தமிழகத்தில் நேற்று நடைபெற்ற வனத்துறை மேம்பாட்டு பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் பல்வேறு வனத்துறை பணிகள் உட்பட சீருடை வனப்பணியாளர் பணியிடத்தில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்புவது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்று சென்னை தலைமை செயலகத்தில் வனத்துறை மேம்பாட்டு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு, சீருடை வனப்பணியாளர் பணியிடத்தில் காலியாக இருக்கும் 1161 பணியிடங்கள் தமிழ்நாடு சீருடை வனப்பணியாளர் தேர்வாணையத்தால் (TNFUSRC) விரைவில் தேர்வு நடத்தி தகுதியான நபர்கள் மூலமாக நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சீருடை வனப்பணியாளருக்கான தேர்வு குறித்த அறிவிப்பு விரைவில் தமிழ்நாடு சீருடை வனப்பணியாளர் தேர்வாணையத்தால் (TNFUSRC) வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் Forester பணியிடத்திற்கு இளங்கலை பட்டமும், Forest Guard பணியிடத்திற்கு 12ம் வகுப்பு தேர்ச்சியும், Forest Watcher பணியிடத்திற்கு 10ம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.