Buy Exam Books Here |
|
To Join Whatsapp |
|
To Follow FaceBook |
|
To Join Telegram Channel |
|
To Follow Twitter |
|
To Follow Instagram |
சுவரொட்டி வரைதல், கவிதை மற்றும் பாடல்கள் எழுதுதல், வாசகம் எழுதுதல் போட்டியில் ஆர்வமுள்ள பொதுமக்கள்அனைவரும் பங்கேற்கலாம். தமிழ்நாடு அலுவலகத்தின் தேர்தல் இணையதளத்தில் ‘ஸ்வீப் (SVEEP) போட்டி 2020- இயங்கலை போட்டிகள்’ என்ற இணையவழி மூலமாக பங்கேற்கலாம். இப்போட்டிகள் அனைத்தும் இணைய தளம் மூலமாக மட்டுமே நடத்தப்படும். இந்தியாவில் தேர்தல்கள் மற்றும் 100 வாக்காளர் பட்டியல் பெயர் பதிவு மற்றும் வாக்குப்பதிவினை அடைவதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் என்பதே இப்போட்டியின் முக்கிய கருத்துருவாகும்.
இப்போட்டியில் வரும் 18ம் தேதி மாலை 5 மணி வரை பங்கேற்கலாம். முதல் பரிசு ₹10,000, இரண்டாம் பரிசு ₹7,000, மூன்றாம் பரிசு ₹5,000.மேலும் இத்துறை, நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக தேர்தல்விழிப்புணர்வு தொடர்பான குறும்படம், அனிமேஷன் படங்கள், தேர்தல் பாடல்கள், மீம்ஸ் போன்றவைகளைத் தயாரிக்கும் பொருட்டு ஆர்வமுள்ள ஊடக நிறுவனங்கள், தனிநபரிடமிருந்து விலைப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.
ஐயா வணக்கம், வாக்குபதிவு எந்திரத்தோடு ஆதாரை இணைக்கலாமே, விரல் ரேகை ஒத்துப்போனால் மட்டுமே வாக்களிக்க முடியும் என்ற கட்டுப்பாட்டை உருவாக்கலாமே, கள்ள ஓட்டு போட முடியாது