தமிழகத்தில் பாசன நீர் ஆதாரங்களை உருவாக்கி அதன் மூலமாக விளைச்சலை அதிகப்படுத்தும் நோக்கில் ஆதிதிராவிடர் பழங்குடியின விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்தில் ஆழ்துளை அல்லது குழாய் கிணறுகள் அமைக்கும் திட்டம் அரசு சார்பாக கொண்டுவரப்பட்டது.
கடந்த நிதியாண்டில் 12கோடி செலவில் மின் மோட்டார் உடன் நுண்ணீர் பாசன வசதி அமைத்து தரப்படும் என வேளாண் துறை அறிவித்தது. தமிழக அரசு அறிமுகம் செய்த இந்த திட்டத்தின் கீழ் மாவட்ட விவசாயிகள் பயனடையுமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதன்படி நுண்ணீர் பாசன வசதி திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தை நேரில் அணுகி விண்ணப்பிக்கலாம். இந்தத் திட்டத்தில் அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட ஆழத்திற்கு அதிகமாக கிணறு அமைக்க வேண்டும் என்றால் அல்லது கூடுதல் குதிரை திறன் கொண்ட பம்பு செட்டுகளை நிறுவ வேண்டும் என்றால் கூடுதல் செலவை விவசாயிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.