
வரும் 24ல் அறிவியல் திருவிழா போட்டி விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
உடுமலையில் நடக்கும் அறிவியல் திருவிழா போட்டிகளில், பங்கேற்பதற்கான பதிவு நாளையுடன் நிறைவடைகிறது.உடுமலை கலிலியோ அறிவியல் கழகம், சுற்றுச்சூழல் சங்கம், தேஜஸ் ரோட்டரி சங்கம், கமலம் கலை அறிவியல் கல்லுாரி, மாவட்ட பள்ளிக்கல்வித்துறை இணைந்து, பிப்., 24, 25 உள்ளிட்ட இரண்டு நாட்கள் அறிவியல் திருவிழா நடத்துகிறது.இவ்விழா அந்தியூர் கமலம் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடக்கிறது.
மாணவர்களுக்கு பேச்சு, அறிவியல் வினாடிவினா, கட்டுரை, ஓவியம், அறிவியல் புதுமை படைப்புகள் கண்காட்சி உட்பட தனித்திறன் போட்டிகள் நடக்கிறது.நடப்பாண்டில் கூடுதலாக ரோபோடிக்ஸ் மற்றும் ராக்கெட் பயிற்சி பட்டறையும் இடம் பெறுகிறது.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
‘அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த புதுமைப்படைப்புகள்’ என்ற தலைப்பில் கண்காட்சியும், பேச்சுப்போட்டி 1 முதல் 5 வரை, ‘உனக்கு பிடித்த இந்திய அறிவியல் விஞ்ஞானி’, 6 முதல் 8 வரை ‘நெகிழியை தவிர்ப்போம், புவியை காப்போம்’,9,10 வகுப்புகளுக்கு ‘நமது ஊர் விஞ்ஞானி ஜி.டி நாயுடு’, மேல்நிலை வகுப்புகளுக்கு ‘உனது பார்வையில் சந்திரயானின் வெற்றி’ என்ற தலைப்புகளும், வழங்கப்பட்டுள்ளன.கட்டுரை போட்டிகளுக்கு 6 முதல் 8 வகுப்பு வரை ‘மேற்கு தொடர்ச்சி மலையின் சூழலியல்’, 9,10 வகுப்புகளுக்கு ‘ துரித உணவுகளும் துரத்தும் நோய்களும்’, பிளஸ் 1, 2 வகுப்புகளுக்கு ‘ மாறி வரும் காலநிலை மாற்றங்களும் மனித வாழ்வும்’, என்ற தலைப்புகளும் தரப்பட்டுள்ளன.ஓவியப்போட்டிகளுக்கு, துவக்கநிலைக்கு ‘உலா வரும் நிலா’, 6 முதல் 8 வகுப்புகளுக்கு ‘தண்ணீர் தண்ணீர்’, 9, 10 வகுப்புகளுக்கு ‘புவி வெப்பமாதலும் பூமியின் கேள்வியும்’, பிளஸ் 1, 2வகுப்புகளுக்கு ‘விண்வெளியில் சந்திரயான் ‘ என்ற தலைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.போட்டிகள் மற்றும் கண்காட்சியில் பங்கேற்க நாளை(23ம் தேதி) மாலை வரை பதிவு செய்யலாம்.
போட்டிகள், பயிற்சி பட்டறை குறித்தும் தகவல்கள் பெறுவதற்கு, 87782 01926, 73059 67764, 99656 44666 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

