எழுத்து இலக்கணம்
100+ தமிழ் எழுத்து இலக்கண வினா-விடைகள் – TNPSC, அரசு தேர்வுகளுக்கு உதவும்!
TNPSC மற்றும் பிற அரசு தேர்வுகளுக்கான 100+ தமிழ் எழுத்து இலக்கண வினா-விடைகள் தேடுகிறீர்களா? இங்கு நீங்கள் தேடியுள்ள தமிழ் எழுத்து இலக்கணம் சார்ந்த வினா-விடைகள் தொகுப்பினை பெறலாம்!
இதில், 100+ தமிழ் எழுத்து இலக்கணம் குறித்த முக்கிய வினா-விடைகள் உள்ளன, இதன் மூலம் நீங்கள் TNPSC தேர்வு மற்றும் அரசு தேர்வுகள் மூலம் வெற்றி பெற தயார் ஆகலாம்.
இதில் உள்ள சிறப்பம்சங்கள்:
- ✒️ 100+ தமிழ் எழுத்து இலக்கணம் வினா-விடைகள்
- 📚 விளக்கங்களுடன் எளிமையாக கொடுக்கப்பட்ட வினா-விடைகள்
- 🧑🏫 TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கான பயிற்சி
- 🏆 வெற்றி பெற உதவிய பயிற்சிகள்
விடைகளில் ஏதேனும் தவறுகள் இருந்தால் கீழ கமெண்டில் தெரிவிக்கவும்
Table of Contents
விடைகள் இறுதியில் வழங்கப்பட்டுள்ளது
- ஒலி வடிவாக எழுப்பப்படுவதும் வரி வடிவாக எழுதப்படுவதும் _ எனப்படும்.
அ) எழுத்து ஆ) சொல்
இ) பொருள் ஈ) யாப்பு - அ, இ, உ, எ, ஒ ஆகிய ஐந்தும் _ எழுத்துகள்
அ) குறில் ஆ) நெடில் இ)உயிர்மெய் ஈ)முதல் - ஒரு முறை கண் இமைக்கவோ, ஒரு முறை கை நொடிக்கவோ ஆகும் கால அளவு _ மாத்திரை
அ) அரை ஆ) 1 இ) 2 ஈ) அனைத்தும் - கூற்றினை ஆராய்க:.
1) குறில் எழுத்துகள் – 5
2) நெடில் எழுத்துகள – 7
3) உயிரெழுத்துகள் – 12
4) மெய்யெழுத்துகள் – 17
; அ) 1இ2 மட்டும் சரி ஆ) 2இ3 மட்டும் சரி
இ) 1,2,3 சரி ஈ) அனைத்தும் சரி - அரை மாத்திரை அளவே ஒலிக்கும் எழுத்துகள்
அ) குறில் ஆ) நெடில்
இ) மெய் ஈ) உயிர் மெய் - கூற்றினை ஆராய்க
1) மெய் எழுத்துகள் 18 உடன் உயிர்எழுத்துகள் 12 சேர்வதால் தோன்றுபவை உயிர் மெய் எழுத்துகள்
2) உயிர்மெய் எழுத்துகள் உயிர்மெய் குறில், உயிர்மெய் நெடில்;, உயிர்மெய் ஆய்தம் என ழூன்று வகைப்படும்
அ) 1 மட்டும் சரி ஆ) 2 மட்டும் சரி
இ) இரண்டும் சரி ஈ) இரண்டும் தவறு - ‘தனி எழுத்து’ – என அழைக்கபடுவது
அ) ஐ ஆ)ஔ இ) இ ஈ) ஃ - வன்மையாகவும் இல்லாமல், மென்மையாகவும் இல்லாமல் இரண்டிற்கும் இடைப்பட்டு ஒலிக்கும் எழுத்துகள்
அ) க்ச்ட்த்ப்ற் ஆ) ங்ஞ்ண்ந்ம்ன்
இ) ய் ஈ) அனைத்தும் - ‘கபிலர்’ – என்ற பெயருக்கான மாத்திரை அளவைக் கண்டுபிடி
அ) 2 ஆ) 3 இ) 2 ½ ஈ) 3 ½ - எழுத்துகளின் வகைகள்
அ) 2 ஆ) 3 இ) 5 ஈ) 30 - கூற்றினை ஆராய்க
1) முதல் எழுத்துகள் – 30 ஆகும்
2) சார்பெழுத்துகள் – 10 ஆகும்
3) பிற எழுத்துகள் தோன்றுவதற்கும், இயங்குவதற்கும் காரணமாக இருப்பவை சார்பெழுத்துகள்
அ) 1 மட்டும் தவறு ஆ) 2 மட்டும் தவறு
இ) 3 மட்டும் தவறு ஈ) அனைத்தும் சரி - கூற்றனை ஆராய்க
1) உயிர்மெய் எழுத்தின் ஒலிக்கும் கால அளவு உயிர் எழுத்தை ஒத்திருக்கும்
2) உயிர்மெய் எழுத்தின் ஒலிவடிவம் மெய் எழுத்தை ஒத்திருக்கும்
3) உயிர்மெய் எழுத்தின் வரிவடிவம் மெய் எழுத்தை ஒத்திருக்கும்
அ) 1 மட்டும் சரி ஆ) 1ம் 2ம் சரி
இ) 1ம் 3ம் சரி ஈ) அனைத்தும் சரி - ஆய்தம் தனக்குமுன் ஒரு குறில் எழுத்தையும் தனக்குப்பின் _ உயிர்மெய் எழுத்தையும் பெற்றுச் சொல்லின் இடையில் மட்டுமே வரும்
அ) வல்லினம் ஆ) மெல்லினம்
இ) இடையினம் ஈ) அஇ ஆ சரி - ஆய்தம் பற்றிய கூற்றினை ஆராய்க
1) ஆய்த எழுத்து சார்பெழுத்து ஆகும்.
2) ஆய்த எழுத்து தனித்து இயங்கும்.
3) ஆய்தம் முப்புள்ளி, முப்பாற்புள்ளி, தனிநிலை என்ற பெயரினை உடையது.
4) ஆய்தம் தனக்கு முன் ஒரு நெடில் எழுத்தையும் தனக்குப்பின் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றுச் சொல்லின் இடையில் மட்டும் வரும்.
அ) 1ம் 2ம் சரி ஆ) 1ம் 3ம் சரி
இ) 2ம் 3ம் சரி ஈ) 1ம் 4ம் சரி - மொழி முதல் எழுத்துகளின் எண்ணிகை
அ) 21 ஆ) 22 இ) 23 ஈ) 24 - எந்த எழுத்து வரிசையில் ஓர் எழுத்து மட்டுமே சொல்லின் முதல் எழுத்தாக வருகிறது
அ) ங ஆ) ஞ இ) ய ஈ) வ - பிறமொழிச் சொற்கள் அல்லாதவற்றைத் தேர்ந்தெடு
அ) டமாரம் ஆ) லண்டன்
இ) கௌதாரி ஈ) ரம்பம் - கூற்றினை ஆராய்க
1) ய – வரிசையில் 6 எழுத்துகள் சொல்லின் முதலில் வரும்
2) ஞ – வரிசையில் 4 எழுத்துகள் சொல்லின் முதலில் வரும்
3) வ – வரிசையில் 8 எழுத்துகள் சொல்லின் முதலில் வரும்.
4) க,ச,த,ந,ப,ம – வரிசைகளில் எல்லா உயிர் மெய் எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்.
அ) 1 மட்டும் தவறு ஆ) 2 மட்டும் தவறு
இ) 3 மட்டும் தவறு ஈ) 4 மட்டும் தவறு - பிற மொழிப் பெயர்ச் சொற்கள் அல்லாதவற்றை தேரிந்தெடு:
அ) கார்த்திக் ஆ) சுசித்
இ) திலீப் ஈ) கண்ணன் - கூற்றினை ஆராய்க
1) ஆய்த எழுத்து சொல்லின் இறுதியில் வராது.
2) க்,ங்,ச்,ட்,த்,ப்,ற் ஆகிய ஏழு மெய் எழுத்துகளும் சொல்லின் இறுதியில் வருவதில்லை.
3) ஆய்த எழுத்து சொல்லுன் முதலில் வராது.
அ) 1 மட்டும் சரி ஆ) 2 மட்டும் சரி
இ) 3 மட்டும் சரி ஈ) ழூன்றும் சரி - ஒலிக்கும் முயற்சி, பிறக்கும் இடம் ஆகியவற்றில் ஒற்றுமை உள்ள எழுத்துகள்
அ) உயிர்மெய் எழுத்துகள் ஆ) சார்பெழுத்துகள்
இ) இன எழுத்துகள் ஈ) மயங்கொலிகள் - இன எழுத்து இடம் பெறாத சொல்லைத் தேர்ந்தெடு
அ) அம்பு ஆ) தென்றல்
இ) மின்னல் ஈ) மண்டபம் - ‘ஐ’ என்னும் எழுத்திற்கான இன எழுத்து
அ) உ ஆ) இ இ) ஒ ஈ) எ - ஆய்த எழுத்துக்கான இன எழுத்து
அ) உ ஆ) இ இ) ஒ ஈ) இன எழுத்து இல்லை - தவறான சொல்லை வட்டமிடுக
அ) கண்டான் ஆ) வென்றான்
இ) நண்டு ஈ) வண்டு - கூற்றினை ஆராய்க
1) உயிர் எழுத்துகளில் குறிலுக்கான இன எழுத்து நெடில்
2) உயிர் எழுத்துகளில் நெடிலுக்கான இன எழுத்து குறில்
3) ‘ஔ’ என்னும் எழுத்திற்கான இன எழுத்து ஒ
அ) 1 மட்டும் சரி ஆ) 2 மட்டும் சரி
இ) 1ம் 2ம் சரி ஈ) அனைத்தும் சரி - உச்சரிப்பில் சிறிதளவு மட்டுமே வேறுபாடு உள்ள ஒலிகள் எழுத்துகள் _
அ) உயிர்மெய் எழுத்துகள் ஆ) சார்பெழுத்துகள்
இ) இன எழுத்துகள் ஈ) மயங்கொலிகள் - மயங்கொலி எழுத்துகளின் எண்ணிக்கை
அ) 5 ஆ) 8 இ) 9 ஈ) 12 - மயங்கொலி எழுத்து அல்லாதவற்றைத் தேர்ந்தெடு
அ) ந ஆ) ழ இ) ய ஈ) ற - தவறான பொருள் உணர்த்தும் சொல்லினைத் தேர்ந்தெடு
அ) விலை – பொருளின் மதிப்பு
ஆ) விழை – உண்டாக்குதல்
இ) இளை – மெலிந்து போதல்
ஈ) இழை – நூல் இழை - தவறான பொருள் உணர்த்தும் சொல்லினைத் தேர்ந்தெடு
அ) வாணம் – வெடி ஆ) வானம் – ஆகாயம்
இ) பணி – குளிர்ச்சி ஈ) கூறை – புடவை - கூற்றினை ஆராய்க
1) ந – நாவின் நுனி மேல்வாய்ப் பல்லின் அடிப்பகுதியைத் தொடுவதால் நகரம் பிறக்கிறது.
2) ண – நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் முன் பகுதியைத் தொடுவதால் ணகரம் பிறக்கிறது.
3) ன – நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் நடுப்பகுதியைத் தொடுவதால்
னகரம் பிறக்கிறது.
அ) 1 மட்டும் சரி ஆ) 2 மட்டும் சரி
இ) 3 மட்டும் சரி ஈ) அனைத்தும் சரி - நாவின் நுனி மேல் நோக்கி வளைந்து வருவதால் தோன்றும் எழுத்து _
அ) ல ஆ) ள இ) ழ ஈ) ற - சுட்டு எழுத்துகள் அல்லாத எழுத்தைத் தேர்ந்தெடு
அ) அ ஆ) உ இ) எ ஈ) இ - இன்றைய வழக்கில் பயன்பாட்டில் இல்லாத சுட்டெழுத்து
அ) அ ஆ) உ இ) எ ஈ) இ - சொல்லின் உள்ளேயே இருந்து சுட்டுப் பொருளைத் தருவது _ அ) அகச்சுட்டு ஆ) புறச்சுட்டு
இ) அண்மைச்சுட்டு ஈ) சேய்மைச்சுட்டு - அருகில் உள்னவற்றிற்கும், தொலைவில் உள்ளவற்றிற்கும் இடையில் இருப்பதைச் சுட்டிக் காட்ட அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட எழுத்து
அ) அ ஆ) இ இ) உ ஈ) எ - சொல்லில் உள்ள சுட்டு எழுத்துகளை நீக்கினாலும் பொருள் தருவது
அ) அகச்சுட்டு ஆ) புறச்சுட்டு
இ) அண்மைச்சுட்டு ஈ) சேய்மைச் சுட்டு - கூற்றினை ஆராய்க
1) அண்மைச்சுட்டு எழுத்து – இ
2) சேய்மைச்சுட்டு எழுத்து – அ
அ) 1 மட்டும் சரி ஆ) 2 மட்டும் சரி
இ) இரண்டும் சரி ஈ) இரண்டும் தவறு - புறச்சுட்டுக்கான எடுத்துகாட்டினைத் தேர்ந்தெடு
அ) இம்மலை ஆ) அவை
இ) இவன் ஈ) அது - வினா எழுத்துகள் எத்தனை?
அ) 3 ஆ) 5 இ) 7 ஈ) 9 - மொழியின் முதலில் வரும் வினா எழுத்தினைத் தேர்ந்தெடு
அ) ஆ ஆ) யா இ) ஏ ஈ) ஓ - மொழியின் இறுதியில் வரும் வினா எழுத்தினைத் தேர்ந்தெடு
அ) எ ஆ) ஏ இ) ஓ ஈ) யா - வினா எழுத்துகள் சொல்லின் புறத்தே வந்து வினாப் பொருளைத் தருவது
அ) புறவினா ஆ) அகவினா
இ) புறச்சுட்டு ஈ) அகச்சுட்டு - கூற்றினை ஆராய்க
1) அகவினா சொற்களில் உள்ள வினா எழுத்துகளை நீக்கினால் பிற எழுத்துகளுக்குப் பொருள் இல்லை.
2) புற வினா சொற்களில் உள்ள வினா எழுத்துகளை நீக்கினால் பிற எழுத்துகளுக்குப் பொருள் இல்லை.
அ) 1 மட்டும் சரி ஆ) 2 மட்டும் சரி
இ) இரண்டும் சரி ஈ) இரண்டும் தவறு - உயிரெழுத்துகள் _ வகைப்படும்
அ) 2 ஆ) 3 இ) 4 ஈ) 5 - மெய்யெழுத்துகள் _ வகைப்படும்
அ) 2 ஆ) 3 இ) 4 ஈ) 5 - உயிர்மெய் குறில் எழுத்துகளின் எண்ணிக்கை
அ) 216 ஆ) 90 இ) 126 ஈ) 1 - கூற்றினை ஆராய்க
1) உயிர்மெய் எழுத்துகள் – 216
2) உயிர்மெய்க் குறில் – 126
3) உயிர்மெய் நெடில் – 90
அ) 1 மட்டும் சரி ஆ) 1ம் 2ம் சரி
இ) 1ம் 3ம் சரி ஈ) அனைத்தும் சரி - ‘அளபெடுத்தல்’ – என்ற சொல்லின் பொருள்
அ) குறுகி ஒலித்தல் ஆ) நீண்டு ஒலித்தல்
இ) இடைவிடாது ஒலித்தல் ஈ) விட்டு விட்டு ஒலித்தல் - உயிரளபெடையின் வகைகள்
அ) 2 ஆ) 3 இ) 4 ஈ) 5 - செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசைக்காக அளபெடுப்பது
அ) செய்யுளிசை அளபெடை ஆ) இசைநிறை அளபெடை
இ) இன்னிசை அளபெடை ஈ) ஒற்றளபெடை - இசைநிறை அளபெடை என அழைக்கப்படுவது
அ) செய்யுளிசை அளபெடை ஆ) சொல்லிசை அளபெடை
இ) ஒற்றளபெடை ஈ) இன்னிசை அளபெடை - இன்னிசை அளபெடைக்கான எடுத்துகாட்டினைத் தேர்ந்தெடு
அ) ஓஒதல் ஆ) உறாஅர்க்கு
இ) கொடுப்பதூம் ஈ) உரனசைஇ - செய்யுளில் ஓசை குறையும் போது அதனை நிறைவு செய்ய நெட்டெழுத்துகள் அளபெடுத்தல் _ அளபெடை
அ) செய்யுளிசை அளபெடை ஆ) சொல்லிசை அளபெடை
இ) இன்னிசை அளபெடை ஈ) ஒற்றளபெடை - செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசைக்காக அளபெடுப்பது
அ) செய்யுளிசை அளபெடை ஆ) இசைநிறை அளபெடை
இ) இன்னிசை அளபெடை ஈ) சொல்லிசை அளபெடை - ‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ என்ற வரியாருடையது
அ) பெரியார் ஆ) அண்ணா
இ) கபிலர் ஈ) தொல்காப்பியர் - காட்டுப் பசுவின் பெயரைக் குறிப்பது
அ) சொன்றி ஆ) ஆமா
இ) பரிமா ஈ) அரிமா - நாட்டிலுள்ள பெருமக்கள் பெரிதும் கூடும் அவை ; _
அ) மாஞாலம் ஆ) மாநிலம்
இ) மாநாடு ஈ) இவை அனைத்தும் - நெட்டெழுத்து ஏழே ஓரெழுத்து ஒருமொழி என்றவர்
அ) தொல்காப்பியர் ஆ) பெரியார்
இ) நன்னூலார் ஈ) அண்ணா - நாற்பது நெடில் எழுத்துகளும், இரண்டு குறில் எழுத்துகளும் சேர்ந்து 42 ஓரெழுத்து ஒரு மொழி என கூறியவர்
அ) தொல்காப்பியர் ஆ) பெரியார்
இ) நன்னூலார் ஈ) அண்ணா - நன்னூலார் கூறிய ஓரெழுத்து ஒரு மொழி வரிசையினை ஆராய்க
1) உயிர் எழுத்து – ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ
2) தகர வரிசை – தா,தீ,தூ,தே,தை
3) பகர வரிசை – பா,பு,பே,பை,போ
அ) 1 மட்டும் சரி ஆ) 2 மட்டும் சரி
இ) 3 மட்டும் சரி ஈ) ழூன்றும் சரி - நன்னூலார் குறிப்பிட்ட எந்த 2 குறில் எழுத்துகள் மட்டும் ஓரெழுத்து ஒரு மொழியாய் வரும்
அ) நொ,து ஆ) சொ,து
இ) நொ,பு ஈ) வொ,து - முள்ளம்பன்றியின் பழம்பெயர் குறிப்பது
அ) எயினர் ஆ) எய்ப்பன்றி
இ) எயினியர் ஈ) ஏகலைபன்றி - அம்புவிடுவதில் வல்லவன் _ எனப்பட்டான்
அ) ஏவலன் ஆ) ஏகலை
இ) எயினியர் ஈ) ஏகலைவன் - கூடு, பொருந்து, சேர் என்னும் பொருளை குறிக்கும் சொல்
அ) ஏய் ஆ) மா
இ) ஆமா ஈ) ஆன் - பொருநத்தமற்ற ஓரேழுத்து ஒரு மொழிச் சொல்லைத் தேர்ந்தெடு
அ) ஊ – இறைச்சி ஆ) ஐ – தலைவன்
இ) கூ – ஒழுக்கம் ஈ) கா – சோலை - பொருத்துக
1) து – ஒழுக்கம்
2) நொ – நோய்
3) வை – புல்
4) கை – உண்
அ) 4231 ஆ) 1234 இ) 3241 ஈ)4123 - வல்லின மெய் எழுத்துகள் ஆறும் _ இடமாக கொண்டு பிறக்கிறன.
அ) கழுத்து ஆ) மார்பு
இ) ழூக்கு ஈ) கழுத்து - எழுத்துகள் பிறக்கும் இடத்தினை கொண்டு தவறானவற்றை தேர்ந்தெடு
அ) உயிர் எழுத்துகள் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன. ஆ) மெல்லின மெய் எழுத்துகள் ழூக்கை இடமாகக் கொண்டு பிறக்கின்றன. இ) ஆய்த எழுத்து தலையை இடமாகக் கொண்டு பிறக்கிறது.
ஈ) இடையின மெய் எழுத்துகள் மார்பை இடமாகக் கொண்டு பிறக்கிறது. - இதழ்களைக் குவிப்பதால் பிறக்கும் எழுத்துகள்
அ) இ,ஈ ஆ) உ,ஊ இ) எ,ஏ ஈ) அ,ஆ - நாவின் ழுதற்பகுதி, அண்ணத்தின் அடிப்பகுதியைப் பொருத்தினால் பிறக்கும் எழுத்துகள்
அ) ட்,ண் ஆ) ர்,ழ் இ) க்,ங் ஈ) ஞ் - நாக்கின் அடிப்பகுதி, மேல்வாய் அடிப்பகுதியைப் பொருந்துவதால் பிறக்கும் எழுத்து
அ) ள் ஆ) ய் இ) ல் ஈ) வ் - மேல்வாயை நாக்கின் நுனி வருடுவதால் பிறக்கும் எழுத்து
அ) ர்,ழ் ஆ) ட்,ண் இ) ற்,ன் ஈ) ச்,ஞ் - மேல்வாயை நாக்கின் ஓரங்கள் தடித்துத் தடவுதலால் பிறக்கும் எழுத்து
அ) ல் ஆ) ழ் இ) ள் ஈ) ற் - மேல்வாயை நாக்கின் நுனி மிகவும் பொருந்துவதால் பிறக்கும் எழுத்து
அ) ர்,ழ் ஆ) ட்,ண் இ) ற்,ன் ஈ) ச்,ஞ் - கீழ் இதழும் மேல்வாய்ப் பல்லும் இணைவதால் பிறக்கும் எழுத்து
அ) ம் ஆ) ப் இ) ய் ஈ) வ் - ஆய்த எழுத்து பிறக்கும் இடம்
அ) மார்பு ஆ) கழுத்து இ) தலை ஈ) ழூக்கு - தமிழில் நாற்பத்திரண்டு ஓரெழுத்து ஒரு மொழிகள் உள்ளன எனக் குறிப்பி;ட்டவர்
அ) தொல்காப்பியர் ஆ) நன்னூலார்
இ) பவணந்தி முனிவர் ஈ) ஆ,இ இரண்டும் - பொருத்தமற்ற ஓரெழுத்து ஒரு மொழிக்கான பொருளினைத் தேர்ந்தெடு
அ) யா – அகலம் ஆ) மை – அஞ்சனம்
இ) பே – மேகம் ஈ) நோ – நோய் - ‘சோ’ – என்ற ஓரெழுத்து ஒரு மொழிக்கான பொருனினைத் தேர்ந்தெடு
அ)மதில் ஆ) இழிவு இ) ழூப்பு ஈ) வறுமை - ‘தூ’ – என்ற ஓரெழுத்து ஒரு மொழிக்கான பொருளைத் தேர்ந்தெடு
அ) கடவுள் ஆ) தூய்மை இ) அஞ்சனம் ஈ) வான் - பொருத்துக
- சா – இறந்து போ
- சீ – உயர்வு
- சே – இகழ்ச்சி
- தே – கடவுள்
அ) 1234 ஆ) 1324 இ) 3214 ஈ) 2143
- பொருத்துக
- நை – அன்பு
- மே – இழிவு
- மீ – முகத்தில்
- மோ – வான்
அ) 1234 ஆ) 1324 இ) 2143 ஈ) 3214
- சொற்களில் மெல்லின மெய்யெழுத்தை அடுத்து அதன் இனமாகிய _ எழுத்து வரும்.
அ) வல்லினம் ஆ) மெல்லினம்
இ) குறில் ஈ) நெடில் - இன எழுத்துகள் அற்ற சொல்லைத் தேர்ந்தெடு
அ) மங்கை ஆ) மஞ்சள்
இ) தேங்காய் ஈ) பக்கம் - இன எழுத்துகள் அற்ற சொல்லைத் தேர்ந்தெடு
அ) பச்சை ஆ) செங்கடல்
இ) பஞ்சு ஈ) தென்றல் - ‘அவை’ – எந்த வகைச் சுட்டு
அ) அண்மைச்சுட்டு ஆ) சுட்டுத்திரிபு
இ) புறச்சுட்டு ஈ) சேய்மைச்சுட்டு - சுட்டுச் சொல் அல்லாத ஒன்றைத் தேர்ந்தெடு
அ) அது ஆ) உது இ) எது ஈ) இது - மாறுபட்ட வினாச் சொல்லைத் தேர்ந்தெடு
அ) ஏன் ஆ) நீயா இ) எங்கு ஈ) யார் - வினா எழுத்து அல்லாத ஒன்றை அடையாளப்படுத்துக
அ) ஏ ஆ) ஆ இ) இ ஈ) ஒ - குற்றியலுகரம் – பிரித்து எழுதுக
அ) குறுமை + இயல் + உகரம் ஆ) குறு + இயல் + உகரம் இ) குற்று + இயல் + உகரம் ஈ) குறி + இயல் + உகரம் - முழுமையாக ஓசை குறையாமல் ஒரு மாத்திரை அளவில் வல்லின உகரங்கள் ஒலிப்பது.
அ) குற்றியலுகரம் ஆ) முற்றியலுகரம் இ) குற்றியலிகரம் ஈ) ஒற்றளபெடை - குறில் எழுத்துகளைக் குறிக்க பயன்படும் அசைச்சொல்
அ) கான் ஆ) காரம் இ) கரம் ஈ) கேனம் - முற்றியலுகரம் அல்லாதவற்றை தேர்ந்தெடு
அ) பசு ஆ) வறு இ) மாசு ஈ) மாவு - முற்றியலுகரம் அல்லாதவற்றை தேர்ந்தெடு
அ) ஏழு ஆ) அரசு இ) ஏழு ஈ) விடு - வல்லின உகரங்கள் சொல்லின் இறுதியில் வரும் போது ஒரு மாத்திரை அளவே குறைந்து ஒலிப்பது
அ) குற்றியலுகரம் ஆ) முற்றியலுகரம் இ) குற்றியலிகரம் ஈ) ஒற்றளபெடை - குற்றியலுகரம் அல்லாத சொல்லைத் தேர்ந்தெடு
அ) காசு ஆ) பந்து இ) அது ஈ) சால்பு - குற்றியலுகரத்தின் வகைகள்
அ) 3 ஆ) 4 இ) 5 ஈ) 6 - குறில், நெடில் எழுத்துகளைக் குறிக்க பயன்படும் அசைச்சொல்
அ) கரம் ஆ) கான் இ) காரம் ஈ) கேனம் - பொருத்தமற்றதைத் தேர்ந்தேடு
அ) குறில் – கரம் ஆ) குறில்,நெடில் – கான்
இ) ஆய்தம் – கேனம் ஈ) நெடில் – கான் - ஈரெழுத்துச் சொற்களாக மட்டும் அமையும் குற்றியலுகரம்
அ) ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்
ஆ) வன் தொடர்க் குற்றியலுகரம்
இ) இடைத் தொடர்க் குற்றியலுகரம்
ஈ) நெடில் தொடர்க் குற்றியலுகரம் - தனிநெடில் அல்லாத உயிர்மெய் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலிகரம்
அ) நெடில் தொடர்க் குற்றியலிகரம் ஆ) உயிர்த்தொடர்க் குற்றியலிகரம்
இ) வன்தொடர்க் குற்றியலிகரம்
ஈ) ஆய்தத்தொடர்க் குற்றியலிகரம் - இடையின மெய் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலிகரம்
அ) நெடில் தொடர்க் குற்றியலிகரம் ஆ) உயிர்த்தொடர்க் குற்றியலிகரம்
இ) இடைத்தொடர்க் குற்றியலிகரம்
ஈ) மென்தொடர்க் குற்றியலிகரம் - ங்,ஞ்,ண்,ந்,ம்,ன் ஆகிய மெய் எழுத்துகளைத் தொடர்ந்து வரும் குற்றியலிகரம்
அ) நெடில் தொடர்க் குற்றியலிகரம் ஆ) உயிர்த்தொடர்க் குற்றியலிகரம்
இ) இடைத்தொடர்க் குற்றியலிகரம்
ஈ) மென்தொடர்க் குற்றியலிகரம் - நெடில் தொடர்க் குற்றியலுகரம் எடுத்துகாட்டினைத் தேர்ந்தெடு
அ) அஃது ஆ) பாட்டு இ) பண்பு ஈ) காது - உயிர்த் தொடர்க் குற்றியலுகரம் எடுத்துகாட்டினைத் தேர்ந்தெடு
அ) ஒன்பது ஆ) எஃகு இ) பந்து ஈ) கன்று - மென் தொடர்க் குற்றியலுகரம் எடுத்துகாட்டினைத் தேர்ந்தெடு
அ) பாட்டு ஆ) மஞ்சு இ) உப்பு ஈ) எய்து - வன் தொடர்க் குற்றியலுகரம் அல்லாததைத் தேர்ந்தெடு
அ) பாக்கு ஆ) பேச்சு இ) பண்பு ஈ) பற்று - இடைத் தொடர்க் குற்றியலுகரம் அல்லாததைத் தேர்ந்தெடு
அ) எய்து ஆ) மார்பு இ) ழூழ்கு ஈ) அம்பு - எந்த எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரச் சொற்கள் இல்லை
அ) க் ஆ) ல் இ) வ் ஈ) ட் - எந்க எழுத்தை இறுதியாகக் கொண்டு முடியும் இடைத் தொடர் குற்றியலுகரச் சொற்கள் இல்லை
அ) கு ஆ) டு இ) து ஈ)பு - ஒரு மாத்திரை அளவில் இருந்து குறுகி அரை மாத்திரை அளவில் ஒலிக்கும் இகரம்
அ) குற்றியலுகரம் ஆ) குற்றியலிகரம்
இ) முற்றியருகரம் ஈ) உயிரளபெடை - கூற்றினை ஆராய்க
1) குற்றியலிகரம் தற்போது உரைநடை வழக்கில் மட்டுமே உள்ளது.
2) குற்றியலிகரம் தற்போது இலக்கியங்களில் மட்டுமே உள்ளது.
அ) 1 மட்டுமே சரி ஆ) 2 மட்டும் சரி
இ) இரண்டும் சரி ஈ) இரண்டும் தவறு - ‘கொக்கியது’ என்னும் சொல்லை பிரித்தால் வருவது
அ) கொக்கு + யாது ஆ) கொக்கி + யாது
இ) கொக் + யாது ஈ) கொக்கி + ய் +; து - கூற்றினை ஆராய்க
1) ஐகாரம் சொல்லின் முதலில் வரும் போது ஒன்றரை மாத்திரை அளவில் ஒலிக்கும்.
2) ஐகாரம் சொல்லின் இடையிலும் இறுதியிலும் வரும்போது ஒரு மாத்திரை அளவு ஒலிக்கும்.
அ) 1 மட்டும் சரி ஆ) 2 மட்டும் சரி
இ) இரண்டும் சரி ஈ) இரண்டும் தவறு - ஔகாரம் சொற்களின் முதலில் வரும் போது ஒலிக்கும் கால அளவு
அ) 2 ஆ) 1 1ஃ2 இ) 1 ஈ) 1ஃ2 - தவறான கூற்றினை ஆராய்க
1) ஐகாரம் தனித்து வரும் இடங்களில் 1 1ஃ2 மாத்திரை அளவில் ஒலிக்கிறது.
2) ஔகாரம் தனித்து வரும் இடங்களில் 2 மாத்திரை அளவில் ஒலிக்கிறது.
3) ஔகாரம் சொல்லின் இடையிலும் இறுதியிலும் வராது.
அ) 1 மட்டும் தவறு ஆ) 2 மட்டும் தவறு
இ) 3 மட்டும் தவறு ஈ) அனைத்தும் தவறு - எஃகு – என்னும் ஆய்தக் குறுக்கம் சொல்லில் , ஆய்த எழுத்தின் மாத்திரை அளவு
அ) 1 ஆ) 1ஃ2 இ) 1ஃ4 ஈ) இல்லை - முஃடீது என்னும் சொல்லில் ஆய்த எழுத்து ஒலிக்கும் கால அளவு
அ) 1 ஆ) 1ஃ2 இ) 1ஃ4 ஈ) இல்லை - மகரக் குறுக்கம் இடம் பெறாத சொல்
அ) போன்ம் ஆ) மருண்ம்
இ) பழம் விழுந்தது ஈ) பணம் கிடைத்தது - சொல்லின் முதலில் மட்டுமே இடம் பெறும் குறுக்கம்
அ) ஐகாரக் குறுக்கம் ஆ) ஔகாரக் குறுக்கம்
இ) மகரக் குறுக்கம் ஈ) ஆய்தக் குறுக்கம் - மகரக் குறுக்கம் – இடம் பெறாத சொல்லினைத் தேர்ந்தெடு
அ) வலம் வந்தான் ஆ) மருண்ம்
இ) படம் பிடித்தான் ஈ) பழம் வாங்கினான் - ‘கை’ என்னும் சொல்லில் ஐகாரக் குறுக்கம் பெறும் மாத்திரை அளவு
அ) அரை ஆ) ஒன்று
இ) ஒன்றரை ஈ) இரண்டு - ‘வௌவால்’ என்னும் சொல்லில் ஔகாரக் குறுக்கம் பெறும் மாத்திரை அளவு
அ) அரை ஆ) ஒன்று
இ) ஒன்றரை ஈ) இரண்டு - கீழ்க்காணும் சொற்களுள் குற்றியலுகரம் அல்லாத சொல்லைத் தேர்ந்தெடு
அ) சுக்கு ஆ) சார்பு இ) உண்ணு ஈ) அரசு - ஒற்றளபெடையில் அளபெடுக்கும் மெய்யெழுத்துகளின் எண்ணிக்கை
அ) 8 ஆ) 10 இ) 11 ஈ) 12 - மகர குறுக்கம் பயின்று வராத சொல்
அ) வரும் வள்ளல் ஆ) போன்ம்
இ) கேண்ம் ஈ) தரும் செல்வர் - ‘வீ’ என்ற ஓரெழுத்து ஒரு மொழி குறிக்காத பொருள்
அ) காற்று ஆ) மலர் இ) கொல் ஈ) பறவை - பொருத்துக
1) கா – பெருமை
2) கூ – செயல்
3) கை – நிலம்
4) கோ – காப்பாற்று
அ) 1324 ஆ) 4321 இ) 2341 ஈ) 3214 - எழுத்துகள் பிறக்குமிடம்
1) மென்மை – மார்பு
2) வளையல் – ழூக்கு
3) காக்கை – கழுத்து
4) கஃறீது – மார்பும் தலையும்
அ) 3214 ஆ) 2314 இ) 2341 ஈ) 4213
விடைகள்:
- விடை: அ) எழுத்து
- விடை: அ) குறில்
- விடை: ஆ) 1
- விடை: இ) 1,2,3 சரி
- விடை: இ) மெய்
- விடை: அ) 1 மட்டும் சரி
- விடை: ஈ)ஃ
- விடை: அ)க்ச்ட்த்ப்ற்
- விடை: 3 ½
- விடை: அ) 2
- விடை: இ) 3 மட்டும் தவறு
- விடை: இ) 1ம் 3ம் சரி
- விடை கண்டுபிடித்து Comment செய்யவும்
- விடை: ஆ) 1ம் 3ம் சரி
- விடை: ஆ) 22
- விடை: அ) ங
- விடை: இ) கௌதாரி
- விடை: இ) 3 மட்டும் தவறு
- விடை: ஈ) கண்ணன்
- விடை: ஈ) மூன்றும் சரி
- விடை: இ) இன எழுத்துகள்
- விடை: இ) மின்னல்
- விடை: ஆ) இ
- விடை: ஈ) இன எழுத்து இல்லை
- விடை: ஆ) வென்றான்
- விடை: இ) 1ம் 2ம் சரி
- விடை: ஈ) மயங்கொலிகள்
- விடை: ஆ) 8
- விடை: இ) ய
- விடை: ஆ) விழை – உண்டாக்குதல்
- விடை: இ) பணி – குளிர்ச்சி
- விடை: அ) 1 மட்டும் சரி
- விடை: இ) ழ
- விடை: இ) எ
- விடை: ஆ) உ
- விடை: அ) அகச்சுட்டு
- விடை: இ) உ
- விடை: ஆ) புறச்சுட்டு
- விடை: இ) இரண்டும் சரி
- விடை: அ) இம்மலை
- விடை: ஆ) 5
- விடை: ஆ) யா
- விடை: இ) ஓ
- விடை: அ) புறவினா
- விடை: அ) 1 மட்டும் சரி
- விடை: அ) 2
- விடை: ஆ) 3
- விடை: ஆ) 90
- விடை: அ) 1 மட்டும் சரி
- விடை: ஆ) நீண்டு ஒலித்தல்
- விடை: ஆ) 3
- விடை: இ) இன்னிசை அளபெடை
- விடை: அ) செய்யுளிசை அளபெடை
- விடை: இ) கெடுப்பதூஉம்
- விடை: அ) செய்யுளிசை அளபெடை
- விடை: இ) இன்னிசை அளபெடை
- விடை: ஈ) தொல்காப்பியர்
- விடை: ஆ) ஆமா
- விடை: இ) மாநாடு
- விடை: அ) தொல்காப்பியா
- விடை: இ) நன்னூலார்
- விடை: ஈ) ழூன்றும் சரி
- விடை: அ) நொ,து
- விடை: ஆ) எய்ப்பன்றி
- விடை: ஈ) ஏகலைவன்
- விடை: அ) ஏய்
- விடை: இ) கூ – ஒழுக்கம்
- விடை: அ) 4231
- விடை: ஆ) மார்பு
- விடை: ஈ) இடையின மெய் எழுத்துகள் மார்பை இடமாகக் கொண்டு பிறக்கிறது.
- விடை: ஆ) உ,ஊ
- விடை: இ) க்,ங்
- விடை: ஆ) ய்
- விடை: அ) ர்,ழ்
- விடை: இ) ள்
- விடை: இ) ற்,ன்
- விடை: ஈ) வ்
- விடை: இ) தலை
- விடை: ஈ) ஆ,இ இரண்டும்
- விடை: ஈ) நோ – நோய்
- விடை: அ)மதில்
- விடை: ஆ) தூய்மை
- விடை: ஆ) 1324
- விடை: இ) 2143
- விடை: அ) வல்லினம்
- விடை: ஈ) பக்கம்
- விடை: அ) பச்சை
- விடை: ஈ) சேய்மைச்சுட்டு
- விடை: இ) எது
- விடை: ஆ) நீயா
- விடை: இ) இ
- விடை: அ) குறுமை + இயல் + உகரம்
- விடை: ஆ) முற்றியலுகரம்
- விடை: இ) கரம்
- விடை: இ) மாசு
- விடை: ஆ) அரசு
- விடை: அ) குற்றியலுகரம்
- விடை: இ) அது
- விடை: ஈ) 6
- விடை: இ) காரம்
- விடை: ஆ) குறில்,நெடில் – கான்
- விடை: ஈ) நெடில் தொடர்க் குற்றியலுகரம்
- விடை: ஆ) உயிர்த்தொடர்க் குற்றியலிகரம்
- விடை: இ) இடைத்தொடர்க் குற்றியலிகரம்
- விடை: ஈ) மென்தொடர்க் குற்றியலிகரம்
- விடை: ஈ) காது
- விடை: அ) ஒன்பது
- விடை: ஆ) மஞ்சு
- விடை: இ) பண்பு
- விடை: ஈ) அம்பு
- விடை: இ) வ்
- விடை: ஆ) டு
- விடை: ஆ) குற்றியலிகரம்
- விடை: ஆ) 2 மட்டும் சரி
- விடை: அ) கொக்கு + யாது
- விடை: இ) இரண்டும் சரி
- விடை: ஆ) 1 ½
- விடை: அ) 1 மட்டும் தவறு
- விடை: ஆ) 1ஃ2
- விடை: இ) 1ஃ4
- விடை: ஈ) பணம் கிடைத்தது
- விடை: ஆ) ஔகாரக் குறுக்கம்
- விடை: இ) படம் பிடித்தான்
- விடை: ஈ) இரண்டு
- விடை: இ) ஒன்றரை
- விடை: இ) உண்ணு
- விடை: இ) 11
- விடை: ஈ) தரும் செல்வர்
- விடை: அ) காற்று
- விடை: ஆ) 4321
- விடை: ஆ) 2314
🌐 முக்கிய வலைதளம் மற்றும் சமூக ஊடகக் குழுக்கள்:
- 🌍 எங்களது அதிகாரப்பூர்வ வலைதளம்: Tamil Mixer Education
- 💬 WhatsApp குழு: Tamil Mixer Education WhatsApp Group
- 📢 Telegram: Jobs and Notes
- 📷 Instagram: Tamil Mixer Education Instagram
📂 பி.டி.எப் தொகுப்புகள்:
- 📄 TNPSC Notes PDF Collection: TNPSC Notes PDF
- 📘 Test Series PDF Collection: Test Series PDFs
- 🗂️ Old Question Paper PDF Collection: Old Question Papers
- 🕉️ Hindu Aranilaiyathurai Notes PDF Collection: Hindu Aranilaiyathurai Notes
- 📚 All Exam Notes: All Exam Notes
🚀 100+ தமிழ் எழுத்து இலக்கணம் வினா-விடைகள் PDF பதிவிறக்கம் செய்து, உங்கள் தேர்வு தயாரிப்பை மேம்படுத்துங்கள்!
எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்