மத்திய அரசின் துறைகளில் புதிதாக 1.43 லட்சம் பணியிடங்கள்
மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் தாக்கல் செய்யப்பட்டது. அந்த உரையில், மத்திய அரசின் துறைகளில் புதிதாக 1.43 லட்சம் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா பரவல் காரணமாக இந்திய பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 2020-21 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
இதில் கல்வித்துறைக்கு பல புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியானது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது உரையில், மத்திய அரசின் துறைகளில் புதிதாக 1.43 லட்சம் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளார்.
அதாவது கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி, 32.71 லட்சம் ஊழியர்கள் மத்திய அரசின் துறைகளில் பணியில் இருந்தனர். இந்த ஆண்டு 1.43 லட்சம் பணியிடங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டு உள்ளதால், பணியிடங்கள் எண்ணிக்கை 34.14 லட்சமாக உயரும். இதனால் வேலைவாய்ப்பு அதிகளவில் உருவாகும்.
மத்திய அரசின் கூட்டுறவு, வேளாண், விவசாயிகள் நலத்துறை என பல்வேறு துறைகளில் 2019 மார்ச் முதல் 2021 மார்ச் மாத இடைப்பட்ட காலகட்டத்தில் 2207 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.
மேலும் மத்திய சுகாதாரத் துறையில் 4000 பணியிடங்கள், ராணுவ அமைச்சகத்தில் 12000 பணியிடங்கள், விமான போக்குவரத்து துறையில் 1058 பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டு உள்ளதாக நிதி அமைச்சர் உரையில் தெரிவித்து உள்ளார்.