயினுக்காக மெக்சிகோவைக் கைப்பற்றியவர் யார்?
அ)
பெட்ரோ காப்ரல்
ஆ)
கொலம்பஸ்
இ)
ஹெர்னன் கார்ட்ஸ்
ஈ)
ஜேம்ஸ் குக்
விடை: இ) ஹெர்னன்
கார்ட்ஸ்
18.இங்கிலாந்தில் எட்டாம் ஹென்றியால் மேலாதிக்கச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு எது?
அ)
1519
ஆ)
1532
இ)
1533
ஈ)
1534
விடை: ஈ) 1534
19.கூற்று: கொள்ளை நோய்க்கான காரணங்களை விளக்க முடியாததால் கொள்ளை நோய் தேவாலயத்தின் நிலையை பலவீனப்படுத்தியது.
காரணம்:
போப்பாண்டவரின் அதிகாரம் பெரும் சவால்களை எதிர்கொண்டது.
அ)
கூற்று மற்றும் காரணம்
இரண்டும் சரி. காரணம்
கூற்றை விளக்குகிறது.
ஆ)
கூற்று மற்றும் காரணம்
இரண்டும் சரி. ஆனால்
காரணம் கூற்றை விளக்கவில்லை.
இ)
கூற்று சரி காரணம்
தவறு
ஈ)
கூற்று தவறு காரணம்
சரி.
விடை: அ) கூற்று
மற்றும் காரணம் இரண்டும்
சரி. காரணம் கூற்றை
விளக்குகிறது.
20.ஏழாம் கிரிகோரியால் கத்தோலிக்க திருச்சபை நடவடிக்கைகளில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட ஆட்சியாளர் யார்?
அ)
ஏழாம் ஹென்றி
ஆ)
எட்டாம் ஹென்றி
இ)
இரண்டாம் ஹென்றி
ஈ)
ஆறாம் ஹென்றி
விடை: ஈ) ஆறாம்
ஹென்றி
II. குறுகிய விடையளிக்கவும்
1.கிறித்தவ சீர்திருத்த இயக்கத்துக்கு எராஸ்மஸ் எவ்வாறு வழியமைத்தார்?
விடை:
எராஸ்மஸ்:
- எராஸ்மஸ், தேவாலாய
வழக்கங்கள் மற்றும் போதனைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தினார். - இவரது சிறந்த
படைப்பு “மடமையின் புகழ்ச்சி”
என்பதாகும். - இது கிறித்துவ
துறவிகள் மற்றும் இறையியல்
போதகர்களையும் கேலி
செய்தது.
2.பிளாரன்ஸின் மெடிசி குடும்பம் பற்றி குறிப்பு வரைக.
விடை:
மெடிசி
குடும்பம்:
- இத்தாலிய நகரங்களில் ஒன்றான பிளாரன்ஸில் சக்தி
வாய்ந்த வர்த்தக குடும்பம்
மெடிசி குடும்பம். - காசிமோ டி
மெடிசி என்பவர் இத்தாலி
முழுவதும் வங்கிக் கிளைகளை
நடத்தினார். - மைக்கேல் ஆஞ்சிலோ,
லியானர்டோ டாவின்சி உள்ளிட்ட
பல ஓவியக் கலைஞர்களுக்கு மெடிசி குடும்பம் ஆதரவு
அளித்தது.
3.1493ஆம் ஆண்டின் போப்பின் ஆணை பற்றி நீவிர் அறிந்ததென்ன?
விடை:
- ஸ்பெயின், போர்ச்சுகல் ஆகிய நாடுகளுக்கு இடையே
நிலவிய போட்டியை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கத்துடன் போப் ஆறாம் அலெக்சாண்டர் ஒரு ஆணையை வெளியிட்டார். - அது போப்பின்
ஆணை என்றழைக்கப்பட்டது. - அதன்படி உலகை
கிழக்கு மேற்கு என
இரண்டாகப் பிரித்து, மேற்குப்
பகுதியில் உரிமை கொண்டாட
ஸ்பெயினுக்கும், கிழக்குப்
பகுதியில் உரிமை கொண்டாட
போர்ச்சுகல் நாட்டிற்கும் அனுமதி
வழங்கப்பட்டது.
4.ஸ்பெயின் நாட்டு கப்பற்படையின் குறிப்பிடத்தகுந்த
விளைவு என்ன?
விடை:
- 1588இல் ஸ்பெயினின் அரசர் இரண்டாம் பிலிப்
ஸ்பெயின் நாட்டு கப்பல்
படையை 130 கப்பல்கள் மற்றும்
31,000 படைவீரர்களுடன் இங்கிலாந்து மீது போர் தொடுக்க
அனுப்பினார். - எனினும் ஆங்கிலேயர்கள் எளிதாக கையாளக்கூடிய தங்கள்
படைகளின் நடவடிக்கையால் ஸ்பெயின்
நாட்டுப் படையை வீழ்த்தினார்கள். - நவீன உலகில்
ஒரு வலுவான சக்தியாக
பிரிட்டிஷார் உருவெடுக்க இது காரணமாக அமைந்தது.
5.வோர்ம்ஸ் சபையின் வெளிப்பாடு என்ன என்று தெரிவிக்கவும்.
விடை:
- போப்பிற்கும், மார்டின்
லூதருக்கும் இடையேயான பேச்சு
வார்த்தை தோல்வி அடைந்தது. - மார்டின் லூதரின்
புத்தகங்கள் அனுமதி மறுக்கப்பட்டு எரிக்கப்பட்டன. - வோர்ம்ஸ் சபையால்
லூதர் சட்டத்திற்கு புறம்பானவர் என்று அறிவிக்கப்பட்டார்.
6.நட்சத்திர சேம்பர் உருவாக்கப்பட்டதன் நோக்கம் என்ன? அது ஏன் அவ்வாறு அழைக்கப்பட்டது?
விடை:
- பிரபுக்களின் சொத்துக்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க
நட்சத்திர சேம்பர் என்ற
பெயரில் நீதிமன்றத்தை ஏழாம்
ஹென்றி உருவாக்கினார். - நீதிமன்ற நடைமுறைகள் நடந்த வெஸ்ட் மினிஸ்டர்
அரண்மனையின் மேல் சுவரில்
நட்சத்திரங்கள் ஓவியமாக
தீட்டப்பட்டிருந்ததால் இந்தப்
பெயர்.
7.இடைக்காலத்தின் பிற்பகுதியில் நிலப்பிரபுத்துவ நடைமுறை ஏன் தோல்வி கண்டது?
விடை:
- இடைக்காலத்தில் ஐரோப்பாவைத் தாக்கிய கொள்ளை நோய்
பிரபுத்துவ ஆட்சியை அதன்
நடைமுறையை வலுவிழக்கச் செய்தது. - பல்லாயிரக்கணக்கான விவசாயிகள், தொழிலாளர்கள் உயிரிழந்ததை அடுத்து பிரபுக்கள் தங்கள்
வேலையாட்களை இழந்ததோடு வரிவருமானத்தையும் இழந்தனர். - சிலுவைப் போர்களின்
போது பெரும் எண்ணிக்கையில் பிரபுக்கள் உயிரிழந்தனர். - புதிய மன்னராட்சியை உறுதிப்படுத்துவதில் நிலப்பிரபுத்துவ முறையின் வீழ்ச்சி முக்கியப்
பங்காற்றியது.
8.ஸ்பெயினில் சமய விசாரணை நீதிமன்ற அமைப்பு என்ன செய்தது?
விடை:
- ஸ்பெயின் நாட்டின்
நீதிவிசாரணை அமைப்பை அரசர்
அமைத்தார். - அதன் மூலம்
மதம் மாறிய யூதர்களும் மூர்களும் தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். - சமய நம்பிக்கை
அற்றவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டு எரியூட்டப்பட்டனர்.
9.டிரென்ட் சபையின் பணி என்ன என்று எடுத்துரைக்கவும்.
விடை:
- டிரென்ட் சபை
18 ஆண்டுகளில் மூன்று முறை
சந்தித்துபைபிள் மீதான
நம்பிக்கையை வெளிப்படுத்தியது. - தேவாலய போதனைகள்
மற்றும் இரட்சிப்பை அடைவதற்கான ஏழு திருவிருட்சாதனங்கள் குறித்தும் நம்பிக்கை வெளியிட்டது. - போப்பாண்டவரின் அதிகாரத்தை உறுதி செய்வது, பாதிரிமார்களின் பிரம்மச்சர்யம் ஆகியன
நிலைநிறுத்தப்பட்டன. - அனைத்து தேவாலயங்களிலும் கிறிஸ்து மற்றும் மேரியின்
உருவ வழிபாட்டையும் சபை
ஆதரித்தது. - இந்த டிரென்ட்
சபையால் கத்தோலிக்க சமயம்
நல்ல முறையில் ஒருங்கிணைக்கப்பட்டது.
10.வரலாற்றில் ஜோன் ஆஃப் ஆர்க் மங்கையினை நினைவு கூறப்படுவது ஏன்?
விடை:
- பிரெஞ்சு அரசர்
ஏழாம் சார்லசுக்காக ஜோன்
ஆஃப் ஆர்க் என்ற
பெயருடைய ஒரு இளம்பெண்
வீரதீரமாகப் போரிட்டு ஆர்லியன்ஸ் போரை வென்றார். - எனவே ஆர்லியன்ஸின் பணிப்பெண் என்ற பட்டம்
ஜோன் ஆஃப் ஆர்க்
மங்கைக்கு வழங்கப்பட்டது. - 1920ஆம் ஆண்டு
அவருக்கு கத்தோலிக்க திருச்சபை
புனிதர் பட்டம் வழங்கியது.
III. சுருக்கமான விடையளிக்கவும்
1.மறுமலர்ச்சியின் தாயகமாக இத்தாலி விளங்கியது ஏன்?
விடை:
- லத்தீன் கிறித்தவ
உலகத்தின் இதர பகுதிகளைக் காட்டிலும் இத்தாலியில் பெருமளவுக்கு சமயச்சார்பின்மை கலாச்சாரம் நடைமுறையில் இருந்தது. - ஏதென்ஸ் நகர
மக்களின் பெரிகிளிஸ் காலத்து
படைப்புகளையும், கிரேக்க
மற்றும் ரோமானிய கலாச்சாரங்களின் கடந்த கால படைப்புகளையும் கண்டுபிடித்தனர். - சட்டம் மற்றும்
தத்துவயியல் படிப்புகளுக்காகவே முதன்மையாக இத்தாலிய பல்கலைக்கழகங்கள் தோற்றுவிக்கப்பட்டன. - கிழக்கத்திய நாடுகளுடனான வர்த்தகத்தை புத்துயிர் பெறச்
செய்ததில் கடல்வழி வணிகத்தில் ஈடுபட்ட இத்தாலிய நகரங்கள்
அதிக செல்வம் ஈட்டின.
2.மறுமலர்ச்சி காலத்தில் இங்கிலாந்தில் ஏற்பட்ட இலக்கிய சாதனைகளை குறிப்பிடவும்.
விடை:
- இங்கிலாந்தின் இலக்கியவாதிகளில் முக்கியமானோர்கள் வில்லியம்
ஷேக்ஸ்பியர், கிறிஸ்டோபர் மர்லோவ,
பிரான்சிஸ் பேக்கன் ஆகியோராவர். - ஆங்கில இலக்கியத்தின் முடிசூடா மன்னர் வில்லியம்
ஷேக்ஸ்பியர் 38 நாடகங்களையும், மனிதர்களின் பல்வேறு உணர்வுகள் குறித்த
பல கவிதைகளையும் எழுதியுள்ளார். - ஏஸ் யூ
லைக் இட், தி
டேமிங் ஆஃப் தி
ஷ்ரூ, மிட் சம்மர்
நைட்ஸ் டிரீம் போன்ற
நகைச்சுவை நாடகங்களும் ஒத்தெல்லோ,
ஹாம்லெட், கிங்லியர். ரோமியோவும் ஜூலியட்டும் போன்ற சோகமயமான்
நாடகங்களும் சில உதாரணங்களாகும். - ஆங்கில நாடக
ஆசிரியரான கிறிஸ்டோபர் மார்லோவ்,
டிடோ, தி குயீன்
ஆஃப் கார்தேஜ், டம்பர்லெய்ன் தி கிரேட் ஆகிய
முக்கிய படைப்புகளை அளித்துள்ளார். - ‘அனுபவ வாதத்தின்
தந்தை’ என்று அழைக்கக்கூடிய பிரான்சிஸ் பேக்கன் தூண்டல்
பகுத்தறிவே விஞ்ஞானத்தின் அடிப்படை
என்றார். - இவரது படைப்பான
“நோவும் ஆர்கனும்” என்ற
நூல் முக்கியப் படைப்பாக
விளங்குகிறது.
3.இத்தாலிய மற்றும் ஆங்கிலேய கடல்பயணிகளின் சாதனைகள் என்ன?
விடை:
- இத்தாலிய கடற்பயணி
ஜான் கேபட் கனடாவை
கண்டுபிடித்து ஆங்கில
காலனியாக்கினார். - ஜியோவனி டா
வெர்ராசானோ என்பவர் பிரான்ஸ்
நாட்டுக்காக கிழக்கு கனடா
மாகாணங்களை இணைத்தார். - ஆங்கிலேய கடற்பயணி
ஹென்றி ஹட்சன் வடஅமெரிக்காவிலிருந்து பசிபிக்கடல் பகுதிக்கு
பாதைகாண பாட முயன்றார்.
4.வர்த்தகப் புரட்சியின் எதிர்மறை விளைவுகள் என்ன?
விடை:
- வர்த்தகப் புரட்சியின் முக்கிய எதிர்மறை விளைவாக
அமைந்தது அடிமைத்தனம் மீண்டும்
புத்துயிர் பெற்றதே ஆகும். - ஸ்பானிய, போர்த்துகீசிய மற்றும் ஆங்கிலேயே காலனிகளில் சுரங்கம் மற்றும் தோட்ட
விவசாயம் வளர்ச்சி கண்டதையடுத்து அடிமைகளை திறமையற்ற தொழிலாளர்களாக ஆளெடுக்கும் நடவடிக்கைகள் தொடங்கின. - டிரான்ஸ் அட்லாண்டிக் அடிமை வர்த்தகம் மூலமாக
1 கோடியே 10 லட்சத்துக்கும் அதிகமான
ஆப்பிரிக்கர்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட மோசமான
கதை நவீன உலகை
உருவாக்குவதில் ஒரு
அவமானச் செயலாக பதிவுபெற்றுள்ளது.
5.ஐரோப்பாவில் எதிர்சீர்திருத்த இயக்கத்துக்கு இயேசு சபையின் பங்களிப்பு பற்றி விவாதிக்கவும்.
விடை:
- இக்னேஷியஸ் லயோலா
என்பவரால் இயேசு சபை
தோற்றுவிக்கப்பட்டது. - பாரிஸ் என்ற
இடத்தில் புதிய தேவாலய
முறைமையை 1534 ஆகஸ்டு 15இல்
ஏற்படுத்தினார். - பிரம்மச்சர்யம், வறுமை,
கீழ்ப்படிதல் ஜெருசலேமுக்கு புனிதப் பயணம் மேற்கொள்வது ஆகிய உறுதிமொழிகளைக் கடைபிடித்தனர். - இயேசு சங்கம்
தேவாலயத்துக்கு உண்மையான
சிறந்த தொண்டர்களை உருவாக்குவதில் வெற்றி பெற்றது. இச்சபையின் தொண்டர்கள் ஜெசூட்டுகள் உலகெங்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளை தொடங்கினார்.
6.1492இல் கொலம்பஸ் மேற்கொண்ட பயணம் பற்றி குறிப்பு வரைக.
விடை:
- 1492ல் கொலம்பஸ்
ஸ்பானிய ஆட்சியாளர்களின் உதவியுடன்
கடற்பயணம் மேற்கொண்டார். - இவர் 1492 ஆகஸ்ட்
3ல் பாலோஸ் துறைமுகத்திலிருந்து மூன்று கப்பல்களில் பயணித்தார். - 2 மாதங்களுக்கு பின்
இந்தியா என்று அவரால்
நம்பப்பட்ட நிலப்பகுதியை அடைந்தார். - ஆனால் அது
உண்மையில் அமெரிக்கா என்னும்
புதிய கண்டமாகும்.
7.போர்த்துகீசிய கடல்பயணி பெட்ரோ காப்ரல் இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணம் பற்றி குறிப்பிடுக.
விடை:
- வாஸ்கோடகாமா சென்ற
வழியைப் பின்பற்றி இந்தியா
வந்தடைந்தார். சாமரின்
ஒரு கோட்டை கட்டி - வர்த்தகம் செய்ய
காப்ரலை அனுமதித்தார். அரபு
வணிகர்களுடன் கருத்து
வேறுபாடு ஏற்ப டதால்
மோதல் நிகழ்ந்தது. - கொச்சினில் வர்த்தகம்
செய்ய அனுமதிக்கப்பட்டார். கண்ணனூரில் துறைமுகத்தை நிறுவினார். - இறுதியாக 1501 ஜூன்
23ல் போர்ச்சுக்கல் திரும்பினார்.
IV. விரிவான விடையளிக்கவும்
1.இத்தாலிய மறுமலர்ச்சிக்கு பிளாரன்ஸ் நகர மக்கள்
ஆற்றிய பங்களிப்பை ஆராயவும்.
விடை:
“தாந்தே, பெட்ரார்க் என்ற இரண்டு பெரும்
இத்தாலிய மொழி கவிஞர்களை
பிளாரன்ஸ் உருவாக்கியிருந்தது”.
தாந்தே:
தாந்தேயின் தெய்வீக
இன்பியல், இறை அருள்
மூலமாக மனித குலம்
இரட்சிப்பு பெறமுடியும் என்பது
அதன் கருப்பொருளாகும்.
பெட்ரார்க்:
- ‘இத்தாலிய மறுமலர்ச்சி இலக்கியத்தின் தந்தை’
என்று கருதப்படுகிறார். - கிரேக்க மற்றும்
ரோமானிய கையெழுத்துப் பிரதிகளைத்தேடி, சமயத்துறவிகள் நூலகங்களுக்குச் சென்றார். - கடிதங்களை அவர்
மறுபடியும் கண்டுபிடித்தார்.
பொக்காசியோ:
- பிளாரன்ஸ் நகரை
சேர்ந்தவரான ஜியோவனி பொக்காசியோ, பிளேக் என்ற கருங்கொள்ளை நோயிலிருந்து தப்பிக்கும் பொருட்டு, பிளாரன்ஸ் நகருக்கு
வெளியே ஒரு குடியிருப்பில், ஏழு இளம்பெண்களும் மூன்று
இளைஞர்களும் தங்கியிருந்தபோது கூறியதாக
எழுதப்பட்ட 100 கதைகளின் தொகுப்பை
டெக்கமரான் என்ற தலைப்பில்
புத்தகமாக வெளியிட்டார்.
நிக்கோலோ மாக்கியவல்லி:
- இவரின் ‘தி
பிரின்ஸ்’ என்ற படைப்பு
ஆட்சியாளர்களுக்கு அரசியல்
வழிகாட்டியாக அமைந்தது. - இந்த நூலில்
ஒரே நேரத்தில் மனிதனாக,
மிருகமாக, சிங்கமாக, நரியாக
மாறத் தெரிந்திருக்க வேண்டும்
என்று இவர் கூறுகிறார். - பக்திமானாக, உண்மையாக
மனிதநேயத்துடன் பக்தியுடனும் இருப்பது போல் தோற்றமளிப்பது பலனளிக்கும், நல்லொழுக்க குணம்
இருப்பது மிகவும் பலனளிக்கும் என்று அவர் கூறுகிறார்.
2.இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகியவை தேசிய அரசுகளாக உருவெடுத்தமை பற்றி ஒருங்கிணைந்த முறையில் ஆராயவும்.
விடை:
இங்கிலாந்து:
- அரச சிம்மாசனத்தை அடைய யார்க் மற்றும்
லன்காஸ்டர் என்ற இரண்டு
அரச குடும்பங்களுக்கு இடையே
மோதல் ஏற்பட்டது. - அவர்கள் முறையே
வெள்ளை மற்றும் சிவப்பு
ரோஜாக்கள் உடைய அடையாளக்
குறிகளை அணிந்தனர். - எனவே இது
ரோஜா பூக்கள் போர்
என அழைக்கப்பட்டது. - இந்த மோதலில்
ஹென்றி டியூடர் வெற்றி
பெற்று ஏழாம் ஹென்றி
என்று பட்டத்துடன் இங்கிலாந்தில் புதிய அரசாட்சியை அமைத்தார். - யார்க் குடும்பத்தைச் சேர்ந்த எலிசபெத்துடன் திருமண
உறவு மூலம் இங்கிலாந்து ஒரு தேசிய அரசாக
உருவெடுத்தது.
பிரான்சு:
- ஜோன் ஆப்
ஆர்க் என்ற இளம்
பெண் நூறாண்டு போரில்
அரசர் சார்லசுக்காக போரிட்டு
ஆர்லியன்ஸ் போரை வென்றார். - ஜோன் ஆப்
ஆர்க்கின் மறைவுக்குப் பிறகு
நூற்றாண்டுகள் போரைத்
தொடர்ந்த பிரெஞ்சு அரசு
ஆங்கிலேயர்களை வெற்றி
கண்டது. - ஏழாம் சார்லஸின்
மகன் 11 ஆம் லூயி
பர்கண்டி பகுதிக்கு திரும்பினார். - 1483 ஆம் ஆண்டு
இப்பகுதி பிரான்சின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. - பிரான்சு ஒரு
வலுவான மத்திய மன்ட்சி
நடைபெறும் அரசாக உருவெடுத்தது. - பதினோறாம் லூயி
பிரான்சை வலுப்படுத்தி ஒன்றுபடுத்தினார்.
ஸ்பெயின்:
- அராபிய அரசர்களின் வழிதோன்றல்களாகிய முஸ்லீம்
மன்னர்கள் மூர்களின் கட்டுப்பாட்டில் ஸ்பெயினின் பெரும்பாலான பகுதிகள்
இருந்தன. - அராகன் மற்றும்
காஸ்டைல் முக்கிய அரசுகள். - அராகன் அரசர்
பெர்டினாண்ட், காஸ்டைல்
இளவரசியை மணம் முடித்து
மூர்களை விரட்டவும், ஸ்பெயினை
இணைக்கவும் கடினமாக உழைத்தனர். - 1479ல் அரசரும்
அரசியும் அதிகாரத்தைக் கைபற்றி,
மன்னர் சபையில் இருந்த
பிரபுகளை நீக்கியதன் மூலம்
அரசர்களைக் கட்டுபாட்டிற்குள் கொண்டு
வந்தார். - ஸ்பெயின் தனி
நாடாக உருவெடுத்தது.
3.கிழக்குப் பகுதிக்கு புதிய கடல் வழித்தடங்களை கண்டுபிடிப்பதில் போர்த்துகல் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளின் முன்முயற்சிகளை விவரிக்கவும். நவீன உலகின் பொருளாதார வரலாற்றில் ஏன் இது மிக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது?
விடை:
போர்ச்சுக்கல்:
- கடலாய்வின் முதலாவது
தொடர் பயணங்களை போர்ச்சுக்கல் மேற்கொண்டது. - போர்ச்சுக்கல் அரசர்
ஹென்றியின் முயற்சியால் மெடீரா
மற்றும் அசோர் தீவுகள்
கண்டுபிடிக்கப்பட்டன. - இவரது மாலுமிகள்
எவர்டி தீவுகள் முனையைக்
கண்டறிந்தனர். - பார்தோலோமியோ டயஸ்
என்பவர் ஆப்பிரிக்காவின் தென்முனை
வரை சென்றார். இது
கிழக்கு நோக்கி பயணிக்கலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியதால் “நன்னம்பிக்கை முனை”
என்று அழைக்கப்பட்டது. - 1498 ஆம் ஆண்டு
வாஸ்கோடகாமா இதன் வழியே
பயணித்து இந்தியாவை வந்தடைந்தார். வாஸ்கோடகாமாவின் இந்தியாவிற்கான புதிய கடல் வழி
கண்டுபிடிப்பு ஐரோப்பிய
மற்றும் ஆசிய வரலாற்றில் முக்கிய திருப்பு முனையாக
அமைந்தது. - பெட்ரோ காப்ரல்
பிரேசிலை கண்டுபிடித்து போர்ச்சுக்கல் காலனியாக்கினார். பின்னர்
இந்தியாவில் கொச்சினில் வர்த்தகம்
செய்து கண்ணனூரில் துறைமுகத்தையும் நிறுவினார்.
ஸ்பெயின்:
- கிறிஸ்டோபர் கொலம்பஸ்
ஸ்பெயினின் ஆதரவுடன் பயணித்து
இந்தியா என்று நம்பி
அமெரிக்காவை கண்டு பிடித்தார். - ஸ்பெயினின் ஹெர்னன்
கார்ட்ஸ் என்பவர் ஸ்பெயினுக்காக மெக்சிகோவை கைப்பற்றினார். - இவரே தென்
அமெரிக்காவில் இன்கா
அரசை வீழ்த்தி பெரு
நாட்டை கைப்பற்றினார்.
முக்கியத்துவம்:
- கடல் வழித்தடங்களை கண்டுபிடித்து காலனிகள்
தோற்றுவித்த போர்ச்சுக்கல் மற்றும்
ஸ்பெயின் ஆகிய நாடுகளின்
முன் முயற்சிகள் மற்ற
ஐரோப்பிய நாடுகளுக்கும் தூண்டு
கோளாயிற்று. - ஐரோப்பிய கடல்
கடந்த வாணிபம் பெரிதும்
தழைக்கத் தொடங்கியது. குடியேற்ற
ஆதிக்கமும் பேரரசு ஆதிக்கமும் தோன்றின.
4.பிராட்டஸ்டன்ட் சீர்திருத்த இயக்கத்துக்கான காரணங்கள் யாவை? ஜெர்மனியில் மார்ட்டின் லூதர் இந்த இயக்கத்தை எவ்வாறு ஒருங்கிணைத்தார்?
விடை:
- தேவாலயத்தின் எதேச்சதிகாரத்துக்கு எதிராக கிளர்ச்சி
ஏற்படுத்தியவர்கள் பிராட்டஸ்டன்ட் என்றழைக்கப்பட்டனர். - ரோமன் கத்தோலிக்க கிறித்துவர்கள் தேவாலயங்கள் தங்களுக்கும் கடவுளுக்கும் இடையே ஓர் ஊடகமாக
செயல்படுவதை ஏற்றார்கள். - ஆனால் தேவாலயங்களின் அதிகாரங்கள் பன்மடங்கு பெருகியதை
மன்னர்களும் மக்களும் எதிர்க்க
ஆதரித்தனர். - பாவமன்னிப்பு வழங்க
பணம் பெற்றது, வேண்டியவர்களுக்கு வேலை வழங்குவது,
தேவாலய - பணிகளை பணத்துக்கு விற்பது போன்றவை பிராட்டஸ்டன்ட் வளர காரணமாயிற்று.
மார்டின் லூதரும் பிராட்டஸ்டன்ட் இயக்கமும்:
- கிறிஸ்துவப் பாதிரியாரான மார்ட்டின் லூதர் ரோமுக்கு
சென்ற போது தேவாலயத்தின் ஊழல் மற்றும் ஆடம்பரம்
குறித்து வருந்தினார். - ரோமானிய தேவாலயத்துக்கு எதிராக 95 குறிப்புகள் என்ற
தலைப்பில் 95 புகார்களை எழுதி
ஜெர்மனி விட்டன்பர்க்கில் உள்ள
தேவாலயத்தின் கதவில்
ஆணி அடித்து தொங்கவிட்டார். - கடவுளின் மீது
இருக்கும் ஒருவரது நம்பிக்கை
மூலம்தான் இரட்சிப்பை அடைய
முடியும் என்று கூறினார். - மார்டின் லூதரின்
முற்போக்கான கருத்துக்கள் பலரை
ஈர்த்தன. - லூதர் பைபிளை
ஜெர்மானிய மொழியில் மொழிபெயர்த்தார். - லூதரன் பிராட்டஸ்டன்ட்கள் சில விதிகளையும் நெறிமுறைகளையும் வகுத்தனர்.
- இதன் மூலம்
பிராட்டஸ்டன்ட் இயக்கத்தை
மார்டின் லூதர் ஒருங்கிணைத்தார்.
V. செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)
1. பகுத்தறிவின் காலம்
பற்றிய பொருள் மற்றும்
முக்கியத்துவம் பற்றி
ஆசிரியர்கள் மாணவர்களுடன் விவாதிக்க
வேண்டும்.
2. உலக புறஎல்லை
வரைபடத்தில் கொலம்பஸ், வாஸ்கோடகாமா, மெகல்லன் ஆகியோர் சென்ற
கடல்வழித்தடங்களைக் குறிக்கவும்.
3. மறுமலர்ச்சி தொடர்பான
வீடியோ பதிவுகளை மாணவர்கள்
இணையத்தில் காணலாம்.
4. வட மற்றும்
தென் அமெரிக்காவின் பூர்வகுடிகள் மீது ஐரோப்பியர்கள் நடத்திய
இனப்படுகொலை குறித்த திரைப்படங்கள்/வீடியோ பதிவுகளை மாணவர்கள்
காணலாம்.