12th History – Lesson 11 – புரட்சிகளின் காலம் – Tamil
Medium
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
1.வட அமெரிக்காவில் முதன் முதலில் குடியேறிய ஐரோப்பியர்கள்
அ)
போர்த்துகீசியர்
ஆ)
ஸ்பானியர்
இ)
டேனியர்
ஈ)
ஆங்கிலேயர்
விடை: ஈ) ஆங்கிலேயர்
2.நியூ ஆம்ஸ்ட ர்டாமிற்கு ___________ என
மறுபெயர் சூட்டப்பட்டது.
அ)
வாஷிங்டன்
ஆ)
நியூயார்க்
இ)
சிக்காகோ
ஈ)
ஆம்ஸ்ட ர்டாம்
விடை: ஆ) நியூயார்க்
3.கூற்று: ஆங்கிலேயர் நாவாய்ச் சட்டங்களை இயற்றினர்
காரணம்:
காலனி நாடுகளின் உற்பத்திப் பொருட்கள் ஆங்கிலேயக் கப்பல்களின் மூலமாக மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட வேண்டுமென்பதைச் இச்சட்டம் கட்டாயப்படுத்தியது.
அ)
கூற்று, காரணம் இரண்டும்
சரி. காரணம் கூற்றை
விளக்குகிறது.
ஆ)
கூற்று, காரணம் இரண்டும்
சரி. ஆனால் காரணம்
கூற்றை விளக்கவில்லை
இ)
கூற்று சரி. காரணம்
தவறு
ஈ)
கூற்று தவறு. காரணம்
சரி.
விடை: அ) கூற்று,
காரணம் இரண்டும் சரி.
காரணம் கூற்றை விளக்குகிறது.
4.கூற்று: 1770இல் இங்கிலாந்து தேயிலையைத் தவிர ஏனைய பொருட்களின் மீதான வரிகளை ரத்து செய்தது.
காரணம்:
காலனி நாடுகளின் மீது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வரிவிதிக்கும் உரிமை ஆங்கிலேய பாராளுமன்றத்திற்கு
உண்டு என்பதை உறுதிப்படுத்தவே தேயிலையின் மீதான வரி தக்கவைத்துக்கொள்ளப்பட்டது.
அ)
கூற்று, காரணம் இரண்டும்
சரி. காரணம் கூற்றை
விளக்குகிறது.
ஆ)
கூற்று, காரணம் இரண்டும்
சரி. ஆனால் காரணம்
கூற்றை விளக்கவில்லை .
இ)
கூற்று சரி. காரணம்
தவறு.
ஈ)
கூற்று தவறு. காரணம்
சரி.
விடை: அ) கூற்று,
காரணம் இரண்டும் சரி.
காரணம் கூற்றை விளக்குகிறது.
5.பாஸ்டன் தேநீர் விருந்து நிகழ்வு ……… இல் நடைபெற்றது.
அ)
1775
ஆ)
1773
இ)
1784
ஈ)
1799
விடை: ஆ) 1773
6.கூற்று: ஜார்ஜியா தவிர ஏனைய காலனிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பொறுத்து கொள்ள முடியாதச் சட்டங்கள் நீக்கப்பட வேண்டுமெனக் கோரினர்.
காரணம்:
அதுவரையிலும் ஆங்கிலப் பொருட்களைப் புறக்கணிப்பது என காங்கிரஸ் முடிவு செய்தது.
அ)
கூற்று, காரணம் இரண்டும்
சரி. காரணம் கூற்றை
விளக்குகிறது.
ஆ)கூற்று,
காரணம் இரண்டும் சரி.
ஆனால் காரணம் கூற்றை
விளக்கவில்லை
இ)
கூற்று சரி. காரணம்
தவறு.
ஈ)
கூற்று தவறு. காரணம்
சரி.
விடை: அ) கூற்று,
காரணம் இரண்டும் சரி.
காரணம் கூற்றை விளக்குகிறது.
7.கீழ்க்காணும் கூற்றுகளில் எது / எவைசரியானது / சரியானவை.
கூற்று
I: 1776 ஜூலை 4இல் பதின்மூன்று காலனிகளும் இங்கிலாந்திடமிருந்து
விடுதலை பெற்றதாக அறிவித்தன.
கூற்று
II: சுதந்திரப் பிரகடனத்தைத் தயாரித்ததில் தாமஸ் ஜெபர்சன் மிக முக்கியப் பங்கினை வகித்தார்.
அ)
I
ஆ)
II
இ)
இரண்டும் தவறு
ஈ)
இரண்டும் சரி
விடை: ஈ) இரண்டும்
சரி
8.அமெரிக்க சுதந்திரப் போரில் ஆங்கில படைகளுக்குத் தலைமை தாங்கியவர்
அ)
ரிச்சட்டு லீ
ஆ)
ஜார்ஜ் வாஷிங்டன்
இ)
வில்லியம் ஹோவே
ஈ)
ராக்கிங்காம்
விடை: இ) வில்லியம்
ஹோவே
9.கீழ்க்காணும் கூற்றுகளில் எது / எவைசரியானது / சரியானவை?
கூற்று I: பிரெஞ்சு
சமூகத்தின் பெரும்பகுதி விவசாயிகளால் ஆனது.
கூற்று II: பிரெஞ்சு
விவசாயிகள் பண்ணை அடிமைகளாய் இருந்தனர்.
கூற்று III: வாரத்தில்
சில நாட்களில் விவசாயிகள் தங்கள் பிரபுக்களுக்காகச் சம்பளம்
பெற்றுக் கொண்டு வேலை
செய்தாக வேண்டும்.
அ)
I மற்றும் II
ஆ)
II மற்றும் III
இ)
1 மற்றும் III
ஈ)
அனைத்தும் சரி
விடை: ஈ) அனைத்தும்
சரி
10.டென்னிஸ் மைதான உறுதிமொழிக்கு இட்டுச் சென்ற எதிப்புக்குத் தலைமையேற்ற பிரபு _____ ஆவார்.
அ)
மாரட்
ஆ)
டாண்டன்
இ)
லஃபாய்ட்
ஈ)
மிராபு
விடை: ஈ) மிராபு
11.கூற்று: வளர்ந்து கொண்டிருந்த பூர்ஷ்வாக்கள் தங்கள் சமூகத் தகுதிக்கு நிகரான அரசியல் அதிகாரம் வேண்டினர்.
காரணம்:
அரசாங்கத்தில் செல்வாக்குப் பெற வேண்டுமென அவர்கள் விரும்பினர்.
அ)
கூற்று, காரணம் இரண்டும்
சரி. காரணம் கூற்றை
விளக்குகிறது.
ஆ)
கூற்று, காரணம் இரண்டும்
சரி. ஆனால் காரணம்
கூற்றை விளக்கவில்லை
இ)
கூற்று சரி. காரணம்
தவறு.
ஈ)
கூற்று தவறு. காரணம்
சரி.
விடை: ஆ) கூற்று,
காரணம் இரண்டும் சரி.
ஆனால் காரணம் கூற்றை
விளக்கவில்லை.
12.கீழே கொடுக்கப்பட்டுள்ள
குறிப்புகளைப் பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
அ.மாண்டெஸ்கியூ – 1.ஜேகோபியர்கள்
ஆ.வால்டர்
– 2.ஆங்கிலேய நாட்டுத் தத்துவவாதி
இ.பயங்கர
ஆட்சி
– 3.பதினான்காம் லூயியின் காலம்
ஈ ஜான்
லாக் – 4.சட்டங்களின் சாரம்
அ)
1 3 4 2
ஆ)
4 3 1 2
இ)
4 1 2 3
ஈ)
1 4 3 2
விடை: ஆ) 4 312
13.பாஸ்டில் சிறை தகர்ப்பு __________ இல் நடந்தது.
அ)
1789, ஜூன் 5
ஆ)
1789, ஜூலை 14
இ)
1789, நவம்பர் 11
ஈ)
1789, மே1
விடை: ஆ) 1789, ஜூலை
14
14.பிரெஞ்சுப் புரட்சியின் போது அறிவிக்கப்பட்ட மனிதன் மற்றும் குடிமக்கள் உரிமைகள் பிரகடனம் பெண்களைத் தவிர்த்துவிட்டதால் அதன் மேல் _________ அதிருப்தி கொண்டிருந்தார்.
அ)
ஒலிம்பே டி கோஜெஸ்
ஆ)
மேரி அன்டாய்னெட்
இ)
ரோஜெட் டி லிஸ்லி
ஈ)
ரோபஸ்பியர்
விடை: அ) ஒலிம்பேடி
கோஜெஸ்
15.பதினாறாம் லூயியின் அதிகாரபூர்வமான வசிப்பிடமாக இருந்தது.
அ)
வெர்செய்ல்ஸ்
ஆ)
தௌலன்
இ)
மார்செய்ல்ஸ்
ஈ)
டியூ லெர்ஸ்
விடை: ஈ) டியூ
லெர்ஸ்
16.____________தொடக்கத்தில் செயின்ட் டோமிங்கோ என அறியப்பட்டது.
அ)
மெக்சிகோ
ஆ)
பனாமா
இ)
ஹைட்டி
ஈ)
ஹவானா
விடை: இ) ஹைட்டி
17.மெக்சிகோவில் புரட்சிக்குத் தலைமையேற்றவர் ____________
அ)
சைமன் பொலிவர்
ஆ)
ஜோஸ்மரியாமோர்லோ
இ)
பெர்டினான்டு டி
லெஸ்ஸெப்ஸ்
ஈ)
மிகுவல் ஹிடல்கோ
விடை: ஈ) மிகுவல்
ஹிடல்கோ
18.அர்ஜென்டினாவை விடுதலையடையச் செய்தவர் ____________
அ)
சான் மார்ட்டின்
ஆ)
டாம் பெட்ரோ
இ)
பெர்னார்டோ ஓ ஹிக்கின்ஸ்
ஈ)
மரினாமோர்லஸ்
விடை: அ) சான்
மார்ட்டின்
19.நகரம் ‘காட்டன் பொலிஸ்’ எனும் புனைப் பெயரைப் பெற்றது.
அ)
மான்செஸ்டர்
ஆ)
லங்காசயர்
இ)
பெர்டினான்டு டி
லெஸ்ஸெப்ஸ்
ஈ)
கிளாஸ்கோ
விடை: அ) மான்செஸ்டர்
20.கீழேகொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைப் பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
அ.மைக்கேல்
பாரடே – 1.ஆர்க்ரைட்
ஆ.எலியாஸ்ஹோவே – 2.ராபர்ட் புல்டன்
இ.நீர்ச்
சட்டகம் – 3.மின்சாரம்
ஈ.நீராவிப்
படகு – 4.தையல் இயந்திரம்
அ.1
3 4 2
ஆ.1
4 2 3
இ.3
4 1 2
ஈ.3
4 2 1
விடை: இ) 3 4 1 2
II. குறுகிய விடையளிக்கவும்
1.வடஅமெரிக்காவின் ஐரோப்பியக் காலனிகள் பூர்வகுடி மக்கள் மீது எத்தகைய தாக்கத்தினை ஏற்படுத்தின?
விடை:
- பூர்வகுடிகளை அழித்தொழிக்க ஐரோப்பியர்கள் பின்பற்றிய தந்திரங்களில் ஒன்று
நோய்களைப் பரப்புவதாகும். - அம்மை நோயால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு சொந்தமான
போர்வைகளை செவ்விந்திய பூர்வகுடிகளிடையே விநியோகம் செய்யப்பட்டன. - காலனியவாதிகள் தங்கம்
தேடும் முயற்சியில் பழங்குடி
மக்களின் கிராமங்களில் தங்கியிருந்து கொடூரமாகத் தாக்கினர். - இது குடியேற்றவாதிகளுக்கும் அமெரிக்க பூர்வகுடிகளுக்குமிடையே பல போர்கள்,
உயிர்ச்சேதம், சொத்துப்பறிப்பு மற்றும் அடக்குமுறை வாயிலாக
அப்பட்டமான இனவாதத்திற்கு இட்டுச்
சென்றது.
2.பாஸ்டன் தேநீர் விருந்து குறித்து நீங்கள் அறிந்ததென்ன?
விடை:
- பாஸ்டன் படுகொலையைத் தொடர்ந்து 100 கிளர்ச்சியாளர்கள், பூர்வகுடி
செவ்விந்தியர்களைப் போல
வேடமிட்டனர். - இவர்கள் பாஸ்டன்
துறைமுகத்தில் தேயிலையைக் கொண்டு வந்திருந்த மூன்று
கப்பல்களில் ஏறி 342 பெட்டிகளைக் கடலுக்குள் எறிந்தனர். - இந்நிகழ்வு பாஸ்டன்
தேநீர் விருந்து என
அழைக்கப்பட்டது.
3.அமெரிக்க விடுதலைப் போருக்குத் தாமஸ் பெயினின் அறிவுத்திறன் சார்ந்த பங்களிப்பு என்ன?
விடை:
தாமஸ்
பெயின் தனது ‘பொது
அறிவு’ என்ற பிரசுரத்தில் குடியேற்ற நாடுகளின் கோரிக்கைகளை நியாயப்படுத்தி விவாதங்களை எழுதியிருந்தார்.
சுதந்திரம் குறித்து
ஹாப்ஸ், லாக், வால்டேர்,
ரூசோ ஆகியோர் கூறிய
கருத்துக்களை சாதாரண
மக்களும் புரிந்து கொள்ளும்
விதத்தில் எழுதியிருந்தார்.
இவரது
இச்சிறு பிரசுரம், அமெரிக்க
மக்களின் மீது கிளர்ச்சியூட்டும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
4.சரடோகா போரின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுக.
விடை:
- அமெரிக்க சுதந்திர
போரில் ஆங்கில படைக்கு
தலைமை தாங்கியவர் வில்லியம்
ஹோவே. - அமெரிக்க படைகளுக்கு ஜார்ஜ் வாஷிங்டன் தலைமையேற்றார்.
- வாஷிங்டன் தனது
திட்டமிட்ட போர்த் தந்திரங்களின் வாயிலாக ஆங்கிலப் படைகளைத்
தோற்கடித்தார். - 1777இல் சரடோகா
போர் முனையில் ஆங்கிலப்
படைத்தளபதி ஜெனரல் புர்கோய்ன் சரணடைந்தார். - 1781இல் இறுதியாக
யார்க் டவுன் என்ற
இடத்தில் இங்கிலாந்துப் படைகள் - அமெரிக்க படைகளிடம்
சரணடைந்தன. அமெரிக்க குடியேற்றங்கள் இதன் பிறகு விடுதலை
அடைந்தன.
5.பண்டைய ஆட்சி முறையின் மூன்று எஸ்டேட்டுகளை விவாதிக்கவும்.
விடை:
- மதகுருமார்கள்
- நிலபிரபுக்கள்
- சாதாரண மக்கள்
என்ற மூன்று எஸ்டேட்டுகள் பண்டைய ஆட்சிமுறையில் இருந்தன. - சாதாரண மக்கள்
கடும் வரி விதிப்பின் கொடுமைகளை எதிர் கொண்டனர். - மதகுருமார்களும் பிரபுக்களும் இவ்வரி விதிப்பிலிருந்து வரி
விலக்கு பெற்றனர்.
6.மனிதன் மற்றும் குடிமக்களின் உரிமைப் பிரகடனத்தின் சாராம்சத்தை அடிக்கோடிட்டுக் காட்டவும்.
விடை:
- தனி மனித
உரிமைகளையும் கூட்டு
உரிமைகளையும் வரையறை
செய்தது. - மக்கள் ஓய்வின்றி
வரிகளை உயர்த்தக் கூடாதெனவும் குறிப்பிட்டது. - அனைத்து மனிதர்களும் பிறப்பில் சுதந்திரமாகவும் உரிமைகளில் சமமாகவும் உள்ளனர் என்று
கூறுகிறது.
7.இலத்தீன் அமெரிக்க விடுதலைக்கு சைமன் பொலிவரின் பங்களிப்பை சுருக்கமாய் வரைக.
விடை:
- சைமன் பொலிவர்
ஒரு சக்தி வாய்ந்த
ராணுவ, அரசியல் சக்தியாக
உருவானார். - கிழக்கு ஆண்டிஷ்
மலைப்பகுதி வரை தன்
படைகளை நடத்தி சென்று
வெற்றி பெற்றனர். - போயகா போர்
களத்தில் தன் பகைவர்களைத் தோற்கடித்தார்.
8.தொழிற்புரட்சியின் சிறப்புக்கூறுகளை முன்னிலைப்படுத்திக்காட்டவும்.
விடை:
- தொழிற்புரட்சியின் இன்றியமையாத கூறு, அறிவியல் தொழிலில்
புகுத்தப்பட்டதுதான். - இரும்பு, எஃகு,
நிலக்கரி மற்றும் நீராவியின் ஆற்றல்கள் பயன்படுத்தப்பட்டது. - புதிய இயந்திரங்களின் கண்டுபிடிப்பு, சிறப்பு
தொழில்முறைகள் பின்பற்றப்பட்டன. - போக்குவரத்திலும் செய்தித்
தொடர்புகளிலும் ஏற்பட்ட
முன்னேற்றங்கள் ஆகியவை
தொழிற்புரட்சியின் சிறப்புக்கூறுகள் ஆகும்.
9.சாமுவெல் சிலேட்டர் ஏன் அமெரிக்கத் தொழிற்புரட்சியின் தந்தையெனக் கருதப்படுகிறார்?
விடை:
- ஆலையை இயக்குவதில் அனுபவம் பெற்றிருந்த ஆங்கிலக்
குடிமகன் சாமுவெல் சிலேட்டர். - ரோட் ஐலெண்டைச்
சேர்ந்த தொழில் அதிபர்
மோசஸ் பிரவுன் ஒரு
ஆலையை இயக்க முடியாமல்
இருந்தார். - சிலேட்டரும், மோசஸ்
பிரவுனும் இணைந்து செயல்பட்டு அந்த ஆலையை 1793ல்
செயல்படுத்தினர். - அதுவே அமெரிக்காவின் நீர் உருளையால் இயக்கப்பட்ட முதல் ஜவுளி ஆலையாகும்.
- 1800இல் தொழில்
முனைவோர் பலர் சிலேட்டரின் ஆலையைப் போன்றே பல
ஆலைகளை உருவாக்கினர். - அமெரிக்க குடியரசுத் தலைவரான ஆண்ட்ரூ ஜேக்சன்,
சிலேட்டரை “அமெரிக்கத் தொழிற்புரட்சியின் தந்தை” எனப்
போற்றினார்.
10.பீட்டர்லூ படுகொலையின் பின்னணி யாது?
விடை:
- 1819ஆம் ஆண்டு
தொழிலில் மந்தநிலையும் உணவுப்பொருட்களின் விலையேற்றமும் ஏற்பட்டது. - அதிருப்தியுற்ற மக்கள்
ஹென்றி ஹன்ட் எனும்
தீவிரவாதத் தலைவரின் தலைமையில்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். - கூட்டத்தின் எண்ணிக்கையையும் அவர்களின் மனநிலையையும் கண்டு
பீதியடைந்த அதிகாரிகள் மான்செஸ்டர் யோமனரி எனும் தன்னார்வ
குதிரைப்படை காவலர்களைக் கொண்டு
தாக்க உத்தரவிட்டனர். - இதில் 17 பேர்
கொல்லப்பட்டனர், 700 பேர்
படுகாயம் மற்றும் பலர்
கைது செய்யப்பட்டு மரண
தண்டணை விதிக்கப்பட்டனர். - இது பீட்டர்லூ
படுகொலை எனப்படுகிறது.
III. சுருக்கமான விடையளிக்கவும்
1.1783இல் கையெழுத்திடப்பட்ட
பாரிஸ் உடன்படிக்கையின் முக்கியச் சரத்துக்களை விவாதிக்கவும்.
விடை:
- 13 குடியேற்ற நாடுகளின்
சுதந்திரத்தையும் அமெரிக்க
ஐக்கிய நாடுகள் எனும்
பெயரில் ஒரு புதிய
நாடு உருவானதையும் இங்கிலாந்து அங்கீகரித்தது. - மேற்கே மிசிசிபி
ஆற்றை எல்லையாகவும் தெற்கே
31வது இணைகோட்டை எல்லையாகவும் கொண்ட பகுதிகள் அமெரிக்க
ஐக்கிய நாடுகளுக்குச் சொந்தமாயின. - மேற்கத்திய தீவுகள்,
இந்தியா, ஆப்பிரிக்கா ஆகியவற்றில் இங்கிலாந்திற்குச் சொந்தமாயிருந்த சில பகுதிகள் பிரான்ஸ்
பெற்றது. - ஸ்பெயின் இங்கிலாந்திடமிருந்து புளோரிடாவைப் பெற்றது.
- ஹாலந்தும் இங்கிலாந்தும் போருக்கு முன்பு நிலவிய
நிலையை அப்படியே பேசின.
2.அமெரிக்க புரட்சியின் முக்கியத்துவத்தை பகுப்பாய்வு செய்க.
விடை:
- அமெரிக்க புரட்சி
உலக வரலாற்றில் பல
அணுகுமுறைகளை ஏற்படுத்தியது. - மக்களாட்சி, குடியரசு
போன்ற கோட்பாடுகள் மேலும்
விரிவாகப் பரவலாயின. - அரசியல், சமூக
மாற்றங்கள் ஜனநாயகத்தையும் சமத்துவத்தையும் அடிப்படையாக கொண்டிருந்தன. - குடியேறியவர்கள் அனைவருக்கும் அமெரிக்கஜக்கிய நாடுகள்
சுதந்திரத்தையும் வாய்ப்புகளையும் வழங்கும் நாடானது. - கல்வியின் முக்கியத்துவம் சிறப்பிடத்தைப் பெற்றது.
- கூட்டாட்சிக் கோட்பாடு
பரவலானது. - அமெரிக்க புரட்சி
காலனியாதிக்கத்திற்கு ஒரு
பின்னடைவாகும். தங்கள்
காலனிய எஜமானர்களுக்கு எதிராக
குடியேற்ற நாடுகளின் விடுதலைக்கான கோரிக்கை உலகின் பல்வேறு
பகுதிகளில் பரவியது. - ஒவ்வொரு தனி
மனிதருக்கும் பேச்சு
சுதந்திரம், மத சுதந்திரம் மற்றும் சமவாய்ப்பு ஆகியன
வழங்கப்பட்ட சுதந்திர சமுதாயம்
உருவாவதற்கு இப்புரட்சி வழிகோலியது.
3.“1789ஆம் ஆண்டு புரட்சிக்கு நீண்ட காலத்திற்கு முன்னதாகவே கருத்துக்களின் களத்தில் ஒரு புரட்சி நடந்தது” விளக்குக.
விடை:
- 1789 புரட்சிக்கு மிக
முன்னதாகவே கருத்துக்களத்தில் புரட்சி
நடைபெற்று விட்டது. - பிரெஞ்சுப் புரட்சி
வெடிப்பதற்காக சமூகத்தை
தயார் செய்ததில் வால்டேர்,
ரூசோ ஆகியோரின் எழுத்துக்கள் புரட்சிக்கு ஒரு தூண்டுகோலாக அமைந்தன. - ‘சட்டங்களின் சாரம்
எனும் தனது நூலில்
மாண்டெஸ்கியூ அதிகாரங்கள் அனைத்தும் ஓரிடத்தில் குவிக்கப்படுவதை எதிர்த்தார். - அதிகாரங்கள் சட்டமியற்றுதல், சட்டங்களை செயல்படுத்துதல், நீதித்துறை என பிரிக்கப்பட வேண்டுமெனக் கூறினார்.
- வால்டேர் “பதினான்காம் லூயியின் காலம்” என்ற
தனது நூலில் பிரெஞ்சுக்காரர்களின் மதம் சார்ந்த
மூடநம்பிக்கைகளை எதிர்த்ததோடு முடியாட்சி மன்னர்களின் கீழ்
நடைபெற்ற பிரெஞ்சு நிர்வாகத்தையும் விமர்சித்தார். - ரூஸோ தான்
எழுதிய சமூக ஒப்பந்தம்’
எனும் நூலில், ஆள்வோர்க்கும் ஆளப்படுவோருக்குமான உறவு
ஓர் ஒப்பந்தத்தால் கட்டுப்படுத்தப்பட வேண்டுமென வாதிட்டார். - ஆங்கிலத் தத்துவ
ஞானியான ஜான் லாக்
“அரசாங்கத்தின் இரு
ஆய்வுக்கட்டுரைகள்” எனும்
நூலில் தெய்வீக உரிமைக்
கோட்பாட்டையும் வரம்பற்ற
முடியாட்சியையும் எதிர்த்தார். - தீதரோ என்பவரும்
மற்றவர்களும் வெளியிட்ட
கலைக் களஞ்சியத்தில் இது
போன்ற கருத்துக்களும் இடம்
பெற்றிருந்தன.
4.செப்டம்பர் படுகொலைகள்” எதனால் ஏற்பட்டது?
விடை:
- முடியாட்சி தூக்கி
எறியப்பட்ட பின்னர் சிறையில்
அடைக்கப்பட்டிருந்த அரசியல்
கைதிகள் * எதிர்புரட்சியாளர் சதியில்
இணையப் போவதாக மக்கள்
நம்பினர். - இதன் விளைவாக
மக்கள் கூட்டம் சிறைச்சாலைகளைத் தாக்கின. - அரச குடும்ப
ஆதரவாளர்கள் எனக் கருதப்பட்ட அனைவரும் கொல்லப்பட்டனர். - 1792 செப்டம்பர் 2இல்
பாரிஸ் நகரில் அபே
சிறையில் தொடங்கிய இப்படுகொலை நகரின் ஏனைய சிறைகளிலும் நான்கு நாட்களுக்கு தொடர்ந்து
வந்த இது செப்டம்பர் படுகொலைகள் எனப்படுகிறது. - இந்நிகழ்வில் மொத்தம்
1,200 கைதிகள் கொல்லப்பட்டனர்.
5.தென் அமெரிக்காவில் முதன்முதலாகப் பிரேசிலில் அரசியலமைப்பு சார்ந்த முடியாட்சி அரசு அமைந்ததற்கான சூழ்நிலைகளை எடுத்துரைக்கவும்.
விடை:
- 1808இல் நெப்போலியன் படையெடுப்பின் போது
போர்ச்சுக்கல் அரசர்
டாம் ஜோவோ பிரேசிலுக்குத் தப்பினார். - ஆனால் அவரது
அதிகாரத்திற்கு சவால்கள்
தோன்றியது. - எனவே பிரேசிலை
தனது மகன் டாம்
பெட்ரோவிடம் ஒப்படைத்து விட்டு
செல்ல முடிவெடுத்தார். - 1822இல் பிரேசில்
போர்ச்சுகளிடமிருந்து விடுதலைப்
பெற்று அரசியல் அமைப்பு
கொண்ட முடியரசானது.
6.தொழிற்புரட்சியின் இரண்டாம் கட்டத்தில் ஜெர்மனியில் நடந்தது என்ன?
விடை:
- ஜெர்மனியில் பிரஷ்யாவின் தலைமையில் செயல்பட்ட நாடுகள்
செய்தொழில்களிலும், உற்பத்தியிலும் இங்கிலாந்தின் தொழில்
நுட்பத்தைப் பயன்படுத்தின. - 1871இல் ஜெர்மனி
இணைக்கப்பட்டது வேகமான
தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டது. - மின்சாரத்தின் கண்டுபிடிப்பும், ருடால்ப் டீசலின் டீசல்
என்ஜின் கண்டுபிடிப்பும் சேர்ந்து
ஜெர்மனியை ஐரோப்பியாவில் மோட்டார்
வாகன உற்பத்தியின் தலைமை
வகிக்கும் நாடாக மாற்றியது. - ஜெர்மனி இரும்பு
எஃகுத் தொழிலிலும் தனது
முத்திரையைப் பதித்தது. - 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஜெர்மனி, மிகப்
பெருமளவில் தொழில்மயமான நாடாக
உருவானது. - தொழிற்புரட்சியின் தாயகமான
இங்கிலாந்தை மிஞ்சி அமெரிக்காவின் போட்டியாளராகத் தன்னை
நிலை நாட்டியது.
IV. விரிவான விடையளிக்கவும்
1.அமெரிக்க விடுதலைப் போருக்கான காரணங்கள், அதன் போக்கு, விளைவுகள் குறித்து விவாதிக்கவும்.
விடை:
அமெரிக்க விடுதலைப் போருக்கான காரணங்கள்:
- காலனிகளைத் தனது
நாட்டின் பகுதிகளாகவே கருதிய
இங்கிலாந்து, காலனி மக்களின்
நலன்களைப் புறக்கணித்துத் தனது
நலன்களுக்காகவே ஆட்சி
செய்தது. - 1764ல் சர்க்கரை
மற்றும் சர்க்கரைபாகுவிற்கு வரி
விதித்தது. வட அமெரிக்காவில் உள்ள அனைத்து காலனிகளையும் இவ்வரியைச் செலுத்த கட்டாயப்படுத்தப்பட்டன. - குடியேற்ற நாடுகள்
“பிரதிநிதித்துவம் இல்லையேல்
வரியுமில்லை ” எனும் முழக்கத்தை எழுப்பியது. - நாவாய்ச் சட்டங்கள்
குடியேற்ற நாடுகளின் வணிகர்கள்
தங்களது சுதந்திரத்தை பறிப்பதாக
எண்ணினர். - 1765ன் முத்திரைச் சட்டம், அதன் பிறகு
வந்த டவுன்ஷெண்ட் சட்டம்
மற்றும் சில பொறுத்துக் கொள்ள முடியாத சட்டங்கள்
அமெரிக்க குடியேற்றங்களிடையே பெரும்
வன்முறையை ஏற்படுத்தியது. - இச்சட்டங்களை நீக்க
வேண்டி இங்கிலாந்து மன்னர்
மூன்றாம் ஜார்ஜூக்கு ஆலிவ்
கிளை விண்ணப்ப மனு
அளிக்கப்பட்டது. ஆனால்
அது மன்னரால் நிராகரிக்கப்பட்டது.
போரின்
போக்கு:
- 1776 ஜூலை 4இல்
13 குடியேற்ற நாடுகளும் விடுதலை
பெறுவதாக அறிவித்தன. இதனால்
போர் தவிர்க்க முடியாததாயிற்று. - ஆங்கிலப் படைகளுக்கு வில்லியம் ஹோவ் தலைமை
தாங்க அமெரிக்கப் படைகளுக்கு ஜார்ஜ் வாஷிங்டன் தலைமை
ஏற்றார். - போரின் தொடக்கத்தில் வாஷிங்டனை புருக்ளின், நியூயார்க், நியூ ஜெர்சி போன்ற
இடங்களில் வில்லியம் ஹோவ்
வெற்றி கண்டார். - ஆனால் வாஷிங்டன்
தனது திட்டமிட்ட போர்
தந்திரத்தால் 1777ல்
சாரடோகா போர் முனையில்
ஆங்கிலப்படைகள் சரணடைந்தன. - 1781ல் யார்க்டவுன் என்ற இடத்திலும் இங்கிலாந்து படைகள் அமெரிக்கப் படைகளிடம்
சரணடைந்தது. அமெரிக்க குடியேற்றங்கள் வெற்றி பெற்றன.
விளைவுகள்:
- வடக்கே இருந்த
குடியேற்றங்கள் சுதந்திரம் பெற்றன. 1783ல் இங்கிலாந்துக்கும் அமெரிக்காவுக்கும் இடையே
பாரிஸ் ஒப்பந்தம் ஏற்பட்டது. - 13 குடியேற்ற நாடுகளின்
சுதந்திரத்தையும் அமெரிக்க
ஐக்கிய நாடுகள் எனும்
பெயரில் ஒரு புதிய
நாடு உருவானதையும் இங்கிலாந்து அங்கீகரித்தது. ஜார்ஜ்
வாஷிங்டன் அமெரிக்காவின் முதல்
அதிபரானார்.
2.பாஸ்டில் சிறை தகர்ப்பு முதல் ரோபஸ்பியர் கொல்லப்பட்டது வரையிலுமான பிரெஞ்சுப் புரட்சியின் போக்கினை வரைக.
விடை:
- மூன்றாம் பிரிவுப்
பிரதிநிதிகள் தேசிய
சட்டமன்றத்தை அமைக்கும்
பணியில் ஈடுபட்டிருந்தபோது சாதாரண
மக்கள் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தால் துயரங்களுக்கு உள்ளாயினர். - உணர்ச்சிவயப்பட்ட பெண்கள்
சந்தைப் பகுதியை முற்றுகையிட்டு கிளர்ச்சி செய்தனர். அரசர்
பாரிஸ் நகர வீதிகளுக்கு செல்லும்படி படைகளுக்குக் கட்டளையிட்டார். - இதனால் கோபம்
கொண்டு வெகுண்டெழுந்த மக்கள்
பாரிஸ் நகரின் முக்கியச்
சிறைக்கூடமான பாஸ்டில்
சிறையை 1789 ஜூலை 14 இல்
தகர்த்து கைதிகளை விடுவித்தனர். - 1791 இல் தேசிய
சட்டமன்றம் அரசியலமைப்பை உருவாக்கி
அரசர் அதிகாரம் குறைக்கப்பட்டது. - 25 வயது நிரம்பிய
வரி செலுத்தும் ஆண்கள்
வாக்குரிமை பெற்றனர். - ஆனால் மக்கள்
துயரம் குறையவில்லை . - எனவே தங்கள்
குறைகளை நீக்க நடுத்தர
மக்கள் ஜேக்கோபியன் குழுவை
உருவாக்கினர். - எதிர் புரட்சியாளர் சதியில் அரசியல் கைதிகள்
இணையப் போவதாக மக்கள்
நம்பியதை தொடர்ந்து அரச
ஆதரவாளர்கள் 1200 பேர் 1792 செப்டம்பர் 2ல் கொல்லப்பட்டனர். இது
செப்டம்பர் படுகொலைகள் ஆகும். - அரசர் 16ல்
லாயியும், அரசி அன்டாய்னட்டும் கூட 1793ல் கில்லடினில் கொல்லப்பட்டனர். - புரட்சி தொடங்கிய
முதல் 4 ஆண்டுகளில் ஏற்பட்ட
நன்மைகளை ரோபஸ்பியர் இழக்க
விரும்பவில்லை. - தன்னுடைய சர்வாதிகார ஆட்சியில் ஜெகோபியர்கள் கிராண்டியர் தலைவர்களை சிரச்சேதம் செய்தார்.
- 1793க்கும் 1794க்கும்
இடைப்பட்ட காலம் தீவிர
சீர்திருத்த காலமாக இருந்தது. - அரசும் சமூக
அடித்தளமும் அளவுக்கு மேலாக
தீவிரமயமாக்கப்பட்டதால் கோபம்
கொண்ட உறுப்பினர்கள் ரோபஸ்பியருக்கு எதிராக திரும்பியதால் அவரும்
குற்றம் சாட்டப்பட்டு 1794ல்
தூக்கிலிடப்பட்டார்.
3.“அமெரிக்க புரட்சியும் பிரெஞ்சுப் புரட்சியும் ஹைட்டியில் புரட்சி ஏற்படத் தூண்டுகோலாய் அமைந்தன. இக்கூற்றை உறுதிப்படுத்தவும்.
விடை:
- கரீபியன் கடலில்
சர்க்கரை வளம் மிகுந்த
பிரஞ்சு காலனியாதிக்க நாடு
ஹைட்டி மேற்கு ஹிஸ்பானியோலா பகுதி நிலவுடைமையாளர்கள் அதிக
அளவில் ஆப்ரிக்க அடிமைகளை
இறக்குமதி செய்தனர். - பிரான்சில் பாஸ்டில்
சிறை தகர்ப்பு செய்தியை
தொடர்ந்து ஆளுநருக்கு எதிராக
ஆயுத எதிர்ப்பு நடந்தது. - முலாட்டோ பிரிவின்
வின்சென்ட் ஒஜ் என்பவர்
தலைமையில் நடைபெற்ற கிளர்ச்சி
ஒடுக்கப்பட்டு அவர்
தூக்கிவிடப்பட்டார். - 1790ல் பிரான்ஸ்
கருப்பின முலாட்டோகளுக்கு குடியுரிமை வழங்கியது. - ஆனால் வெள்ளையர்
மதிக்கவில்லை. எனவே
மீண்டும் மோதல் வெடித்தது. - 1790ல் படைத்தளபதி டூசைண்ட் எல் ஓவர்ச்சர்
பல பகுதிகளை தன்
கட்டுப்பாட்டில் கொண்டு
வந்தார். - இதை மீட்க
12000 படைவீரர்களை நெப்போலியன் அனுப்பி
வைத்தார். - தளபதி டெசலைன்ஸ்
கருப்பின மக்களை ஒருங்கிணைத்து நெப்போலியன் படைகளை தோற்கடித்தார். 1804ல் ஹைட்டி
கருப்பின மக்களின் சுதந்திர
நாடானது.
4.தொழிற்புரட்சி ஏன் முதலில் இங்கிலாந்தில் தொடங்கிற்று? நவீன சமூகத்தின் மீது அது என்ன தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது?
விடை:
பல்வேறு காரணங்களினால் தொழிற்புரட்சி முதன்
முதலாக இங்கிலாந்தில் தொடங்கியது.
வணிகப்புரட்சியின் தாக்கம்:
- வியாபார, வணிகத்
துறைகளில் ஏற்பட்ட புரட்சிகரமான மாற்றங்கள், முதலாளிகள் எனும்
புதிய வர்க்கத்தை உருவாக்கியது. - கடல் கடந்து
காலனிகளை உருவாக்கும் போட்டியில் இங்கிலாந்து தாமதமாக இணைந்தாலும், காலப்போக்கில் இங்கிலாந்து மேலாதிக்கம் பெற்றது. - ஸ்பெயின், போர்த்துகல், பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய
சக்திகளை அது தோற்கடித்தது. - 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகின்
நான்கில் ஒரு பகுதி
இங்கிலாந்தின் காலனிகளாக
இருந்தது. - இங்கிலாந்தில் மக்கள்தொகை வளர்ச்சிக்கு ஏற்றவாறு
சந்தைகளும் விரிவடைந்தன. 1600இல்
நான்கு மில்லியன்களாக இருந்த
இங்கிலாந்தின் மக்கள்தொகை 1700இல் ஆறு மில்லியன்களாகவும் 18ம் நூற்றாண்டின் முடிவில்
ஒன்பது மில்லியன்களாகவும் பெருகியது. - பல்வேறு காலனிகளின் குறிப்பாக இந்தியாவின் செல்வங்கள் சுரண்டப்பட்டு இங்கிலாந்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
- அதனால் தொழிற்சாலைகளில் முதலீடு செய்யத் தேவையான
மூலதனம் தாராளமாகக் கிடைத்தது. - ஏனைய ஐரோப்பிய
நாடுகளுடன் ஒப்பிடுகையில் இங்கிலாந்து மிகவும் தாராளத்தன்மை கொண்ட
நாடாக இருந்தது. - அதன் அரசியல்
உறுதித்தன்மை தொழில்களின் வளர்ச்சிக்குச் சாதகமான
சூழலை உருவாக்கியது. - நிலக்கரி, இரும்பு
போன்ற மூல வளங்கள்
இங்கிலாந்தில் அதிக
அளவில் கிடைத்ததென்பது தொழிற்வளர்ச்சிக்கு மற்றுமொரு காரணமாகும். 1800இல் இங்கிலாந்து 10 மில்லியன் டன் நிலக்கரியை அல்லது உலகின் மொத்த
நிலக்கரி உற்பத்தியில் 90 விழுக்காட்டினை உற்பத்தி செய்தது. - புதிய வேளாண்மைத் தொழில் நுட்பங்களுடன் பயிர்சுழற்சி முறையும் அறிமுகமானதால் வேளாண் உற்பத்தி அதிகமானது.
- ஆனால் இது
விவசாயத் தொழிலாளர்களிடையே வேலையில்லாத் திண்டாட்டத்தை ஏற்படுத்தியது. - அனைத்தும் இழந்து
திவாலாகிப் போன விவசாயிகள் நகரங்களுக்குக் குடிபெயர்ந்தனர். - 18ம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலிருந்து இவ்வாறு
சென்றவர்களே பல்வேறு தொழிற்சாலைகளுக்குப்
பெருமளவிலான உழைப்பாற்றலை வழங்குவோராய் இருந்தனர். - தனது கடற்கரைப்பகுதி முழுவதிலும் இங்கிலாந்து சிறப்பாக
நிறுவப்பட்டிருந்த துறைமுகங்களைக் கொண்டிருந்தது. அது
உள்நாட்டு மற்றும் பன்னாட்டு
வணிகத்தை எளிதாக்கியது. - நிலப்பகுதியிலிருந்து சற்றே
தொலைவில் அமைந்திருந்த இங்கிலாந்தின் புவியியல் அமைவிடமும், அந்நியர்
படையெடுப்புகளிலிருந்து சற்றே
பாதுகாப்பாக அமைந்திருந்தமையும் தொழிற்புரட்சி ஏற்படுவதற்கு மற்றுமொரு
காரணமாக அமைந்தது. - இங்கிலாந்துத் தீவுகளில்
நிலவிய மிதமான தட்பவெப்பநிலை பருத்தியிழைத் துணி
உற்பத்திக்கு உகந்ததாக
இருந்தது.
V. செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)
1. அமெரிக்க புரட்சி
வெற்றி பெறாமல் போயிருந்தால் என்ன நடைபெற்றிருக்கக்கூடும் என்பது
குறித்து ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யலாம்.
2. பண்டைய ஆட்சி
முறையின் மூன்று எஸ்டேட்டுகளைப் போல் மாணவர்களை மூன்று
அணிகளாகப் பிரித்து, பதினாறாம்
லூயியால் மே, 1789இல்
கூட்டப்பட்ட தேசிய சட்டசபை
போன்ற மாதிரிச் சட்டசபையின் அமர்வை நடத்திப் பார்க்கலாம்.
3. இயந்திரங்களும் தொழிற்சாலை முறையும் அறிமுகமான சூழலில்
இங்கிலாந்தில் கைவினைத்
தொழில்கள் எவ்வாறு சீரழிந்தது என்பதை மாணவருக்கு உணர்த்தி,
அதைப் போன்றதொரு சூழ்நிலை
ஆங்கிலக்காலனியாட்சி நிறுவப்பட்ட பின்னர் இந்தியாவில் ஏற்பட்டதையும் எடுத்துரைக்கவும்.