இந்தியாவில் கொரொனாவின் இரண்டாம் அலையின் கோரத்தாண்டவம் உச்சத்தில் இருக்கும் நிலையில், சென்னையில் கொரொனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில், உயர்நிலை கண்காணிப்புக்குழுவின் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது, அதிகப்படியான நோயாளிகளின் எண்ணிக்கையை கருத்தில்கொண்டு அதற்கேற்ற வகையில் செவிலியர்களின் தேவை இருப்பதால் தற்போது ஒப்பந்த அடிப்படையிலிருந்து காலமுறை ஊதியத்திற்கு மாற்றப்படும் 1212 செவிலியர்கள் தங்கள் பணிசெய்யும் நிலையத்திலிருந்து 05-05-2021குள் விடுவிக்கப்பட்டு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி இயக்குனரகத்தில் 10-05-2021 ஆம் தேதி அன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ சென்று தங்களது வரவை ஊறுதி செய்துகொள்ளவேண்டும் எனவும், அங்கிருந்து சென்னையில் தேவைப்படும் கொரொன பராமரிப்பு மையங்கள்/மருத்துவமனைகளுக்கு மாற்றபடுவார்கள் எனவும் அவர்கள் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வரவை உறுதிசெய்யும் நாளிலிருந்தே பணிநிரந்தர மூப்பு கணக்கிடப்படுமென்றும் அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது, 1212 MRB செவிலியர்களுக்கான பணி நிரந்தர ஆணை இன்னும் ஓரிரு நாட்களில் வழங்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisment -
1212 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் – ஊதியம் உயர்வு – தமிழக அரசு அறிவிப்பு
- Advertisment -