10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் தேர்வு முடிவு அதிகாரபூர்வமாக வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
Check Result Here:
பகல் 12 மணிக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிறது. இந்த தேர்வு முடிவுகள், மாணவர்கள் சார்பாக பதிவு செய்யப்பட்ட போனுக்கு உடனுக்குடன் அனுப்பி வைக்கப்படும். 10ம் வகுப்பு பொதுத்தேர்வை இந்த வருடம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சுமார் 9 லட்சம் மாணவ, மாணவியர் எழுதினர்.
மொத்தம் 46 லட்சம் விடைத்தாள்களை இவர்கள் எழுதி உள்ளனர். இதை திருத்தும் பணிகள் கடந்த 9ம் தேதி நிறைவு பெற்றது. இணைய பக்கங்களில் தேர்வு முடிவுகளை உடனுக்குடன் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது http://www.tnresults.nic.in/, http://www.dge1.tn.nic.in/, ஆகிய பக்கங்களில் தேர்வு முடிவை காணலாம். இந்த பக்கங்கள் டவுன் ஆகும் பட்சத்தில், பின் வரும் பக்கங்களில் தேர்வு முடிவுகளை காணலாம். http://www.dge2.tn.nic.in/, https://www.dge.tn.gov.in/ ஆகிய பக்கங்களில் தேர்வு முடிவை காணலாம்