ஐஏஎஸ் அதிகாரி துஷார் சுமேராவின் 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
அவனீஷ் சரண் என்ற ஐஏஎஸ் அதிகாரி, தனது நண்பரும் குஜராத்தின் பரூச் மாவட்ட கலெக்டர் துஷார் சுமேராவின் 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் 100 மதிப்பெண்களுக்கு ஆங்கிலத்தில் 35 மதிப்பெண்களும், கணிதத்தில் 36 மதிப்பெண்களும், அறிவியலில் 38 மதிப்பெண்களும் பெற்றுள்ளார். “பரூச் கலெக்டர் துஷார் சுமேரா, 10-ம் வகுப்பில் ஆங்கிலத்தில் 35, கணிதத்தில் 36, அறிவியல் பாடத்தில் 38 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருந்தார்.
भरूच के कलेक्टर तुषार सुमेरा ने अपनी दसवीं की मार्कशीट शेयर करते हुए लिखा है कि उन्हें दसवीं में सिर्फ पासिंग मार्क्स आए थे.उनके 100 में अंग्रेजी में 35, गणित में 36 और विज्ञान में 38 नंबर आए थे. ना सिर्फ पूरे गांव में बल्कि उस स्कूल में यह कहा गया कि यह कुछ नहीं कर सकते. pic.twitter.com/uzjKtcU02I
— Awanish Sharan (@AwanishSharan) June 11, 2022
அவரது கிராமத்தில் மட்டுமல்ல, பள்ளியில் உள்ளவர்களும் கூட துஷார் சுமேரா எதற்கும் தேறாதவர் என்றே நினைத்தனர். ஆனால், துஷார் சுமேரா இன்று மாவட்ட கலெக்டர்” என்று எழுதியிருந்தார். முன்னதாக, ஐஏஎஸ் அதிகாரி நிதின் சங்வான் என்பவர், தனது 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ மதிப்பெண் பட்டியலை டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
அதில், அவர் வேதியியலில் வெறும் 24 மதிப்பெண் மட்டுமே எடுத்திருந்தார். தேர்ச்சி பெறுவதற்கு 23 மதிப்பெண் எடுக்க வேண்டும். அதிர்ஷ்டவசமாக, அவர் அதை விட 1 மதிப்பெண் அதிகம் எடுத்து தேர்ச்சி பெற்றார். இது குறித்து அவர் கூறியதாவது, “என்னுடைய 12ஆம் வகுப்பு தேர்வில், நான் வேதியியலில் 24 மதிப்பெண்கள் பெற்றேன். தேர்ச்சி மதிப்பெண்ணுக்கு மேல் 1 மதிப்பெண் மட்டுமே அதிகம். ஆனால் என் வாழ்க்கையில், நான் என்ன விரும்புகிறேன் என்பதை இது தீர்மானிக்கவில்லை.
In my 12th exams, I got 24 marks in Chemistry – just 1 mark above passing marks. But that didn’t decide what I wanted from my lifeDon’t bog down kids with burden of marks
Life is much more than board results
Let results be an opportunity for introspection & not for criticism pic.twitter.com/wPNoh9A616
— Nitin Sangwan (@nitinsangwan) July 13, 2020
மதிப்பெண்களை சுமந்து கொண்டு உங்கள் குழந்தைகளை அலைக்கழிக்காதீர்கள். தேர்வு முடிவுகளை விட, வாழ்க்கை என்பது அதை தாண்டி அதிகம் உள்ளது. முடிவுகள் சுயபரிசோதனைக்கான வாய்ப்பாக இருக்கட்டும், விமர்சனத்திற்கு அல்ல” என்றார். புத்திசாலித்தனம் மற்றும் பண்பு – அதுவே உண்மையான கல்வியின் குறிக்கோள் என்று மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் கூறினார். அந்த கருத்தை இந்த சம்பவங்கள் பிரதிபலிக்கின்றன.