நாட்டு மாடுகளை
வளர்க்கும்
விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில்
10,800 ரூபாய் வழங்கப்படும் – மாநில அரசு
நாட்டு
மாடுகளை வளர்க்கும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில்
10,800 ரூபாய் வழங்கப்படும் என
மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்த
தொகை, மாதம் 900 ரூபாய்
வீதம் ஆண்டு முழுவதும்
வழங்கப்பட உள்ளது. இந்தத்திட்டம் குறித்து தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு நிலையான வருமானம் வழங்கும்
வகையில் அவர்களுக்கு மாதம்
900 ரூபாய் வழங்கப்படும் என
மத்திய பிரதேச முதல்வர்
சிவராஜ் சிங் சவுஹான்
அறிவித்துள்ளார். எனினும்,
இந்த பணத்தை பெறுவதற்கு ஒரு நிபந்தனை உண்டு.
நிபந்தனை (Condition)
விவசாயிகள் மாதம் 900 ரூபாய் பெற
வேண்டுமெனில் நாட்டு
மாடுகளை வளர்க்க வேண்டும்.
இயற்கை விவசாயத்துக்கு நாட்டு
பசு மாடுகள் அத்தியாவசியம் என்பதால் ஒரு நாட்டு
பசு மாடாவது விவசாயிகள் வளர்க்க வேண்டும் என்று
முதல்வர் தெரிவித்துள்ளார்.
மாதம் ரூ.900
(Rs.900 per month)
விவசாயம்
தொடர்பாக நிதி ஆயோக்
நடத்திய நிகழ்ச்சியில் மத்திய
பிரதேச முதல்வர் சிவராஜ்
சிங் சவுஹான் பங்கேற்று
பேசினார். அப்போது அவர்,
இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக
விவசாயிகளுக்கு மாதம்
900 ரூபாய் வழங்கப்படும் எனவும்
தெரிவித்தார்.
நாட்டு
பசு மாடு வளர்க்கும் விவசாயிகளுக்கு மாதம்
900 ரூபாய் என ஆண்டுக்கு
10,800 ரூபாய் மொத்தம் வழங்கப்படும் என முதல்வர் சிவராஜ்
சிங் சவுஹான் தெரிவித்துள்ளார். இதனால் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும்.
இயற்கை
விவசாயத்தை ஊக்குவிப்பதற்கான பணிகளை
மத்திய பிரதேச அரசு
விரைவில் தொடங்கும் எனவும்
அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். மாநிலத்தில் 1.65 லட்சம்
விவசாயிகள் இயற்கை விவசாயம்
செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.